முஸ்லீம் தீவிரவாதிகளின் வங்கிக் கணக்குகள் 134 மில்லியன் ரூபாய்களுடன் முடக்கம்

சிறீலங்காவில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தேசிய தௌகீத் ஜமாத் இயக்கத்தின் வங்கிக் கணக்குகளை தாம் முடக்கியுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் நேற்று (24) தெரிவித்துள்ளனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் 41 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாகவும், அதில் 134 மில்லியன் ரூபாய்கள் இருந்தது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவை தவிர சந்தேக நபர்கள் வசம் இருந்து மேலும் 14 மில்லியன் ரூபாய்களையும் கவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகநபர்களின் 7 பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானுடன் நெருங்கிய தொடர்புடைய கொரவப்பொத்தானை பகுதி பிரதேச செயலக அபிவிருத்தி உதவி அதிகாரி உட்பட ஐந்து பேரை தாம் கைது செய்துள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் நேற்று (24) தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் அரபுக் கல்லூரி ஆசிரியரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.