செய்திகள்
இன்று பாக்குநீரிணையினை நீந்திக்கடந்து சாதனை படைத்தார் ஈழத்தமிழன் மதுஷிகன்
இன்றைய தினம் பாக்குநீரிணையினை நீந்தி கடந்து மட்டக்களப்பு மண்ணிற்கு மட்டுமல்ல ஈழத்தமிழருக்கும் பெருமைசேர்த்தார் T.மதுஷிகன்.
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுரியின் பழைய மாணவரான இவர் இச் சாதனையினை புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது...
பிரித்தானியாவுக்கு வரும் மாணவர்கள் மீது அதிக கட்டுப்பாடுகள்
பிரித்தானியாவுக்கு கல்வி கற்பதற்கு வரும் ஐரோப்பியர்கள் அல்லாத மாணவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களை அழைத்துவருவதை பிரித்தானியா அரசு கடந்த செவ்வாய்க்கிழமை (23) முதல் தடை செய்துள்ளது.
கடந்த வருடம் பிரித்தானியாவுக்குள் மேலதிகமாக குடிபெயர்ந்தவர்களின் எண்ணிக்கை...
இந்தோனேசியாவில் பெண் அகதிகளாக இருப்பதில் உள்ள சவால்கள்
போர் மேகம் சூழ்ந்த தாய்நாட்டை விட இந்தோனேசியா ஒரு ஆறுதலான தற்காலிக தங்குமிடமாக இருக்கும் என பெண் அகதிகள் நம்பியிருந்தனர். ஆனால், பாலின அடிப்படையிலான வன்முறை அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு தடையாக...
இலங்கைக்கு முதலாவது சர்வதேச பயணத்தை ஆரம்பிக்கும் இந்திய கப்பல்
இந்தியாவின் Cordelia என்ற பயணிகள் கப்பல், ஜூன் மாத தொடக்கத்தில் இலங்கைக்கான தனது முதலாவது சர்வதேச பயணத்திற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் தற்போது உள்நாட்டு இடங்களுக்கு இயக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்த கப்பல் கோர்டேலியா...
நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு ஓமானில் பணிபுரியும் இலங்கைப் பெண்கள் கோரிக்கை
ஓமானிலுள்ள இலங்கைத்தூதரகம் முன்பாக சுமார் இருவாரகாலமாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இலங்கைப்பணிப்பெண்கள் உள்ளிட்ட 72 பேர் அந்நாட்டுப் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கும் நிலையில், விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாட்டுக்குத் திருப்பியனுப் பிவைக்கப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள்...
யாழில் இடம்பெற்ற ‘மலையகம் 200’ நிகழ்வு
மலையக மக்களது இலங்கை வருகையின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கிராமிய உழைப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வானது இன்று (27) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.
கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் இன்பநாயகம்...
உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் இலங்கை
2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் பட்டியலில் இலங்கைக்கு 11ஆவது இடம் கிடைத்துள்ளது.
https://twitter.com/steve_hanke/status/1660299659791958016?s=20
இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில்...
சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் -சர்வதேச அமைப்பொன்று கோரிக்கை
இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பிரிட்டன் தடைவிதிக்கவேண்டும் என கோரும் மனுவிற்கு ஆதரவாக கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையை சர்வதேச அமைப்பொன்று ஆரம்பித்துள்ளது.
இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் வழக்கு தொடருதலுக்கான சர்வதேச நிலையம் என்ற...
இலக்கு இதழ்-236-மே 27, 2023 | Weekly ePaper 236
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
இலக்கு இதழ்-236-மே 27, 2023 | Weekly ePaper 236
இலக்கு இதழ்-236-மே 27, 2023 | Weekly ePaper 236
இலக்கு இதழ்-236-மே...
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துகின்றது-சர்வதேச மன்னிப்புச்சபை கவலை
பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக தொடர்ச்சியாக உறுதியளித்துள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களையும் இலங்கை...
உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்
2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார்.
இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன்,...
இந்தியத் தூதுவருடன் கிழக்கு ஆளுநர் சந்திப்பு
இந்தியாவின் உதவித்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கையிலுள்ள இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மற்றும் பிரதி உயர்ஸ்தானிகர் ஜேக்கப் ஆகியோருடன்...
195 நாடுகளை 4 நிமிடங்களில் அடையாளம் காட்டி 5 வயது சிறுவன் உலக சாதனை
உலக வரைபடத்தில் உள்ள 195 நாடுகளின் அமைவிடங்களை அடையாளம் காட்டியவாறு அவற்றின் பெயர்களையும் அவற்றின் தலை நகரங்களையும் 4 நிமிடங்கள் 16 நொடிகளுக்குள் கூறி கலாநேசன் ஹர்சித் என்ற 5 வயது சிறுவன்...
குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் கையடக்க தொலைபேசி, டெப் உள்ளிட்ட இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
குறித்த வயது பிரிவுடைய குழந்தைகள் இலத்திரனியல் திரைகளை பார்வையிடுவதன் பாதிப்பு...
இலங்கையில் இருந்து மேலும் மூவர் தமிழகத்தில் தஞ்சம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த, ஒரே குடும்பத்தின் மூவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
படகு மூலம் தலைமன்னார் வழியாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரையை இவர்கள் சென்றடைந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தஞ்சமடைந்துள்ள மூவரும் மண்டபம்...
மரணத்தில் பூத்த மலையகம் – மலையக மக்களின் 200 ஆண்டுகால வரலாற்றை குறிக்கும் நிகழ்வு நாளை யாழில்
மலையக மக்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் மரணத்தில் பூத்த மலையகம் எனும் மலையக மக்களின் 200 வருடங்களை குறிக்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை 27 ம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ்வீரசிங்க...
சீனாவில் பரவும் புதியவகை கொரோனா-அச்சத்தில் உலக நாடுகள்
சீனாவில், ஓமிக்ரான் துணை வகை XBB வைரஸ் மூலம் மீண்டும் கொரோனா விரைவாகப் பரவி வருவதாக அந்நாட்டு ஊடங்கங்கள் தெரிவித்துள்ளன.
இந்தப் புதியவகை கொரோனா அலை, ஜூன் மாத இறுதிக்குள் சீனாவில் உச்சம் தொடும்...
இலங்கையில் சில மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு
இலங்கையில் மருந்துத் தட்டுப்பாடு அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக எச்சரிக்கை மணி அடித்தாலும், அரசாங்கம் இவ்விடயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதாக இலங்கையின் முன்னணி மருத்துவ சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.
அரச மருத்துவமனைகளில் சில மருந்துகளுக்கு கடுமையான...
இலங்கை,வியட்நாம் இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானில் வியட்நாமின் பிரதிப் பிரதமர் டிரான் லூ குவாங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் வலுவான கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...