கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் பிரித்தானியாவின் ரூட்டிங் பகுதியில் வசிப்பவரான சுந்தரலிங்கம் மெய்யழகன் (45) இன்று (29) லண்டன் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
கொரோனா வைரசின் தொற்றுதலுக்கு உட்பட்டு சிகிச்சை பலனளிக்காததால் நோர்வேயில் வசிப்பவரும், தமிழ் நோர்வே உதவி அமைப்பின் உறுப்பினருமான வேலுப்பிள்ளை சிவபாலன் இன்று (29) ஒஸ்லோ மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு பேரிடர்கால நிவாரண உதவிகள் அளிப்பது குறித்து எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதது மிகுந்த வேதனையளிப்பதாக நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் அடிப்படை வசதிகள் இன்றி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஈழத் தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தமிழகத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஈழச் சொந்தங்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 110 அகதிகள் முகாம்களில் சுமார் 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 68,600இற்கும் மேற்பட்டவர்களும், முகாம்களுக்கு வெளியே சுமார் 35,000இற்கும் மேற்பட்டவர்களும் வாழ்ந்து வருகின்றனர். இவை தவிர சிறப்பு முகாம் என்கின்ற தடுப்பு முகாம்களிலும் ஈழத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு தங்க வைக்கப்பட்டிருக்கும் முகாம்களிலுள்ள குடியிருப்புகளில் பல போதிய இடவசதியின்றி நெருக்கடி மிக்கதாகவும், சுகாதாரமற்ற முறையிலும், சரியான கழிப்பிட வசதிகள் இல்லாத பழைய இடிந்த குடியிருப்புகளாகவும் உள்ளன.
எனவே, இக்குடியிருப்புகளில் நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால், தமிழக அரசு உடனடியாக முகாம்களில் சுகாதாரத்தை ஆய்வு செய்து போதிய அடிப்படை வசதிகளை உருவாக்கித் தருவதுடன், அங்கு வாழும் ஈழத் தமிழர்களின் உடல்நலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது தலையாய கடமையாகின்றது.
தமிழகத்திற்குப் பணிபுரிய வந்த பிற மாநிலத்தவர்களுக்கு பேரிடர்கால அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்குவது குறித்து அறிவித்த தமிழக அரசு, நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்களுக்கு பேரிடர்கால நிவாரண உதவிகள் அளிப்பது குறித்து எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடாதது மிகுந்த வேதனைக்குரியது.
எனவே, அகதி முகாம்களில் உடனடியாக தமிழக மறுவாழ்வுத்துறையின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் அன்றாடம் வேலைகளைச் செய்து வாழ்வை ஓட்டும் நிலையில் தான் உள்ளனர்.
எனவே, தமிழக அரசு அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு தற்போது அறிவித்துள்ள நெருக்கடிகால நிதியுதவியை ஈழத் தமிழர்களுக்கும் வழங்கிட வேண்டும் எனவும், மேலும் அரசு அறிவித்துள்ள அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், நிதியுதவியும் முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர் குடும்பங்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் எனவும், மூன்று மாதங்களுக்கான இலவச எரிவாயு உருளை உள்ளிட்ட மத்திய அரசால் வழங்கப் பெறும் அத்தியாவசியப் பொருட்களான நிவாரண உதவிகள் ஈழத் தமிழர்களுக்கும் கிடைத்திடவும் தமிழக அரசு ஆவன செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.
மேலும், தமிழக சிறைகளிலுள்ள கைதிகளை கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக சொந்தப் பிணையில் விடுவிப்பது போன்று, அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ஈழத் தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசைக் கோருகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காலம் சென்ற ஈழத்து பேராசிரியர் ஆ வேலுப்பிளையிடமிருந்து கற்றவையே இங்கு தொகுத்து தரப்படுகிறது. பேராசிரியர் வேலுப்பிள்ளை இறந்து சில ஆண்டுகள் சென்று விட்டன. இன்று தமிழ் நாட்டில் முனைவர் நெடுஞ்செழியன் என்பவர் சமணம் என்பது வடக்கில் இருந்து வந்த ஜைன மதமல்ல பழந்தமிழர் மத்தியில் உருவான ஆசீவகம் என்று பேசுபவர்களில் பிரபலமானவர். இதுபற்றி பேராசிரியர் வேலுப்பிள்ளையிடம் நான் கேட்டபோது பொறுத்திருந்து பார்ப்போம் என்று மட்டுமே சொன்னார்.
ஆ.வேலுப்பிள்ளை, ஒரு நூலில் பின்வருமாறு கூறுகிறார் (Jainism in Tamil Inscriptions and Literature, in Buddhism among Tamils, Ed: Peter Schalk & A Velupillai, Uppsala University, 2002.) ‘தனிப்பட்டஒருசமணபொதுமக்கள்சமூகம்அக்காலத்தில்உருவாகாமல்இருந்ததால், சமணக்கருத்துக்கள்காணப்படும்பலதமிழ்நூல்களின்ஆக்குணர்சமணரேஎன்றுஅடையாளப்படுத்துவதில்பலதடங்கல்கள்ஏற்படுகின்றன. மிகச்சிறந்தபழந்தமிழ்நூல்கள்எனஆய்வாளரால்கருதப்படும் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம்மூன்றும்சமணம்சார்ந்தவையானாலும்அவற்றின்ஆக்குணர்சமணர்என்றுதிட்டவட்டமாககூறமுடியாமல்உள்ளது.
7ம் நூற்றாண்டுக் காலத்தில் ஆரம்பமான பக்தி அலைகளுக்கு முற்பட்ட காலத்திய தமிழ் இலக்கியங்களில் 400க்கும் மேற்பட்ட புலவர்களால் பாடப்பெற்ற சங்ககாலக் கவிதைத் தொகுப்புகள் ஒன்று. இவை ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலே இயற்றப்பட்டவை. சிறிது பிற்பட்ட காலத்திலேயே சமணரால் இயற்றப்பட்ட தமிழ் இலக்கியங்கள் தோன்றுகின்றன.
ஆக, சமயம் சாராத மிகப்பழைய சங்கக்கவிதைகளை விட, ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியங்களில் பெரும்பான்மையானவை சமணராலேயே எழுதப்பட்டவை. ஐம்பெரும் காப்பியங்களுள் அடங்கும் ஏனைய மூன்று காப்பியங்களும், மேலும் ஐந்து சிறுகாப்பியங்கள் எனப்படுபவையும், 7ம் நூற்றாண்டுக்குப் பிந்தியவையாகக் கணிக்கப்படுகிறது.
இவற்றில், ஒரு பௌத்தரால் இயற்றப்பெற்ற ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியை தவிர்த்து ஏனையவை அனைத்தும் சமணராலேயே இயற்றபெற்றவை. 7ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்திலும் சமணம் தமிழ் இலக்கியத்துக்கும் இலக்கணத்துக்கும் தொடர்ந்து பல ஆக்கங்களை தந்திருக்கின்றது. முக்கியமாக சோழ இராச்சியம் மேலோங்கி இருந்த 10ம் நுற்றாண்டை அண்மிய காலத்தில் சமண இலக்கியங்கள் பல எழுதப்பட்டிருக்கின்றன. 15ம் நூற்றாண்டு காலத்திற்குப் பின் சமண இலக்கியப் படைப்புக்கள் இல்லாது போய்விட்டது. சமணம் அளித்த இவ்விலக்கியங்கள், திருக்குறளைப்போலவே பகுத்தறிவுக்குட்பட்டவை.
தமிழ் இலக்கணத்திற்கும் சமணத்தின் பங்களிப்பு மிக பரவலானது. முன்பே குறிப்பட்டது போல் தொல்காப்பியம் ஒரு பெரிய தமிழ் இலக்கண நூல். பிந்தைய நூற்றாண்டுகளில் சமணர் இயற்றிய வேறு இரண்டு இலக்கண நூல்கள் நேமிநாதமும்நன்னூலும் ஆகும். நேமிநாதம்தொல்காப்பியத்தை சுருக்கித்தர முயற்சிக்கிறது. பிந்தைய நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட சிறந்த இலக்கண நூலாக நன்னூல்கருதப்படுகிறது. அவிநயம் எனப்படும் வேறொரு சமண இலக்கண நூல் இன்று சிறு சிறு பகுதிகளாகவே கிடைக்கப் பெறுகின்றன.
ஏறத்தாழ 7ம் நூற்றாண்டளவில் இப்பகுத்தறிவு சார்ந்த இலக்கிய பண்பாடு, திருஞானசம்பந்தரால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட பக்தி கலாசாரத்துடன் மாற்றமடைந்தது. புராணங்கள், இதிகாசங்கள் ஆகியவையும் இப்பக்தி கலாசாரத்துக்கு வலுவூட்டின. தமிழிலும் புராணங்களும் கம்பராமாயணம் போன்ற இதிகாசங்களும் இயற்றப்பட்டு இப்பக்தி கலாசாரத்துக்கு மேலும் உரமூட்டின. தமிழ் பக்தியை ஒட்டிய தத்துவமும் எழுதப்பட்டது. பிரமாண்டமான இந்து கற்கோவில்கள் கட்டப்பட்டன.
இன்று, தமிழரின் பக்தி இலக்கியங்களிலும், தமிழரின் பழமையான பகுத்தறிவுக்குட்பட்ட இலக்கியங்களிலும் பெருமை கொள்ளும் தமிழர்கள், இவ்விரண்டிற்கும் இடையேயான முரண்பாடுகளை பற்றிய விழிப்புணர்வற்று இருக்கிறார்கள். இவ்விரண்டு இலக்கியப் பண்பாடுகளும் 7ம் நூற்றாண்டளவில் கடுமையாக மோதிக்கொண்ட இரு வேறு சமயங்களிலிருந்து உருப்பெற்றவை என்பதையும் உணராதுள்ளனர். இன்றைய தமிழர்களோ, வெறுக்கத்தக்க சமணத்துக்கு எதிராக திருஞானசம்பந்தர் வாதிட்டு வெற்றி கொண்டார் என்று பெருமை கொள்ளக் கற்பிக்கப்படுகிறார்கள்.
இன்று தமிழ்நாட்டில் பயணிகளுக்கு கவர்ச்சியாக காட்டப்படுவது ஆயிரமாண்டுகளுக்கு பிந்தைய கோவில்களே. இதற்கு முற்பட்ட சமணத்தலங்கள் பயணிகளுக்கு விளம்பரப்படுத்த படுவதில்லை. இத்தளத்தில் காணப்படும் தமிழ்நாட்டின் சமண இடங்களின் பட்டியல் பிரமிப்பை தரும்.
வவுனியா செட்டிகுளம் முதிலியார்குளம் பகுதியில் இன்றய தினம் ஆராதனை நடாத்திய 15 ற்கும் மேற்பட்டோர் செட்டிகுளம் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கொரோனோ வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் விதமாக நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ளதுடன் ஆலயங்களில் அதிகளவான மக்கள் ஒன்று கூடவேண்டாம் என்றும் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வவுனியா செட்டிகுளம் முதலியார் குளம் பகுதியில் இன்றய தினம் கிறிஸ்தவ மதஆராதனை ஒன்று நடைபெற்றருந்தது. இது தொடர்பாக செட்டிகுளம் பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கமைய அப்பகுதிக்கு சென்ற பொலிசார் ஆராதனையை நடாத்திய போதகர் உட்பட 15 ற்கும் மேற்பட்டோரை கைதுசெய்திருந்ததுடன் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
ஊரடங்கு நாளை தினம் தளர்த்தப்படும்போது மட்டக்களப்பு மாநகரசபையின் கீழ் உள்ள பொதுச்சந்தைகளை திறக்காமல் மூடுவதற்கான தீர்மானம் மட்டக்களப்பு மாநகரசபையில் எடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் விசேட அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.
தற்போது இலங்கையில் கொரனா தொற்று அச்சுறுத்தல்கள் காரணமாக தொடர்ச்சியான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு இன்று விசேட அமர்வாக நடாத்தப்பட்டது.
கொரனா அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதுடன் முன்னெடுக்கப்படும் ஊரடசங்கின்போது மாநகரசபையினால் மக்களின் தேவையினை பூர்த்திசெய்ய முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகளுக்கு இங்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் தொடர்ச்சியான ஊரடங்கு காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அன்றாடம் கூலித்தொழில்செய்து இன்று தொழில்பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாநகரசபை ஊடாக ஒரு தொகை நிதியினை வழங்குவதற்கும் சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 3000 குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு முதல் கட்டமாக இரண்டு மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடுசெய்துள்ளதுடன் மாநகரசபையின் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கும் அமைப்புகளின் உதவியையும் பெற்று இதனை முன்னெடுப்பது எனவும் இங்கு முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது கொரனாவினை தடுக்க அரசாங்கம் மற்றும் வைத்தியர்கள்ääதாதியர்கள்ääசுகாதார துறை ஊழியர்கள்ääமட்டக்களப்பு மாநகரசபை சுகாதார ஊழியர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.உள்ளுராட்சிமன்றங்களின் கீழ் இயங்கும் பொதுச்சந்தைகளை மூட நடவடிக்கையெடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர்ääமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் நாளைய தினம் பொதுச்சந்தையினை திறப்பதில்லையென்ற தீர்மானமும் இன்றைய அமர்வின்போது எடுக்கப்பட்டது.
சிறீலங்கா இராணுவச் சிப்பாயான சுனில் ரட்நாயக்காவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு என்பது சிறீலங்கா மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அனைத்துலக நீதியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இத்தகைய மன்னிப்பு என்பது அனைத்துலக நீதி விதிகளுக்கு முரனானது, எவ்வளவு பாரதூரமான குற்றங்களைச் செய்தாலும் படையினர் நீதிக்கு விதிவிலக்கானவர்கள் என்பதையே இது காட்டுகின்றது என அனைத்துலக நீதியாளர் அமைப்பின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பிரடெறிக் றவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் மீதான நீதிக்குப்புறம்பான படுகொலைகள் போன்ற தீவிர குற்றங்களுக்கு அனைத்துலக சட்டங்களில் மன்னிப்புக்கள் வழங்கப்படுவதில்லை. மக்கள் கொரோனா வைரஸ் இன் தாக்கம் தொடர்பான அச்சத்தில் உள்ளபோது அவர்களின் மனங்களை மேலும் பாதிக்கும் வண்ணம் இந்த விடுதலை அமைந்துள்ளது.
சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது சிறீலங்கா அரசு. தான் அரச தலைவராக பதவியேற்றால் படையினர் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற தனது உறுதிமொழியை தங்போதைய அரச தலைவர் நிறைவேற்றியுள்ளார். சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் பெருமளவான மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் இந்தியா காஸ்மீர் மக்களுக்கான இணையத்தள இணைப்பை மட்டுப்படுத்தியுள்ளது. அதனை கண்டிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
இந்திய அரசின் நடவடிக்கை ஒரு குற்றமான பொறுப்பற்ற நடவடிக்கையாகும். காஸ்மீரின் சுய அதிகாரம் பறிக்கப்பட்ட நாள் முதல் அங்கு இணையத்தள வசதிகளை தடை செய்து உலகின் தொடர்பில் இருந்து அதனை துண்டித்துள்ளது இந்தியா.
வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் இரண்டு கைக் குண்டுகளுடன் நேற்று (28) ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கடற்படை மற்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாஆச்சிபுரத்தில் வசிக்கும் சந்தேகநபர், மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில்,மன்னாரில் தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள்
முருங்கன் பகுதியில் கைக்குண்டு ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.
சிறுவர்கள் உட்பட 8 தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயான சுனில் ரட்நாயக்காவுக்கு மன்னிப்பு வழங்கியதன் மூலம் மாபெரும் குற்றத்திற்கு கிடைக்க வேண்டிய நீதியை மறுத்துள்ளார் சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா என அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
போரின் போது படையினர் மிகப்பெரும் படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தாலும் சிறீலங்காவில் அவர்களுக்கு தண்டனை கிடைப்பது என்பது அரிதானது. ஒருசிலர் தண்டிக்கப்பட்டாலும், அவர்களும் விடுதலை செய்யப்படுவதுண்டு.
சிறீலங்காவின் நீதித்துறை அனைத்துலக தரமற்றது எனவே சிறீலங்காவில் மேற்கொள்ளப்படட போர்க்குற்றங்கள் தொடர்பில் சிறீலங்கா அரசினால் நீதியை நிலைநாட்ட முடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என அதன் தென்னாசியா பிராந்திய பணிப்பாளர் மினாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றவாளி என ஐ.நாவினால் அடையாளம் காணப்பட்ட சவீந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக சிறீலங்கா அரசு நியமித்திருந்தது. அவர் மீது அமெரிக்கா பயணத்தடையை கொண்டுவந்திருந்தது. எனினும்; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மற்றுமொரு படை அதிகாரியான காமால் குணரட்னாவை கோத்தபாய பாதுகாப்புச் செயலாளரான நியமித்திருந்தார்.
இவர்கள் இருவருமே தற்போது கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைக் குழுவை வழிநடத்துகின்றனர். சிறீலங்காவில் நீதியை நிலைநாட்டுவதற்கு அனைத்துலக நீதிவிசாரணைப் பொறிமுறை தேவை என்பது தற்போது தெளிவாகியுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.