உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரியுன் அரபு மொழி கற்ற புலனாய்வு அதிகாரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியாகிய தற்கொலைதாரி ஜமால்தீன் என்பவர், முஸ்லிம் தீவிரவாதிகளை விசாரிக்கும் கியூ பிரிவில் பணியாற்றிய புலனாய்வு அதிகாரி ஒருவருடன் இணைந்து அரபு மொழியை கற்றதாக அறிய முடிகின்றது

அத்துடன் தாக்குதலுக்கு முன்னதாக குறித்த புலனாய்வு அதிகாரி குருநாகலில் உள்ள சஹ்ரான் மனைவி வசித்த வீட்டிற்கு சென்று வந்தமை தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 26 அன்று காத்தான்குடி சாய்ந்தமருது பகுதியில் ஒரு வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்த இரண்டு பெண்கள், குறித்த புலனாய்வு அதிகாரி சென்ற குருநாகல் வீட்டில் வசித்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

விசாரணையில் ஈடுபட்ட குறித்த புலனாய்வு அதிகாரி தன்னுடன் அரபு மொழி கற்ற தற்கொலைக் குண்டுதாரியின் நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்கவில்லை என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.