வெற்றிக்கு சிங்கள பௌத்த வாக்குகளே முக்கியம் ; என்னை நியமித்தல் அதனைப்பெறுவேன் – தயா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியில் இந்த நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறக் கூடிய ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தாலேயே ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம் என அக்கட்சியின் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

என்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதாயின் அந்தப் பொறுப்பை ஏற்று, சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றி பெறுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.

அதற்காக என்னை நியமிக்க முன்னர் நான்தான் 2020 இல் ஜனாதிபதி என நாடு முழுவதும் போஸ்டர் அடித்து திரிவதற்கு எனக்கு தலையில் ஏதும் நோய்கள் இல்லையெனவும் அவர் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.