Home Blog Page 2710

“பேரழிவிற்கான மாற்றம்” – தேர்தல் வெற்றிக்கான குறும் படம் வெளியீடு

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் நாடு எதிர்கொண்ட நெருக்கடிகளை அடிப்படையாக வைத்து பொது ஜன பெரமுன அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தொகுத்த ஆவணப் படம் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

30 நிமிடமே கொண்ட இந்த ஆவணப் படம் ஈஸ்டர் தாக்குதல்கள், ஜெனீவா தீர்மானங்கள், ஜனாதிபதி பிரதமர் முரண்பாடு, மத்திய வங்கி நிதி மோசடி மற்றும் மின்சார நெருக்கடி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

கடந்த வாரம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இறுவெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆவணப்படம் “பேரழிவுக்கான மாற்றம்” என்ற தலைப்பில் உள்ளது. இது பொதுஜன பெரமுனவின் அமைப்பானர் பசில் ராஜபக்ஸவின் வழிகாட்டலின் கீழ் தொகுக்கப்பட்டது. மேலும் இது 11.08 அன்றைய கட்சி மாநாட்டில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறீலங்கா தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ்ற்குள் ஊடுருவல் – தாக்குதல் அச்சத்தில் மக்கள்

சிறீலங்கா மூஸ்லீம் தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதால் அங்கு தாக்குதல் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஸ்ரெற்ஸ் ரைம்ஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவில் இருந்து இரண்டு தீவிரவாதிகள் பிலிப்பைன்ஸ் இற்குள் ஊடுருவியுள்ளனர். அவர்கள் அங்குள்ள தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து குண்டுகளைத் தயாரித்து தேவாலையங்கள் உட்பட இலகுவான இலக்குகளை தாக்கலாம்.

மனிலா அனைத்துலக விமான நிலையத்தின் தகவல்களின் படி மார்க் கெவின் சம்கூன் மற்றும் விக்ரோரியா சோபியா டொமிங்கோ ஆகியவர்களே நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனர்.

இவர்கள் தற்கொலைதாரிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். சிறீலங்கா தேசிய தௌகீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த இவர்களில் சம்கூனின் தயார் டுபாயில் பணியாற்றி வருகின்றார்.

இந்த அமைப்பு சிறீலங்காவில் மேற்கொண்ட தாக்குதலில் 250 மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. டோமின்கோ குண்டு தயாரிப்பதில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர். அவர் பிலிப்பைன்ஸ் மற்றும் சிறிலங்கா கடவுச்சீட்டுக்களை வைத்துள்ளார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிக்கு சிங்கள பௌத்த வாக்குகளே முக்கியம் ; என்னை நியமித்தல் அதனைப்பெறுவேன் – தயா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியில் இந்த நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறக் கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம் என அக்கட்சியின் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

என்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதாயின் அந்தப் பொறுப்பை ஏற்று, சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றி பெறுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.

அதற்காக என்னை நியமிக்க முன்னர் நான்தான் 2020 இல் ஜனாதிபதி என நாடு முழுவதும் போஸ்டர் அடித்து திரிவதற்கு எனக்கு தலையில் ஏதும் நோய்கள் இல்லையெனவும் அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மை அல்லாத நாட்டில் ஹலால் சட்டமா? – திலங்க சுமதிபால

சமய விடயமொன்றுக்காக அரச தரநிர்ணய சான்றிதழ் வழங்குவதற்கு இந்த நாட்டில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், 90 வீதம் முஸ்லிமல்லாதவர்கள் வாழும் இந்த நாட்டில் அவ்வாறு செய்வதனால், பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்திலுள்ள அரச தரநிர்ண நிறுவனத்துக்கு ஹலால் கொள்கையை சட்டமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எழுத்து மூலம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹலால் விநியோகத்துக்கு  சட்டமொன்றை உருவாக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலகில்  முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் எந்த நாட்டிலாவது ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை அரச மயப்படுத்தப்பட்டுள்ளதா? என கேட்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற அடிப்படைவாத கருத்துக்களையும் பிரேரணைகளையும் கொண்டு வந்து அவற்றை, அரசியல் ரீதியில் நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். அரசியலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக இவற்றை நிறைவேற்றிக் கொடுத்தால், தேவையற்ற பிரச்சினைகள் இந்த நாட்டில் தோன்றும்.

இந்த நாட்டில் சஹ்ரான் அடிக்கும் வரை புர்காவைத் தடை செய்ய காத்திருக்க வேண்டிய ஒரு நிலைமை காணப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால இதனை தலையிட்டு சட்டமியற்றினார். அவருக்கு அதற்கான புன்னியம் கிடைக்கட்டும்.

இந்த நடவடிக்கையைப் போன்ற ஒன்றைத் தான் ஹலால் ஊடாக செய்யப் போகின்றார். இதற்கு எதிராக பாரிய ஆர்பாட்டங்கள் வெடித்து, மக்கள் கோபமடைந்து, பின்னர் இந்த ஹலால் முத்திரையுள்ள எந்தவொரு பொருளையும் வாக்கக் கூடாது என்ற நிலைக்கு வந்துவிடும். இதனையடுத்து மக்கள் பதற்றமடைய ஆரம்பிக்கும்.

இதனால், தயவு செய்து இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியில் இடமளித்து, தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனைக் கூறினார்.

யுத்தக் காலத்தில் உதவிய நாட்டுக்கு எதிராக ஏன் கூச்சலிடுகின்றீர்கள் – லக்ஷமன் கிரியெல்ல

அமெரிக்கா கடந்த யுத்தக் காலத்தில் எமக்கு வழங்கக் கூடிய உதவிகளை வழங்கியது. அத்துடன் எமது பொருட்களை அதிகமாக அமெரிக்காவே வாங்குகின்றது. இவ்வாறான நாட்டுக்கு எதிராக ஏன் கூச்சலிடுகின்றீர்கள் என சபை முதல்வர் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அமெரிக்காவுடான ‘அக்ஸா’ ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக்கொடுப்பதாயின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே நாட்டை முதலில் காட்டிக் கொடுத்துள்ளார்

கடந்த 100 வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவுடன் இலங்கை பல்வேறு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. 2007ஆம் ஆண்டே முதன் முதலில் அக்ஸா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்ஷ இதில் கைச்சாத்திட்டிருந்தார். அக்ஸா ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தமாயின் கோட்டாபய ராஜபக்ஷவே முதலில் நாட்டைக் காட்டிக்கொடுத்துள்ளார் எனவும் கூறினார்.

அமெரிக்காவுடன் செய்யப்படவிருக்கும் ஒப்பந்தங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டார்.

2007ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் காலத்துக்குத் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கே எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவும் இலங்கையும் ஆங்கிலேயேர் காலத்திலிருந்து ஒப்பந்தங்களை செய்துள்ளன. கிட்டத்தட்ட 100 வருடங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு விடயங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இந்நிலையில் எக்சா உடன்படிக்கையானது கோட்டாபய ராஜபக்ஷவினாலேயே கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது உங்களில் யாராவது அது பற்றி கதைத்தீர்களா? அதனை எதிர்த்தீர்களா? இல்லையே. அமெரிக்க பிரஜைகள் இருவரே அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அக்ஸா உடன்படிக்கை நாட்டை காட்டிக்கொடுப்பது என்றால் கோட்டாபய ராஜபக்ஷவும் காட்டிக்கொடுப்பையே செய்துள்ளார். தவறு என்றால் அதனை அரச துரோக செயலாகவே கூறவேண்டும். இவர்கள் ஆரம்பித்த விடயங்களின் படி அந்த ஒப்பந்தத்தை தொடர வேண்டியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தினால் நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படுமாக இருந்தால் அது தொடர்பாக சட்டமா அதிபருக்கு அனுப்பி ஆலோசனைகளை பெற்றுக்கொள்வோம். இதன்படி இந்த ஒப்பந்தத்தில் நாட்டுக்கு பாதிப்பான விடயங்கள் எதுவும் கிடையாது.

அமெரிக்கா கடந்த யுத்தக் காலத்தில் எமக்கு வழங்கக் கூடிய உதவிகளை வழங்கியது. அத்துடன் எமது பொருட்களை அதிகமாக அமெரிக்காவே வாங்குகின்றது. இவ்வாறான நாட்டுக்கு எதிராக ஏன் கூச்சலிடுகின்றீர்கள்.

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது கையெழுத்திட்ட சோபா ஒப்பந்தத்தில் அமெரிக்க பிரஜையொருவர் இங்கு குற்றமிழைத்தால் அந்நாட்டு சட்டப்படியே நடவடிக்கையெடுக்க முடியுமாக இருந்தது. கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்திடும் போதே நாடு காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் அவ்வாறு காட்டிக்கொடுக்கவில்லை. இதனால் இந்த ஒப்பந்தத்தை நீடிக்க தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காகச் சென்ற ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் வடமாகாணத்தின் ஆளுநராக சிறீங்கா அரசினால் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

சிறீலங்கா அரசின் முன்னைய வேண்டுகோளுக்கு இணங்க தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்குச் சென்ற ஐவர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் பல விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்து வருகின்றனர்.

றிக்காடோ செலரி, கான்ஸ் வெபர், டிமிற்றா லோனோ, பவல்ஜெர்சக் மற்றும் லான் மில்லர் ஆகியவர்கள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியக் குழுவே சிறீலங்கா சென்றுள்ளது.

இதனிடையே, சிறீலங்காவின் பொரும்பான்மை சிங்கள இனத்திற்கான இந்த தேர்தலில் தமிழ் மக்களை பலவந்தமாக தள்ளி தனக்கு தேவையான அனுகூலத்தை பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயன்றுவருவதையே வடக்கு மாகாண ஆளுநருடனான அதன் சந்திப்பு காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

யாழில் கொப்பேக்கடுவவிற்கு அஞ்சலி

யாழ். அராலித்துறையில் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த முன்னாள் வடபிராந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் டென்சில் கொப்பேக்கடுவவின் 27ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு 09.08 அன்று அராலியில் நடைபெறுகின்றது.

அராலியில் அமைக்கப்பட்டுள்ள கொப்பேக்கடுவ நினைவுத்தூபியில், யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தலைமையில் இந் நிகழ்வு நடைபெறுகின்றது.

இந்த அஞ்சலி நிகழ்வில் 52ஆவது படையணி தளபதியும், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் மேஜர் ஜெனரல் விமல விஜேரத்ன, றியர் அட்மிரல் மொஹான் ஜயகம, கேணல் எச்.பி.ஸ்டீபன், கேணல் வை.என்.பலிபான, கேணல் ஜி.எச்.ஆரியரத்ன, லெப்.கேணல். நளின் டி அல்விஸ், லெப்.கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்.கொமாண்டர் சி.பி.விஜேபுர ஆகியோரும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்

காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் வாக்காளர் பதிவேட்டிலிருந்து 25ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் யாழ். மாவட்டத்திற்கான பாராளுமன்ற ஆசனங்கள் 5ஆக குறைக்கப்படும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் உள்ள 21 கிராம அலுவலர் பிரிவுகளின் வாக்காளர்களை, வெளிநாடுகளில் இருந்தாலும் உறவினர்கள் மூலமாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசங்கள் கடந்த காலங்களில் மீளாய்வு செய்யப்படவில்லை. இந்த ஆண்டும் மீளாய்விற்குட்படுத்த வேண்டாம் என தேர்தல்கள் ஆணையகம் யாழ்.மாவட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இருந்தாலும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்கள் உறவினர்கள் மூலம் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணையகம் அறிவுறுத்தியுள்ளது.

சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் இந்தப் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

1987ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளில் வாக்காளர் பட்டியல் மீளாய்வு செய்யப்படவில்லை. எனவே அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பதிவு செய்யத் தவறும் பட்சத்தில், யாழ். தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 25 ஆயிரத்தால் குறைவடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறியப்படுகின்றது.

நகுலேஸ்வரம் (J/226), காங்கேசன்துறை(J/233), காங்கேசன்துறை மத்தி(J/234), காங்கேசன்துறை தெற்கு(J/235), கட்டுவன்(238), தென்மயிலை(J/240), வறுத்தலைவிளான்(J/241), குரும்பசிட்டி(J/242), குரும்பசிட்டி கிழக்கு(J/243), வசாவிளான் கிழக்கு(J/244), வசாவிளான் மேற்கு(J/245), மயிலிட்டி வடக்கு(J/246), தையிட்டி வடக்கு(J/249), தையிட்டி மேற்கு(J/250), மயிலிட்டித்துறை வடக்கு(J/251), பலாலி தெற்கு(252), பலாலி கிழக்கு(J/253), பலாலி வடக்கு(J/254), ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் பகுதியாக விடுவிக்கப்படவில்லை.

மயிலிட்டி தெற்கு (J/248), பலாலி வடமேற்கு (J/255), பலாலி மேற்கு (J/256) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.

இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எங்கு வசித்தாலும் சிறப்பு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான விண்ணப்ப படிவங்கள் கிராம அலுவலர் பணியகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிப்பவர்கள் இங்குள்ள தமது உறவினர்கள் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

பதிவுகளை மேற்கொள்ளத் தவறுமிடத்து, இங்குள்ள வாக்காளர் பதிவுகளில் வாக்காளர் தொகை குறைந்து செல்லுமாயின், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது யாழ். மாவட்டத்திற்காக 5 ஆசனங்களே ஒதுக்கப்படும். இதை கவனத்தில் கொண்டு விரைவில் முடிவெடுக்கும்படி புலம் பெயர் மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை – பசில்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றியீட்டும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கு முடிவுக்கு வரும். இந்த முடிவுகளில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர் என சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் 08.08 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெற்றுக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கில் அவர்களைத் தவிர்ந்த பல கட்சிகள் எம்முடன் உள்ளன. அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தமக்கு அவசியமில்லை என்றும்  அவர் மேலும் கூறினார்.

 

 

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவு நிகழ்வு

கின்னஸ் சாதனை படைத்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆழிக்குமரன் ஆனந்தன் ஞாபகார்த்தமாக சர்வதேச வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஆனந்தன் நீச்சல் தடாகம் 09.08 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. சிறிலங்கா நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்தத் தடாகத்தை வைபவ ரீதியாக  திறந்து வைக்கவுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீரவின் கோரிக்கைக்கு அமைவாக ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவு சர்வதேச நீச்சல் தடாகத்தை வல்வெட்டித்துறையில் அமைக்க ரூபா 78 மில்லியன் ஒதுக்கப்பட்டு, இந்தத் தடாகம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.