Home Blog Page 2726

 கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு  -தீபச்செல்வன்

கன்னியா ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஈழத் தீவு முழுவதும் காணப்படும் தொல்லியல் ஆதார மூலங்கள், ஈழத் தமிழர்கள்தான் இத் தீவின் பூர்வீகக் குடிகள் என்பதை உலகத்திற்கு எடுத்துரைக்கின்றன. ஈழ மண் முழுவதிலும் துடிதுடித்துப் பறந்தபடி, மிக மிக அவசரப்பட்டு புத்தர் சிலைகளை நிறுவி, விகாரைகளை நிறுவி ஏன் பௌத்த சிங்கள மயமாக்கலில் இலங்கை அரசு ஈடுபடவேண்டும்? இத் தீவின் பூர்வீகக் குடிகள் ஈழத் தமிழர்கள் தான் என்ற வரலாற்று உண்மையை மறைக்கவே இவ்வாறு நடக்கிறதா?

வரலாறுகளை வைத்துக் கொண்டுதான் நிகழ்காலத்தை மதிப்பிடவும் வடிவமைக்கவும் வேண்டும் என்றால், ஈழம் தமிழர்களின் நாடு என்பதற்கு, ஈழத் தமிழ் மக்களிடம் ஏகப்பட்ட வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஈழத் தீவு முழுவதும் யாருடைய ஆட்சி மேற்கொள்ளப் பட்டது? என்னென்ன மூலாதாரங்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் சிங்களப் பேரினவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டும். இன மேலாதிக்கத்திற்கு எதிரான தனி நாட்டுக்கான விடுதலைப் போராட்டத்தின் போது, தமிழ் இனத்தை அழிப்பதுதான் வழியென இலங்கை அரசு கருதியதைப் போன்றே வரலாற்றில் இருந்தும் ஈழமக்களை ஒடுக்க பௌத்த சிங்கள மயமாக்கலை ஒரு உபாயமாக இலங்கை அரசு கையாளுகின்றது.

கடந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் பாரிய பௌத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் இன விகிதாசாரத்தை சிதைக்கும் – ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் மகிந்த ராஜபக்சவினால் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு நல்லாட்சி அரசு என்று பெயரிட்டுக் கொண்ட இன்றைய அரசு, காணிப் பத்திரம் வழங்கி, பாரிய பௌத்த விகாரை அமைக்கின்றது.Navatkuly 13 13  கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு  -தீபச்செல்வன்

வரலாறு முழுவதும் எந்த குடியேற்றங்களுக்கு எதிராக ஈழ மக்கள் போராடினார்களோ அந்தக் குடியேற்றமான மணலாறு குடியேற்றத்தில் பூர்வீகத் தமிழ் குளத்தற்கு சிங்களப் பெயர் சூட்டி திறந்து வைக்கிறார் இன்றைய சனாதிபதி மைத்திரிபால. திருகோணமலையின் குச்சவெளிப் பகுதியில் தமிழர்களுக்குச் சொந்தமான இடங்கள் அபகரிக்கப்பட்டு, அங்கு சிங்கள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கிறது இன்றைய அரசு. இன்னும் சற்று தள்ளி வந்து, இறுதிப் போர் நடந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலையிலும் சைவ ஆலயத்தின் வளாக நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

பன்னெடுங்காலமாக சைவ ஆலயமான பிள்ளையார் கோயில் இருந்த இடத்தை பௌத்த பிக்கு ஒருவர் ஆக்கரமித்து பாரிய விகாரையை அமைத்துள்ளார். அந்த இடத்தில் பிள்ளையாரை வழிபட முடியாதளவுக்கு பிக்குவால் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. எச்சரிக்கை விடுக்கப்படுகின்றன. ஆலயத்தில பறந்த சைவக் கொடிகளை பிடுங்கி எறிந்துள்ளார் பிக்கு. ஆயிரம் பானை வைத்து பொங்குவதற்கும் அப்பிக்குத் தடைகளை ஏற்படுத்தியதும் வாசகர்களுக்கு நினைவிருக்கும்.

வடக்கில் இத்தகைய பிரச்சினைகளின் மத்தியில்தான் கிழக்கில் கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வடக்கு கிழக்கு இளைஞர்கள் திரண்டுள்ளனர். கடந்த 16ஆம் திகதி கன்னியா மரபுரிமை அமைப்பு போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தது. கன்னியா வெந்நீரூற்று ஈழத் தமிழ் மக்களின் சமய வழிபாடுகளுடனும் பண்பாட்டுடனும் இரண்டறக் கலந்தது. வடக்கில் கீரிமலையும் கிழக்கில் கன்னியாவும் இறந்தவர்களின் ஈமச்சடங்கு வழிபாட்டுடன், பண்பாட்டுடன் தொடர்புடையது. இவ் இரு இடங்களிலும் வடக்கு கிழக்கை சேர்ந்த ஈழத் தமிழ் மக்கள் சென்று தமது சடங்குகளையும் வழிபாடுகளையும் நிறைவேற்றுகின்றனர். 107939890 c527a2d0 135d 4d41 857e dcab75b31332 1  கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு  -தீபச்செல்வன்

பண்டைய காலத்தில் ஈழத்தை ஆட்சி செய்த தமிழ் மன்னான இராவணன் ஒரு சைவ பக்தன். அவன் தன்னுடைய தாயின் மரணச் செய்தி கேட்டு, தனது வாளினை ஏழு இடங்களில் குத்தியதாகவும் அவற்றிலிருந்து சுடு நீர் கிணறுகள் தோன்றியதாகவும் பின்னர், தனது தாயின் அந்திமக் கிரியைகளை அவன் அங்குதான் மேற்கொண்டான் என்றும் இலக்கிய – இதிகாச, தொல்லியல் ஆதாரங்கள் பலவும் கூறுகின்றது. ஈழத்தின் கிழக்கில் திருக்கோணேச்சர ஆலயத்திற்கு தமிழ் சைவ சமய இலக்கிய வரலாற்றில் உள்ள முக்கியத்துவம் கன்னியா வெந்நீரூற்றுக்கும் உண்டு.

சுதந்திர சிலோனில் மாத்திரமின்றி அதற்கு முந்தைய காலத்திலும், ஈழத்தை, குறிப்பாக கிழக்கையும் அதிலும் திருகோணமலை மற்றும் அம்பாறையை சிங்கள பௌத்த மயப்படுத்துகின்ற முயற்சிகள் இடம்பெற்று வந்துள்ளன. தெற்கில் ஏராளமான இடங்களில் பௌத்த சின்னங்கள் காணப்படுகின்றன. அத்துடன் போதியளவு நிலப் பகுதிகளும் வெறுமையாக காணப்படுகின்றன. அப்படியிருக்க ஏன், வடக்கு கிழக்கில் வந்து புத்தர் சிலைகளை வைக்க வேண்டும்? ஏன் விகாரைகளை கட்ட வேண்டும்? ஏன் சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும்? மாத்தறையில் இருந்தும் அம்பாந்தோட்டையில் இருந்தும் ஏன் சிங்கள மக்களை கொண்டு வந்து குடியேற்ற வேண்டும்? நிச்சயமாக இன அழிப்புக்காகவே. அதுவே வரலாறு முழுதும் நடக்கின்றது.

இந்த நிலையில் கன்னியா வெந்நீரூற்றிலும் சிங்கள பௌத்தமயமாக்கல் திணிக்கப்படுகின்றது. சுற்றுலாப் பிரயாணிகளின் கவனத்தை ஈர்த்த இப் பகுதியில் சிங்களத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் சிங்கள பௌத்தத்தை திணிக்கும் வாசகங்களை நுழைக்கின்ற கைங்கரியங்களும் நடக்கின்றன.

நல்லாட்சி எனப்படும் நாடக ஆட்சியில் இங்கே பூர்வீக சைவ ஆலயம் ஒன்றின் அத்திவாரத்தை அழித்துவிட்டு, அங்கு பௌத்த தாது கோபுரத்தை அமைக்க சிங்கள பௌத்த தொல்லியல் திணைக்களம் முயற்சிகளை மேற்கொண்டமையே இங்கு பிரச்சினை. சனாதிபதி மைத்திரியின் பணிப்புக்கு இணங்கவே, அவரது செயலாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஆகியோரின் ஒப்புதல்களுடன் தொல்லியல் திணைக்களம் இந்த வேலையை செய்ய முடிவு செய்ததாக கூறுகின்றது. முன்னைய காலத்தில் மகிந்த ராஜபக்ச, தனது இராணுவத்தை கொண்டு செய்த சிங்கள பௌத்த மயமாக்கலை இப்போது மைத்திரிபால சிறிசேன தனது திணைக்களத்தை கொண்டு செய்வித்து வருகின்றார். தமிழ் நிலத்தில் விகாரை கட்டுவதைத்தான் இத் தொல்லியல் திணைக்களம் தமது முழு நேரப் பணியாக கொண்டுள்ளது. இதில் தமிழ் உத்தியோகத்தர்கள் இல்லை. முழுக்க முழுக்க சிங்கள மயம். அத்துடன், இருக்கும் ஒரு சிலரும் வாய் திறக்க முடியாத நிலை.img 0901  கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு  -தீபச்செல்வன்

தமிழ் மக்களின் வாக்குகளில் சனாதிபதியாக தீர்மானிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன, ஆயிரக்கணக்கான விகாரைகளை தமிழ் நிலத்திற்கு பரிசளித்து தமிழ் இனத்தை வரலாறு முழுதும் அழிக்கும் திட்டத்திற்கு ஒப்பமிட்டுள்ளார். மகிந்த ராஜபக்சவின் செயற்பாடுகளையும் விஞ்சியது இது. இப்படியான சூழலில்தான், கன்னியா ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வடக்கு கிழக்கில் வந்து பிக்கு விகாரை கட்டலாம். ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தமது உரிமைகளை பற்றி அமைதியாக பேசக்கூடாது. கோயில்களில் வழிபடக்கூடாது. அதற்குத் தடை விதிப்பதுதான் நல்லாட்சி. வடக்கு கிழக்கில் இருந்து திரண்ட இரண்டாயிரம் இளைஞர்களின் மத பண்பாட்டுணர்வை சிங்கள அரசு ஆயுத இராணுவ, காவல்துறை பலம் கொண்டு அடக்கியமை மிகப் பெரும் சனநாயக உரிமை மீறலாகும்.

கன்னியா போராட்டத்தில்கூட தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பலரைக் காணவில்லை. அத்துடன் சனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆதரவளிக்கும் நமது தலைமைகளால் இவைகளை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதும், இதனை அரச மட்டத்தில் பேசி தீர்க்க முடியவில்லை என்பதும் எமது அரசியல் பயணத்தின் தோல்வியாகும். அத்துலிய இரத்தினதேரருக்காக அரசே ஆடியது. நாடே கலங்கியது. தமிழ் சித்தர் அகத்தியார் அடிகள்மீது சுடுதண்ணீர் ஊற்றப்பட்டது. தமிழ் மக்களுக்கு எத்தகைய நிலையோ, அதுவே தமிழ் கடவுளுக்கும் மதகுருமாருக்கும். சர்வதேச ரீதியாக இலங்கையை பாதுகாப்பதிலும் இன்றைய ஆட்சியை பாதுகாப்பதிலும் எமது தலைமை காட்டும் ஒற்றுமையான அக்கறையை கன்னியா விடயத்தில் காட்டவில்லை. கன்னியா பிள்ளையாரையும் நீராவியடிப் பிள்ளையாரையும் காப்பது ஒட்டுமொத்த நிலத்தையும் இனத்தையும் காப்பதாகும்.

பிரபாகரன் இருந்திருந்தால் இப்படிச் செய்ய தைரியம் வந்திருக்குமா ? – சார்ள்ஸ் எம்.பி.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் மத குருவான தென்கயிலை ஆதீனம் மீது, சிங்களக் காடையர்களால் சுடுநீர் ஊற்றப்பட்டது போல் பௌத்த பிக்கு ஒருவருக்கு நடந்திருந்தால் இந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா என்று கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

கம்பனிகள் திருத்தச் சட்டமூல விவாதத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் .மேலும் கூறுகையில்,

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதி சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. இந்துக்களின் மத குருவான தென்கயிலை ஆதீனத்தை, பேச்சுவார்த்தை நடத்த பொலிஸார் அழைத்துச் சென்றனர். பொலிஸாரின் முன்னிலையில் அவர் மீது காடையர்கள் தேயிலைச்சாய சுடுநீரை ஊற்றினர். இது தொடர்பில் இன்றுவரை பொலிஸ் திணைக்களமோ அல்லது சம்பவ இடத்திலிருந்த பொலிஸாரோ எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. யார் தேயிலைச்சாய சுடுநீரை ஊற்றினர் என்பதும் பொலிஸாருக்கு தெரியும்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதியில் இந்துக்களின் மத குருவான தென்கயிலை ஆதீனம் மீது காடையர்களால் சுடுநீர் ஊற்றப்பட்டது போல், பௌத்த பிக்கு ஒருவருக்கு நடந்திருந்தால் நிலைமை என்னவாக இருக்கும்.. தமிழர்களுக்கு எந்த அநியாயம் செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்ற இறுமாப்பிலேயே இவ்வாறு செய்கின்றனர். பிரபாகரன் இருந்திருந்தால் இவ்வாறு சுடுநீர் ஊற்றியிருப்பார்களா?அந்த தைரியம் வந்திருக்குமா ?இந்துக்களின் மத குருவான தென்கயிலை ஆதீனம் மீது சுடுநீர் ஊற்ற நினைத்துக் கூடப்பார்த்திருப்பார்களா?

தென்கயிலை ஆதீனம் மீது சுடுநீர் ஊற்றப்பட்டது தொடர்பில் சட்டம் ,ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி வாய் திறக்கவில்லை.அவர் இவ்வாறு சுடுநீர் ஊற்றியதை ஏற்றுக்கொள்கின்றாரா?இந்த சம்பவம் தொடர்பில் சட்டம் ,ஒழுங்கு அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்கள் மத்தியில் குழப்பம் வர வேண்டும் இதனை பயன்படுத்தி வடக்கு கிழக்கில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என அரசு கருதுகிறதா? கத்தோலிக்க இந்து மக்களை பிரித்து குளிர்காயவும் முயற்சி நடைபெறுகிறது.

திருக்கேதீஸ்வர வரவேற்பு வளைவு அமைக்கும் விடயத்தில் மிக விரைவில் இணக்கப்பாடு எட்டப்படும்.

திருக்கேதீஸ்வர வரவேற்பு வளைவு அமைக்கும் விடயத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் மன்னார் ஆயருடன் நான், பேசினேன். இவ்விடயத்தில் இணக்கமான தீர்வு காணப்பட வேண்டுமென அவரிடம் கோரினேன். இந்துக்களையும் கிறிஸ்தவர்களையும் பிரித்தாள யாருக்கும் இடமளிக்க முடியாது. எனவே திருக்கேதீஸ்வர வரவேற்பு வளைவு அமைக்கும் விடயத்தில் மிக விரைவில் இணக்கப்பாடு எட்டப்படும்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதி சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டபோது அந்த இடத்துக்கு கிறிஸ்தவ மதகுருமாரும் சென்று இந்துக்களுக்கு ஆதரவு வழங்கினர். இதன்போது அங்கு நின்ற பௌத்த பிக்கு ஒருவர் ,திருக்கேதீஸ்வரத்தில் இந்துக்கள் வரவேற்பு வளைவு அமைக்கும் விடயத்தில் எதிர்ப்புக் காட்டிவிட்டு இங்கு வந்து வெளி வேஷம் போடவேண்டாமென்றார்.

இந்து-கிறிஸ்தவ மக்களை பிரித்தாளும் முயற்சிக்கு மக்கள் இடமளிக்கக்கூடாது.ஆயுத போராட்ட காலத்திலும் நாம் ஒற்றுமையாகவே செயற்பட்டோம் என்றார்.

ஜூலையின் தாக்கம் இன்றும் தொடர்கிறது – பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன்

1983ஆம் ஆண்டு கலவரத்தில் 471 பேர் கொல்லப்பட்டதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் உள்ளன. ஆனால், அதனைவிட இறப்புகள் அதிகமாகும். இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் காயப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 5ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளனர். அத்துடன், பல தமிழ் கடைகள் சூறையாடப்பட்டன. யாழ்ப்பாணம் நூலகமும் எரிக்கப்பட்டது.கறுப்பு ஜூலையின் தாக்கம் இன்றும் தொடர்கிறது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கருத்தை வெளியிட்டார்.

1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சியை கைப்பற்றியதும் 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பை கொண்டுவந்தார். தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிராகரித்தே அந்த அரசியலமைப்புக் கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்தே எமது நாட்டில் இன முரண்பாடுகள் ஆரம்பமானது.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து ஜனாதிபதி எடுத்திருந்த நடவடிக்கைகளால், சில நாட்களிலே பாதுகாப்புத் துறையின் பங்களிப்புடன் அனைத்து விடயங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

ஆனால், அன்று ஜே.ஆர். அதனைச் செய்யவில்லை. இங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு குண்டர்களை அனுப்பி வன்முறைகளை நாடுமுழுவது தோற்றுவித்தனர். 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையின் பின்னர்தான் ஜே.வி.பிஆயுதம் தூக்கியது.

 1988,1989களில் இதனால் பாரிய அழிவுகளை சந்தித்தோம். 1989ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் என்ன நடந்ததென அனைவருக்கும் நினைவிருக்கும். வாக்குப் பெட்டிகளும் அன்று சூறையாடப்பட்டிருந்தன. அதனால் நாடு யுத்தத்தை நோக்கி நகர்ந்தது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அரசுக்கு முண்டுகொடுத்துவிட்டு இந்தியாவிடம் கையேந்துவது வெட்கக்கேடானது – பிரபா

ஐக்கிய தேசிய கட்சியுடன் உறவாடிவிட்டு அவர்களை காப்பாற்றுவதற்கு முன்நின்றுவிட்டு இன்று இந்து மதத்தை காப்பாற்றுவதற்கு இந்தியாவை நாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அறிக்கைவிடுவது கேவலமான விடயமாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

அதேபோல் நான் மதிக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ஐ.தே.க அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என்று கூறியிருப்பது அவர்களது கையாலாகாத்தனத்தையும் அரசியல் நாடகத்தை ஆரம்பித்திருப்பதையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் உறவாடிவிட்டு மூன்று முறை அவர்களை ஆபத்தான கண்டத்தில் இருந்து காப்பாற்றிவிட்டு அதற்கு பிரதிபலனாக எதையும் பெற்றுக் கொள்ளாமல் இன்று எமது இந்து மதத்தை காப்பாற்றுவதற்கு இந்தியாவிடம் கையேந்தி நிற்பதனையும் அது போல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவது சம்பந்தமாக எதிர்ப்பு நிலவரத்தை கையிலெடுத்துக் கொண்டு தேர்தல் வருவதை முன்நின்று மக்களை ஏமாற்றுவதற்கு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கையாகவே நானும் எனது வன்னி மாவட்ட மக்களும் பார்க்கின்றோம்.

அது மட்டுமல்ல கிழக்கு மாகாணத்திலும் கூட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கண்ணை மூடிக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்து விட்டு இப்பொழுது மீள்பரிசீலனை செய்வதாக அறிக்கை விட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தேர்தல் நாடகம் ஆடுவதாக மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். இவ்வாறான கபட நாடகம் எதிர்வரும் தேர்தலில் எடுபடாது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இவர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கே ஆதரவு வழங்கப்போகின்றார்கள். இருப்பினும் ஆதரவு வழங்குவதற்கான நிபந்தனையாகவும் அரசாங்கத்தின் ஊடாக தமது வரப்பிரசாதங்களை உறுதி செய்வதற்காகவே இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை திசைதிருப்ப முற்படுகின்றார்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தூக்கிய கைகளை கீழே இறக்குவதற்கு முன் இவ்வாறன அறிக்கை விடுவது வேடிக்கையாக இருக்கின்றது.

ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் பாராளுமன்ற தேர்தல் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அறிக்கை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பேசி நடாத்தும் நாடகமாகும்.

கம்பெரலிய திட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட தொகை எவ்வளவு? என்பதனை இவர்கள் மக்கள் முன் வைக்க வேண்டும். நிதி ஒதுக்கீட்டின் ஊடாக இவர்கள் பெற்றுக் கொண்ட கமிஷன் பற்றியகசிந்து வரும் உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். யுத்தத்திற்குப் பின் தொடர்ச்சியாக மக்களை ஏமாற்றி வரும் வடகிழக்கு சார்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் முகத்திரை களையப்பட வேண்டும். எதிர்காலத்தில் யாருடைய ஆட்சி ஏற்பட்டாலும் கூட அதில் நாம் பங்காளியாக இருப்போம்.

அதனூடாக நான் வன்னி மாவட்ட மக்களின் தேவையினை செய்து முடிப்பேன். வெறும் அரசியல் இலாபத்திற்காகவோ இவர்களைப் போன்று சொந்த இலாபத்திற்காகவோ சோரம் போகத் தயாராக இல்லை. மாறாக நேர்மையான 24 மணி நேர மக்கள் சந்திப்பினை ஏற்படுத்தி அவர்களுக்கான முன்னெடுப்புகளை செய்து முடிப்பேன் என உறுதியளிக்கின்றேன் எனவும் பிரபா கணேசன் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்­கு­தல்கல் நடத்­த திட்டம் வகுக்­கப்­பட்­டது – ஷானி அபே­சே­கர 

உயிர்த்த ஞாயிறு  தினத்தில் 25 தாக்­கு­தல்களை நடத்­த திட்டம் வகுக்­கப்­பட்­டது. எனினும் புல­னாய்வு தக­வல்கள் மூல­மாக அவை முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளன.

தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் குண்­டு­தா­ரி­யொ­ருவர் 2, 3 தட­வைகள் குண்டை வெடிக்க வைப்­ப­தற்­காக முயற்­சிப்­பது தொடர்­பான  சீ.சீ.ரீ.வி வீடியோ பதி­வுகள் இருக்­கின்­றன. அந்த குண்டு தொழி­ல்நுட்ப கோளாறு கார­ண­மாக வெடிக்­காது போயி­ருக்­கலாம். அதன்­பின்னர் அந்த நபர் தெஹி­வ­ளையில் ஹோட்டல் அறைக்குள் அந்த கோளாறை பரி­சோ­திக்க முயற்­சித்த போது அது வெடித்­தி­ருக்­கலாம் என குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு பணிப்­பாளர் ஷானி அபே­சே­கர  நேற்று பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன் சாட்­சி­ய­ம­ளித்தார்.

சம்­பவ தினத்­தன்று தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் முக்­கி­யஸ்தர் யாரேனும் இருந்­த­தாக தாங்கள் அறி­ய­வில்­லை­யெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளிக்­கையில்;

2018 டிசம்பர் மாதத்தில் மாவ­னெல்­லையில் புத்தர் சிலைகள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. இது தொடர்­பாக நாங்கள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்தோம். இந்த சம்­பவம் தொடர்­பாக 2 பேர் தொடர்­பான தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இவர்கள் தொடர்­பாக தேடிச் செல்லும்போது  தொலை­பேசி இலக்­கங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு தக­வல்­களை பெற்­றுக்­கொள்ளக் கூடி­ய­தாக இருந்­தது. அந்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு  குறுஞ்­செய்தி ஒன்று வந்­தது.  அது  சாஹீட் என்­ப­வரால் அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­படி அவரின் விலா­சத்தை தேடி சென்று அவரை கண்டு பிடிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

1138503673 உயிர்த்த ஞாயிறு தினத்தில் 25 தாக்­கு­தல்கல் நடத்­த திட்டம் வகுக்­கப்­பட்­டது - ஷானி அபே­சே­கர 

இதன்­போது 4 பேரை கைது செய்ய முடி­யு­மாக இருந்­த­துடன் பெரு­ம­ளவு பொருட்­க­ளையும் மீட்டோம். 105 கிலோ வெடி பொருட்­க­ளையும், வெடிக்க வைக்கும் கரு­விகள் உள்­ளிட்­ட­வையும் மீட்­கப்­பட்­டன. இவர்­க­ளிடம் விசா­ரணை நடத்தும் போது சஹ்ரான் என்­பவர் தொடர்­பு­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

இந்­நி­லையில் சஹ்­ரானை தேடி பல பிர­தே­சங்­களில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். அத்­துடன் குறித்த பொருட்­களை கொண்டு செல்ல உத­விய வாக­னத்­தையும் மீட்­டெ­டுத்தோம். சஹ்ரான் தொடர்­பாக பல இடங்­க­ளுக்கு சென்று சாட்­சி­யங்­களை பதிவு செய்து வந்தோம். நாங்கள் அனே­க­மாக தொலை­பேசி இலக்­கங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு விசா­ரணை நடத்­திய போதும் அவர்கள் தீரிமா என்ற செய­லியை   பயன்­ப­டுத்­தி­யதால் தக­வல்­களை பெற்­றுக்­கொள்ள முடி­யாது இருந்­தது. என்­றாலும் இவர்கள் வெளி­நாட்­டுக்கு செல்ல முடி­யாது மாவ­னெல்லை நீதி­மன்­றத்­தினால் தடை­யுத்­த­ர­வையும் பெற்­றுக்­கொண்டோம்.

கைது செய்­யப்­பட்ட 4 பேரில் இரு­வரை அந்த சம்­ப­வத்­துடன் தொடர்பு  இல்­லா­மை­யினால்   விடு­விக்க நட­வ­டிக்­கை­யெ­டுத்தோம். நன்­றாக தேடிப்­பார்த்தே அவர்­களை விடு­விக்க நட­வ­டிக்­கை­யெ­டுத்தோம். அவர்­க­ளுக்கு விலா­சத்தை மாற்ற முடி­யாது, ஒவ்­வொரு மாதமும் சீ.ஐ.டி.யில் கையெ­ழுத்­திட வேண்டும் என்ற நிபந்­த­னை­க­ளு­ட­னேயே அவர்கள் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தனர். எவ்­வா­றா­யினும் இவ்­வா­றாக விடு­விக்­கப்­பட்­ட­வர்­களில் இரு­வரே சங்­ரில்லா ஹோட்­டலில் குண்டை வெடிக்க வைத்­த­தாக தெரி­விக்­கின்­றனர். ஆனால் அவர்கள் அல்ல.

காரணம்     குண்டு வெடிப்பு சம்­ப­வத்தின் பின்னர் சீ.ஐ.டி.யில் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.  கடந்த மாதங்­க­ளிலும் அவர்கள் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர். இந்த மாத இறு­தி­யிலும் அவர்கள் சீ.ஐ.டி.யில் கையெ­ழுத்­தி­டுவர். அவர்கள் தொடர்­பாக போது­மான சாட்­சிகள் இல்­லா­மை­யினால் நிபந்­த­னை­க­ளு­டன்தான்  அவர்கள் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதே­வேளை குண்டு வெடிப்பு சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய சக­லரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். மேலும் சிலர்  உயி­ரி­ழந்­துள்­ளனர். இது தொடர்­பாக 80 வீதம் விசா­ரணை நட­வ­டிக்­கைகள் முடி­வ­டைந்­துள்­ளன. சஹ்­ரானின் குழுவில் பலர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மற்­றை­ய­வர்கள் எங்­களின் கைதில் இருக்­கின்­றனர். 69 பேர் சீ.ஐ.டியில் கைதா­கி­யி­ருக்­கின்­றனர்.  பல்­வேறு திட்­டங்­களை அவர்கள் மேற்­கொண்­டி­ருந்­தனர். ஆனால் வனாத்­து­வில்லு  சம்­ப­வத்தின் பின்னர் அவர்­களின் திட்­டங்கள் குழம்­பி­யுள்­ளன.

இந்த அமைப்பில் சஹ்­ரானின்  குழு­வினர் இறந்­தனர்.  இன்னும் சிலர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். வவு­ண­தீவு கொலை சம்­ப­வத்தில் முழு­மை­யாக இது புலி­களின் செயல் என்றே புல­னாய்வு துறை உள்­ளிட்ட சகல துறை­யி­னரும் கூறி­னார்கள். மாவ­ ெனல்­லயில் துப்­பாக்­கி­சூடு நடத்­தி­ய­வர்­களும் இவர்கள் என்­பது பின்னர் கண்­ட­றி­யப்­பட்­டது. வெளி­நாட்டில் இருந்து கைது செய்­யப்­பட்ட நபர்கள் மூல­மாக பல பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டன. வெடி­பொருள் உள்­ளிட்ட ஆயு­தங்கள் அதி­க­மா­னவை கண்­ட­றி­யப்­பட்­டன. இது கண்­ட­றி­யாதிருந்தி­ருந்தால் 25 குண்டுகள் வெடித்­தி­ருக்கும்

இர­சா­யான பகுப்­பாய்வு மூலம் அமோ­னியம் நைற்­றேற்று என்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. யூரி­யா­வுடன் நைற்றேற் கலக்­கப்­பட்­டுள்­ளது. அது இங்­கேயே செய்­யப்­பட்­டுள்­ளது. வெளி­நாட்­டி­லி­ருந்து கொண்டு வரப்­பட்­டவை அல்ல. நாங்கள் தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் சீ.சீ.ரீ.வி. படங்­களை பார்த்தோம். அதில் குறித்த நபர்  இரண்டு மூன்று தட­வைகள்  முயற்­சிக்­கின்றார். பின்னர் வெடிக்­க­வில்லை. பின்னர் அந்த குண்­டுடன் பள்­ளிக்கு செல்­கின்றார்.

பின்­னரே தெஹி­வளை பகு­தியில் அது வெடிக்­கின்­றது. எவ்­வா­றா­யினும் தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் அது வெடிக்­காது போன­மைக்கு கார­ணங்கள் இருக்­கலாம். அதா­வது தொழில்­நுட்ப ரீதியில் பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டி­ருந்­த­மை­யினால் அது வெடிக்­காது போயி­ருக்­கலாம்.  பின்னர்  அவர் தெஹி­வ­ளையில் ஹோட்டல் அறையில் அந்த கோளாறு தொடர்­பாக ஆராய போகும் போதே அது வெடித்துள்ளது.

 

ஆனால் கூறப்படுவதை போன்று தாஜ்சமுத்திரா ஹோட்டலில் விசேட பிரபு இருந்ததாக தெரியாது. உண்மையில் என்ன நடந்தது என்பதனை ஆராய வேறு வழியில்லை. ஆனால் அவர் வெடிக்க வைக்க முயற்சித்தமை வீடியோவில் உறுதியாகியுள்ளது.

இந்த விடயத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பாக எங்கள்  மீது சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எங்களுக்கு மருத்துவ விடயங்கள் தொடர்பாக தெரியாது. எவ்வாறாயினும் 143 முறைப்பாடுகளே  பிள்ளைகள் இல்லையென தெரிவித்துள்ளன. ஆனபோதும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆராயாது எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.

 

 

இஸ்லாமிய மாநாட்டை நடத்த அனுமதிக்கக்கூடாது: ஞானசாரர் எச்சரிக்கை

இஸ்லாமிய மாநாட்டை சிறீலங்காவில் நடத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் அதனை நிறுத்த வேண்டும் எனவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் வண. கலகொட அத்த ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார். சவுதிக்கு வேண்டியவாறு இந்த நாடு செயற்படத் தேவையில்லை. சவுதியின் செல்வாக்குக்கு உட்பட்டு இந்த நாடு இவ்வாறான தீர்மானத்தை எடுப்பதையிட்டு நாம் வெட்கப்பட வேண்டும் எனவும் தேரர் கூறினார்.

முஸ்லிம்களின் வாக்குகளுக்கு ஆசைப்பட்டு செயற்பட வேண்டாம் என இந்த நாட்டின் அரசியல் தலைவர்களிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் தேரர் மேலும் கூறினார். இம்மாநாட்டை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் கடந்த 14 ஆம் திகதி கண்டி தலதா மாளிகைக்குச் சென்று அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து தெளிவுபடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

 

சிங்கள அரசின் ஆளுநர் மூலம் ஐ.நா அதிகாரிக்கு தமிழர்களின் பிரச்சனைகளை மறைக்க முயற்சி

சிறிலங்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சுதந்திர உரிமைக்கான ஐ.நா. சமாதான சபையின் விசேட பிரதிநிதி கிளெமென்ற் நயாலெட்சோசிவூல் ஆளுநர் சுரேன் ராகவனை கொழும்பில் சந்தித்தார்.

வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில்  மாகாணத்தின்  அபிவிருத்தி, பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது  தொடர்பாக விளக்கமளித்தார்.

காணியற்ற மக்களுக்கு காணிகளையும், குடிநீர் மற்றும் விவசாயத்திற்குத் தேவையான நீரினையும் வழங்குவது தொடர்பாகவும், வடமராட்சி களப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், வடமாணத்தில் கூட்டுறவு வங்கி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாகவும் ஆளுநர் விளக்கமளித்தார்.

ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்ப் பொது மக்களின் காணிகளை மீட்கும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது குறித்தும் ஆளுநர் விளக்கமளித்தார்.

சிறீலங்காவில் மக்கள் ஒன்று கூடுவதற்கு சுதந்திரம் உள்ளதா என அறிவதற்காக சென்ற ஐ.நா அதிகாரிக்கு சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் தமிழ் மக்களுக்கு வழங்கும் நிகழ்வை காண்பித்து சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை மறைக்கும் முயற்சியில் சிங்கள அரசின் ஆளுநர் ஈடுபட்டுள்ளார்.

கீரிமலை தீர்த்தக்கேணியின் இன்றைய நிலை

யாழ். கீரிமலைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ஒரு இடமாகும். அந்த வகையில், கீரிமலைக் கேணி, கீரிமலைக் கடல், அங்குள்ள பண்டய கட்டிடங்கள் மற்றும் சிற்பங்கள்,நகுலேஸ்வர் கோயில், அங்குள்ள விலங்குகள் பராமரிப்பு இடம் என்பன சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்ப்பவையாவும்.

இறந்தவர்களுக்கான பிதிர்க்கடன்களை தீர்ப்பதற்காக கீரிமலைக் கடலும், தீர்த்தக் கேணியும் இதுவரை பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவர்கள் மாத்திரமன்றி அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இத் தீர்த்தக் கேணி அசுத்தமடைந்து காட்சியளிக்கின்றது.

கடல் வற்றுக் காலமாக இருக்கும் தற்போது, குப்பைகள், பாசிகளை அகற்றி, அதனைப் பராமரிப்போர் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. இதற்கென பராமரிப்பாளர்கள் பணியில் இருக்கும் போதும், இந்தக் கேணி பராமரிப்பின்றி இருப்பதானது மக்களை கவலை கொள்ள வைக்கின்றது. இது தொடர்பாக உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாவற்குழியில் பௌத்த விகாரை திறப்பு திருவாசக அரண்மனை உடைப்பு – தொடரும் இன அழிப்பு

நாவற்குழி பௌத்த விகாரைக்கு அண்மையிலுள்ள பிரசித்தி பெற்ற திருவாசக அரண்மனையின் ஒரு பகுதியை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த பெறுமதியான ஐம்பொன் விநாயகர் சிலையைத் திருடிச் சென்றுள்ளனர். இன்று (24.07) அதிகாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரிவித்த சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், இச்சிலை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது என்றும், ஐம்பொன்னாலானது என்றும் குறிப்பிட்டார். காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருவாசக அரண்மனையின் ஓராண்டு நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. அச்சமயம் அருகிலுள்ள பௌத்த விகாரையில் பெரும் எடுப்பிலான நிகழ்வுகள் நடைபெற்றன.

நாவற்குழி பகுதியில் இந்து ஆலயங்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதன் பின்னணியில் நாவற்குழி விகாராதிபதி இருக்கலாமெனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

சிறீலங்காவில் இடம்பெற்ற சம்பவத்திற்கு ஜேர்மனியில் தண்டனை- தமிழருக்கு மட்டும் தான் இந்த நீதியா?

சிறீலங்கா முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மரணம் தொடர்பில் ஜேர்மன் அரசு மேற்கொண்ட விசாரணைகளில் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜி. நவநீதன் என்ற ஈழத்தமிழர் ஒருவருக்கு எதிராக தாம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளதாக ஜேர்மன் நீதித்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட நவநீதனுக்கு எதிராக பயங்கரவாத இயக்கத்தில் உறுப்பினராக இருந்தது தொடர்பிலும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

2002 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த அவர் கதிர்காமர் தொடர்பில் புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாகவும், இறுதிப் போரின் போது விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் களமுனையில் இருந்து தப்பிச் செல்வதற்கு உதவியதாகவும் ஜேர்மன் அரசு தெரிவித்துள்ளது.

பெருமளவான தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா படைகளுடன் நல்லுறவை வளர்த்துவரும் ஜேர்மன் அரசு போரில் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடிய தமிழ் மக்கள் மீது தனது வெறுப்பைக் காண்பிப்பது தமிழ் மக்களிடம் மேற்குலகத்தின் இரட்டை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவித்தள்ளனர்.