தமிழ் மக்களின் வாக்குகளை குறிவைக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காகச் சென்ற ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் வடமாகாணத்தின் ஆளுநராக சிறீங்கா அரசினால் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவனை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

சிறீலங்கா அரசின் முன்னைய வேண்டுகோளுக்கு இணங்க தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்குச் சென்ற ஐவர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் பல விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்து வருகின்றனர்.

றிக்காடோ செலரி, கான்ஸ் வெபர், டிமிற்றா லோனோ, பவல்ஜெர்சக் மற்றும் லான் மில்லர் ஆகியவர்கள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியக் குழுவே சிறீலங்கா சென்றுள்ளது.

இதனிடையே, சிறீலங்காவின் பொரும்பான்மை சிங்கள இனத்திற்கான இந்த தேர்தலில் தமிழ் மக்களை பலவந்தமாக தள்ளி தனக்கு தேவையான அனுகூலத்தை பெறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயன்றுவருவதையே வடக்கு மாகாண ஆளுநருடனான அதன் சந்திப்பு காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.