நாவற்குழியில் பௌத்த விகாரை திறப்பு திருவாசக அரண்மனை உடைப்பு – தொடரும் இன அழிப்பு

நாவற்குழி பௌத்த விகாரைக்கு அண்மையிலுள்ள பிரசித்தி பெற்ற திருவாசக அரண்மனையின் ஒரு பகுதியை உடைத்து உள்நுழைந்த திருடர்கள், அங்கு பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த பெறுமதியான ஐம்பொன் விநாயகர் சிலையைத் திருடிச் சென்றுள்ளனர். இன்று (24.07) அதிகாலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் பற்றி தெரிவித்த சிவபூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், இச்சிலை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது என்றும், ஐம்பொன்னாலானது என்றும் குறிப்பிட்டார். காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருவாசக அரண்மனையின் ஓராண்டு நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. அச்சமயம் அருகிலுள்ள பௌத்த விகாரையில் பெரும் எடுப்பிலான நிகழ்வுகள் நடைபெற்றன.

நாவற்குழி பகுதியில் இந்து ஆலயங்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இதன் பின்னணியில் நாவற்குழி விகாராதிபதி இருக்கலாமெனவும் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.