கொழும்பிலிருந்து 50,000 குடும்பங்களை வெளியேற்றும் அரசாங்கம்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடிசைவாழ் குடும்பங்களை அகற்றி, வேறிடத்தில் குடியமர்த்துவதன் மூலம் 400 ஏக்கர் காணியைப் பெற்று பொது மற்றும் வர்த்தக தேவைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதால், இவர்களை வெளியேற்றும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மாளிகாவத்தை புகையிரத திணைக்கள காணி, கெட்டராமா அப்பிள்வாட், புளுமென்டல் மற்றும் இரத்மலானை நீர்ப்பாசனத் திணைக்களக் காணிகளில் குடியிருக்கும் குடும்பங்களே இத்திட்டத்தின் கீழ் வெளியேற்றப்படவுள்ள குடும்பங்களாகும்.

குடும்பங்களை அகற்ற 170 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 மில்லியன் ரூபா பெறுமதியான வீடு வழங்கப்படும் எனவும் தெரிவித்து, பெருநகர, மேற்கு அபிவிருத்திஅமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.