நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுவரையில் 1200 கைதிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளித்த அவர், நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் போதைப்பொருள் குற்றத்தின் விளைவாக ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன் போதைப்பொருள் வலைப்பின்னலுடன் தொடர்புடைய தரப்பினருக்கும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பினருக்கும் இடையிலான முரண்பாடு இவ்வாறு மோதலாக உருவெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான சுற்றிவளைப்பில் இதுவரை 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் பலருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான உண்மை விரைவில் வெளிப்படுத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



