லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சாட்சியமளிக்க வேண்டும் என முன்னிலை சோசலிசக் கட்சி கல்வி செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்துள்ளார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ஷ நிகழ்நிலை ஊடாக சாட்சியமளிப்பதற்கான நடைமுறை தொடர்பில் எதிர்வரும் 19 ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



