கீரிமலை தீர்த்தக்கேணியின் இன்றைய நிலை

யாழ். கீரிமலைப் பகுதி சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் ஒரு இடமாகும். அந்த வகையில், கீரிமலைக் கேணி, கீரிமலைக் கடல், அங்குள்ள பண்டய கட்டிடங்கள் மற்றும் சிற்பங்கள்,நகுலேஸ்வர் கோயில், அங்குள்ள விலங்குகள் பராமரிப்பு இடம் என்பன சுற்றுலா பயணிகளை மிகவும் ஈர்ப்பவையாவும்.

இறந்தவர்களுக்கான பிதிர்க்கடன்களை தீர்ப்பதற்காக கீரிமலைக் கடலும், தீர்த்தக் கேணியும் இதுவரை பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவர்கள் மாத்திரமன்றி அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் இத் தீர்த்தக் கேணி அசுத்தமடைந்து காட்சியளிக்கின்றது.

கடல் வற்றுக் காலமாக இருக்கும் தற்போது, குப்பைகள், பாசிகளை அகற்றி, அதனைப் பராமரிப்போர் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. இதற்கென பராமரிப்பாளர்கள் பணியில் இருக்கும் போதும், இந்தக் கேணி பராமரிப்பின்றி இருப்பதானது மக்களை கவலை கொள்ள வைக்கின்றது. இது தொடர்பாக உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.