பௌத்த மதகுருவின் விடுதலை – பாதுகாப்பு கேட்கிறார் காணாமல் போன ஊடகவியலாளரின் மனைவி

காணாமல் போன பத்திரிகையாளரான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட சிறீலங்கா பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

நேற்று மாலை கலாகொட அத்தீ ஞானசார தேரர் விடுதலையானதையடுத்து, பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று வெள்ளிக்கிழமை (மே 24) கடிதத்தை அனுப்பி வைத்தார்.   தேரரை விடுவித்ததானது, தனது பிள்ளைகளுக்கும் தனக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை ஆதரிக்கும் துறவிகள் அவரை அவதூறு செய்ததோடு சிறையில் இருந்தபோதும் அவரைக் கடுமையாக விமர்சித்ததாக திருமதி எக்னெலிகொட விளக்கினார்.

இதனிடையே சிறீலங்கா அரசின் பேரினவாத மற்றும் மதக் கொள்கைகள் தீவிரம்பெற்றுவருவது சிறுபான்மை இன மக்களிடமும் அச்சத்தை தோற்றுவித்தள்ளது.