Home Blog Page 2795

இனவழிப்பை சந்தித்த நாம் பூச்சியத்திலேயே உள்ளோம் – கிரிசாந்தன்

தாயகத்தில் தமிழினம் பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்டது. அந்த இனத்தின் மீது போர் என்ற போர்வையில் திட்டமிட்ட இன அழிப்பு அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்த இன அழிப்பின் கொடூரங்கள், வடுக்கள் இன்றும் சமூகத்திலிருக்கின்றன. நாம் அவலத்தின் பின்னர் எதனையும் சாதிக்கவில்லை. நீதியைப் பெறுவதிலிருந்து அனைத்திலும் கேள்விக்குறியாகிய நிலையில் தான் இருக்கின்றோம் என யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் இராஜர ட்ணம் கிரிசாந்தன் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு வார இதழுக்கு வழங்கிய கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஆகவே முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது வெறுமனே உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. எமது இனத்தின் விடுதலைக்கான பயணத்துடன் தொடர்பு பட்டதொன்றாகும். இரண்டாம் உலகப் போரில் சொல்லொணா அவலங்களுக்கு முகங்கொடுத்து இனவழிப்புக்குள்ளான யூத இனம் தனது இனவிடுதலைக்கான பயணத்தில் தன்னுடைய அவலங்களை, அனுபவங்களை சந்ததி சந்ததியாக கடத்தி வந்தது.

ஆகவே பரம்பரியத்தினைக் கொண்ட நாமும் எமது சந்ததிக்கு விடுதலை வேட்கையை உணரச் செய்யவேண்டியது தலையாக கடமையாகின்றது. ஆகவே இனவழிப்புக்கு முகங்கொடுத்து விட்டோம் என்றோ நீதி கிடைக்கவில்லை என்றோ நொந்துபோகாது எமது இலக்கை எமது சந்ததிக்கு உணர்த்தும் வகையில் ஆவணங்களை, காட்சிப்படுத்தல்களை, அனுபவப்பகிர்வுகளை முறையாக அமைத்துக்கொள்ள வேண்டும்.

எமது விடுதலைப்போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் நாம் முகங்கொடுத்த அனைத்தையும் எமது அடுத்த சந்ததிக்கு உணரவைக்கும் முகமான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்.

கடந்த பத்தாண்டுகளில் நாம் எதனையும் செய்யவில்லை. கிடைத்த வாய்ப்புக்களையும் தமிழ்த் தலைமைகள் சரியாக பயன்படுத்தியிருக்க வில்லை.

ஆகவே பத்தாண்டுகளாகின்ற இந்த நினைவேந்தலிலாவது, எமது இனவிடுதலைக்கான வேட்கையை அடுத்த சந்ததிக்கு பாய்ச்சும் அறிவுசார்ந்த நடவடிக்கையை முறையாக முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைவரும் திடசங்கல்பம் கொள்ளவேண்டும்.

முஸ்லீம் தீவிரவாதிகளின் வங்கிக் கணக்குகள் 134 மில்லியன் ரூபாய்களுடன் முடக்கம்

சிறீலங்காவில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தேசிய தௌகீத் ஜமாத் இயக்கத்தின் வங்கிக் கணக்குகளை தாம் முடக்கியுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் நேற்று (24) தெரிவித்துள்ளனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் 41 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், அதில் 134 மில்லியன் ரூபாய்கள் இருந்தது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவை தவிர சந்தேக நபர்கள் வசம் இருந்து மேலும் 14 மில்லியன் ரூபாய்களையும் கவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்களின் 7 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானுடன் நெருங்கிய தொடர்புடைய கொரவப்பொத்தானை பகுதி பிரதேச செயலக அபிவிருத்தி உதவி அதிகாரி உட்பட ஐந்து பேரை தாம் கைது செய்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் நேற்று (24) தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அரபுக் கல்லூரி ஆசிரியரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

போயிங் 737 MAX மீண்டும் பயன்பாட்டிற்கு வருகிறது?

ஐந்து மாதங்களில் இரண்டு விபத்துக்களைச் சந்தித்த  போயிங் 737 MAX விமானங்கள், மொத்தம் 346 உயிர்களை காவு வாங்கியது.

முதல் விபத்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் லயன் எயர் (Lion Air) சேவைக்குச் சொந்தமான விமானம் ஜாவா கடலில் விழுந்ததில் 189பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர் ஐந்து மாதங்களில் எத்தியோப்பியாவில் எத்தியோப்பிய எயர்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான 737 MAX 8 விமானம் தரையில் மோதி 157பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, உலகின் பல்வேறு நாடுகளும் இந்த விமானங்களை பறக்க தடை விதித்தன. இந்த விபத்திற்கு அந்த வகை விமானங்களில் இருந்த MCAS மென்பொருளும் கோளாறான சென்சர் ஒன்றும் தான் காரணமாக இருக்க வேண்டும் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது  குறித்த சர்ச்சை கடந்த 6 மாதங்களாக ஏழுந்து வரும் இந்நிலையில், இந்த விமானத்திற்குரிய மென்பொருட்கள் மீள தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த MCAS மென்பொருளுடன் 207 விமானங்கள் 360 மணி நேரங்களுக்குச் சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளதாகவும், அடுத்ததாக அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) சான்றிதழுக்காக இவற்றை அனுப்பும்  என்றும் போயிங் தெரிவித்த போதும், இதுவரை எதுவும் வரவில்லை என FAA தெரிவிக்கிறது.

இருப்பினும், அமெரிக்கன் ஏயர்லைன்ஸ், சவுத்வெஸ்ட் எயர்லைன்ஸ் போன்ற விமான சேவைகள் இவற்றிற்கு அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் ஆகஸ்ட் மாதம் இந்த விமானங்களை பயன்படுத்தும் சேவைக்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் 36 நாடுகளைச் சேர்ந்த 38,000 விமானிகளைப் பரிந்துரைக்கும் ECA (European Cockpit Association) அமைப்பு இது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறது.

ஐரோப்பிய விமானிகளைப் பொறுத்த வரையில் இந்த முன்னேற்றங்கள் ஒரு வகையில் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. FAA மற்றும் போயிங் இந்த விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாமா என்று பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. ஆனால், விமானத்தின் வடிவமைப்பில் இருக்கும் சவாலான விடயங்கள் குறித்து இன்னும் பேசப்படவில்லை என்று கூறிய அந்த அமைப்பு FAAஇன் சோதனையை நம்பாமல் ஐரோப்பிய யுனியனும் தன்னிச்சையாகச் சோதனை செய்து அனுமதி வழங்க வேண்டும் என நிர்ப்பந்தித்துள்ளது.

ஏற்கனவே இந்த சர்ச்சைகளால் போயிங் மேல் மட்டுமல்லாமல் ஒழுங்கு முறை ஆணையமான FAA பெயரும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாகப் பேசி முடிவெடுக்க, உலகெங்கும் இருக்கும் விமான ஒழுங்கு முறை  ஆணையங்களும் அடுத்த வாரம் டெக்சாஸில் சந்திக்கவுள்ளன.

பொருளாதார நெருக்கடி – பயண எச்சரிக்கையை நீக்கக் கோருகின்றது சிறீலங்கா

சிறீலங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான பயண ஆலோசனைகளை மீளாய்வு செய்யுமாறு இராஜதந்திரிகளிடம் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (24) கேட்டுக் கொண்டார்.

இராஜதந்திரிகளுடனான  ஒரு சந்திப்பொன்றில் பேசிய பிரதம மந்திரி, மக்களின் வாழ்வாதாரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டிருப்பதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் புனித ஞாயிறு தாக்குதல்களின் விசாரணையின் முன்னேற்றம் பற்றி பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் வெளியுறவுத் தூதர்களிடம் கூறும் போது, நாட்டில் தீவிரவாத சம்பவங்களை தூண்டிவிடுவோர் மீது சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என கூறியதாக பிரதமர் அலுவலகம் தனது செய்தியாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மந்திரி ருவன் விஜேவர்தன, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளியுறவு விவகார செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க மற்றும் டி.ஐ.ஜி அஜித் ரோஹன ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதனிடையே கடந்த மாதம் சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து. அனைத்துலக நாடுகள் தமது மக்களை சிறீலங்காவுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தன. இந்த பயண எச்சரிக்கையானது சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. சுற்றுலாப்பயணத்துறையும் அதனுடன் இணைந்தத விமானப்போக்குவரத்து மற்றும் ஆடம்பர விடுதிகளின் வருமானம் என்பன கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதுடன் தென்னிலங்கை மக்கள் வேலை வாய்ப்புக்களையும் இழந்து வருகின்றனர்.

பௌத்த மதகுருவின் விடுதலை – பாதுகாப்பு கேட்கிறார் காணாமல் போன ஊடகவியலாளரின் மனைவி

காணாமல் போன பத்திரிகையாளரான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட சிறீலங்கா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

நேற்று மாலை கலாகொட அத்தீ ஞானசார தேரர் விடுதலையானதையடுத்து, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (மே 24) கடிதத்தை அனுப்பி வைத்தார்.   தேரரை விடுவித்ததானது, தனது பிள்ளைகளுக்கும் தனக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை ஆதரிக்கும் துறவிகள் அவரை அவதூறு செய்ததோடு சிறையில் இருந்தபோதும் அவரைக் கடுமையாக விமர்சித்ததாக திருமதி எக்னெலிகொட விளக்கினார்.

இதனிடையே சிறீலங்கா அரசின் பேரினவாத மற்றும் மதக் கொள்கைகள் தீவிரம்பெற்றுவருவது சிறுபான்மை இன மக்களிடமும் அச்சத்தை தோற்றுவித்தள்ளது.

இது முதுகெலும்பற்ற அரசாங்கம் – பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்

முஸ்லீம் வைத்தியர் ஒருவர் 4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை செய்ததாக ஒரு சிங்கள பத்திரிகையை மேற்கோள் காட்டி பரபரப்பாக செய்திகள் வெளியிடப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும்கட்சி உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ,

ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு இனரீதியான மோதல்களைத் தூண்டும் வகையில் பல ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இந்த வகையில் 4000 சிங்களப்பெண்களுக்கு கருத்தடை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியில் எந்தவித உண்மையுமில்லை.

இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடும் தீவிரவாத ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாக முதுகெலும்பு அற்ற அரசாங்கமாக இது காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.Screen Shot 2019 05 23 at 1.58.56 PM இது முதுகெலும்பற்ற அரசாங்கம் - பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர்

‘அமெரிக்க தலிபான்’ ஜோன் வோக்கர் 17 ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து விடுதலை.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பில் இணைந்து செயற்பட்ட
அமெரிக்கரான லின்ட் தனது 20 வயதில் கைதுசெய்யப்பட்டார்.
ஆப்கானில் இருந்து அமெரிக்கா கொண்டுவரப்பட்ட அவருக்கு நீதிமன்றம் 20 ஆண்டுகால சிறைத்தண்டனையை வழங்கியிருந்தது.இவர் ‘அமெரிக்க தலிபான்’ என்றே அழைக்கப்பட்டார்.d53709add25947ac8cf4942b6655d642 18 'அமெரிக்க தலிபான்' ஜோன் வோக்கர் 17 ஆண்டுகளின் பின் சிறையில் இருந்து விடுதலை.

கத்தோலிக்க மதத்திலிருந்து இஸ்லாத்துக்கு மதம் மாறிய இவர் இஸ்லாத்தைக் கற்றுக்கொள்வதற்காக சவூதி அரேபியாவுக்கு ம் பாகிஸ்தானுக்கும் பயணம் செய்தார். பின்னர் ஆப்கானில் தாலிபான்களுடன் இணைந்துகொண்டார். 20 வயதில் சிறைக்கு சென்ற அவர் தந்து 38 வயதில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரின் நன்னடத்தை காரணமாக முன்கூட்டியே விடுவிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

பிரித்தானிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவிப்பு

பிரித்தானிய பிரதமர் பதவிவிலகுவதாக சற்று முன் அறிவித்துள்ளார். அத்துடன் தான் கன்சவேற்றிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து வரும் ஜூன் 7 திகதி விலகுவதாகவும் தெரிவித்தார். கடந்த மூன்று வருடங்களாக அவர் பிரதமராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகியுள்ள தெரீசா மே, புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில், ஜூன் 7ம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதாக கூறியுள்ளார்.

2016ம் ஆண்டு பிரிட்டன் மக்களிடம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவை செயல்படுத்துவதற்கு “தான் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக” டவுணிங் ஸ்டீட் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான உணர்ச்சிகரமான அறிவிப்பில் தெரீசா மே கூறியுள்ளார்.பிரெக்ஸிட்டை அமுலாக்க முடியவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனால், நாட்டின் சிறந்த நலன்களை பேணும் வகையில் புதிய பிரதமர் இருப்பார் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

 

கொழும்பிலிருந்து 50,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கம்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடிசைவாழ் குடும்பங்களை அகற்றி, வேறிடத்தில் குடியமர்த்துவதன் மூலம் 400 ஏக்கர் காணியைப் பெற்று பொது மற்றும் வர்த்தக தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதால், இவர்களை வெளியேற்றும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாளிகாவத்தை புகையிரத திணைக்கள காணி, கெட்டராமா அப்பிள்வாட், புளுமென்டல் மற்றும் இரத்மலானை நீர்ப்பாசனத் திணைக்களக் காணிகளில் குடியிருக்கும் குடும்பங்களே இத்திட்டத்தின் கீழ் வெளியேற்றப்படவுள்ள குடும்பங்களாகும்.

குடும்பங்களை அகற்ற 170 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்து, பெருநகர, மேற்கு அபிவிருத்திஅமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

 

 

அல் ஜசீரா பத்திரிகையாளர் மஹ்முத் ஹுசைன் விடுவிக்கப்படுகிறார்

இரண்டுவருடங்களுக்கு மேலாக எகிப்திய அரசால் விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அல் ஜசீரா பத்திரிகையாளர் மஹ்முத் ஹுசைனை விடுதலைசெய்யுமாறு எகிப்திய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆயினு அவர் எப்போது விடுவிக்கப்படுவார் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதுபற்றி கருத்துத் தெரிவித்த ஹுசைனின் வழக்கறிஞர் ‘ஒருசில நாட்களில் விடுதலை இடம்பெறலாம் என்கிறார்.

எகிப்த்திய அரசுக்கெதிராக குழப்பங்களை ஏற்றப்படுத்தும்,அதனைத் தூண்டும் வகையிலான செய்திகளை வெளியிட்டதாக கூறி 2016 இல் அவர் கைதுசெய்யப்பட்டார். எனினும் அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சட்டுத் தொடர்பாக விசாரணை ஏதும் நடைபேயாமல் 880 நாட்களுக்கு மேல் அவர் சிறைவைக்கப்பட்டுள்ளார். சிறையில் மோசமாக நடத்தப்பட்ட அவரின் கையொன்றும் முறிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல் காரணங்களுக்காக எகிப்தில் குற்றச்சாட்டு இன்றி குறைந்தபட்சம் 20,000 பேர் வரை தடுத்து வைக்க்கப்பட்டுள்ளனர் என மனிதவுரிமை அமைப்புகள் எகிப்திய அரசுமீது குற்றம் சாட்டுகின்றன.