“பேரழிவிற்கான மாற்றம்” – தேர்தல் வெற்றிக்கான குறும் படம் வெளியீடு

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் நாடு எதிர்கொண்ட நெருக்கடிகளை அடிப்படையாக வைத்து பொது ஜன பெரமுன அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ தொகுத்த ஆவணப் படம் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

30 நிமிடமே கொண்ட இந்த ஆவணப் படம் ஈஸ்டர் தாக்குதல்கள், ஜெனீவா தீர்மானங்கள், ஜனாதிபதி பிரதமர் முரண்பாடு, மத்திய வங்கி நிதி மோசடி மற்றும் மின்சார நெருக்கடி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

கடந்த வாரம் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இறுவெட்டுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆவணப்படம் “பேரழிவுக்கான மாற்றம்” என்ற தலைப்பில் உள்ளது. இது பொதுஜன பெரமுனவின் அமைப்பானர் பசில் ராஜபக்ஸவின் வழிகாட்டலின் கீழ் தொகுக்கப்பட்டது. மேலும் இது 11.08 அன்றைய கட்சி மாநாட்டில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.