Home Blog Page 2355

கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன.

கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை இந்த செயற்கை சுவாச கருவிகளே வழங்குகின்றன.

வென்டிலேட்டர் என்றால் என்ன? அது என்ன செய்கிறது?

சுருக்கமாக சொல்லப்போனால், நோய்த்தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் ஒட்டுமொத்த சுவாச செயல்பாட்டை மேற்கொள்ளும் இயந்திரம்தான் இந்த வென்டிலேட்டர்கள்.

இது நோயாளிக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவகாசம் தருகிறது.

வென்டிலேட்டர்களில் பல்வேறு வகைகள் உள்ளன.

கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட் -19 நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் 80 சதவீதத்தினர் மருத்துவமனை சிகிச்சை இல்லாமலேயே குணமடைவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.2fe230df c5ba 4f58 aef4 6af235c1bb21 ventilator கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

ஆனால், இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஆறில் ஒருவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, சுவாச பிரச்சனை ஏற்படுகிறது.

கோவிட்-19 தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் செயல்பாடு நாளடைவில் பலவீனமடைகிறது. இந்த பிரச்சனை குறித்து அறிந்தவுடன், நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலம் இரத்த குழாய்களை விரிவடைய செய்வதால், அதிகளவிலான நோயெதிர்ப்பு செல்கள் நுழைகின்றன.

இந்த செயல்பாட்டின் காரணமாக நுரையீரலுக்குள் திரவங்கள் அதிகளவு நுழைவதால், அதன் காரணமாக நோயாளி சுவாசிப்பதற்கு சிரமப்பட தொடங்குகிறார். இதனால், அந்த நபரின் உடலில் ஆக்ஸிஜன் அளவும் குறைய ஆரம்பிக்கிறது.

இந்த சிக்கலான பிரச்சனையை கையாள்வதற்கு பயன்படுத்தப்படும் வென்டிலேட்டர்கள், உயர் அளவு ஆக்சிஜன் மிக்க காற்றை நுரையீரலுக்குள் செலுத்த உதவுகிறது.4879 கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

வென்டிலேட்டர்களில் ஈரப்பதமூட்டியும் இருப்பதால், அவை செயற்கையாக செலுத்தப்படும் காற்றிலுள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை நோயாளியின் உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து சரிவர பராமரிக்கிறது.

நோயாளியின் மொத்த சுவாச செயல்பாட்டையும் வென்டிலேட்டர் மேற்கொள்வதால் இடைப்பட்ட நேரத்தில் நோயாளியின் சுவாச தசைகள் ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைக்கிறது.

நோய்த்தொற்றுக்குரிய லேசான அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு முகக்கவசங்கள், நாசிவழிக் கவசங்கள் அல்லது வாய்வழிக் கவசங்கள் வாயிலாக காற்றோ அல்லது பலதரப்பட்ட வாயுக்களின் கலவையோ நுரையீரலுக்குள் செலுத்தப்படும்.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, ஒரு வால்வு வழியாக அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் செலுத்தப்படும் ஹுட்ஸ் ரக கருவிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை மூச்சு காற்றிலுள்ள திரவ துளிகளின் மூலமாக வைரஸ் காற்றின் வழியே பரவும் அபாயத்தை குறைக்கின்றன.

எனினும், தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடனடியாக வென்டிலேட்டர்கள் பொருத்தப்படும். இதன் மூலம், நோயாளியின் உடலில் ஆக்சிஜன் அளவு நிலைப்படுத்தப்படும்.111464173 2233959a 29b3 4a00 b85d 35b710b565ae கொரோனா வைரஸ்: உயிர் காக்கும் வென்டிலேட்டர்கள் செயல்படுவது எப்படி?

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய இன்டென்சிவ் கேர் சொசைட்டியை சேர்ந்த மருத்துவர் சந்தீபன் லஹா, கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் தேவைப்படுவதில்லை என்றும், வீடுகளிலோ அல்லது அடைக்கப்பட்ட ஆக்சிஜனே அவர்களுக்கு போதுமானது என்றும் அவர் கூறுகிறார்.

“வென்டிலேட்டர் பராமரிப்பு மிகவும் சிக்கலானது. அதை சரிவர நிர்வகிக்காவிட்டால் அது நோயாளின் உயிருக்கே ஆபத்து விளைவித்து விடும். தொழில்நுட்ப அம்சங்கள் சவாலானவை. ஒரு குறிப்பிட்ட வகை வென்டிலேட்டரை பயன்படுத்தியவர்களால் அனைத்து ரக வென்டிலேட்டரையும் இயக்க முடியும் என்று கூற முடியாது” என்று மருத்துவர் லஹா கூறுகிறார்.

இந்தியாவை பொறுத்தவரை, தற்போது ஐம்பதாயிரத்துக்கும் குறைவான வென்டிலேட்டர்களே மருத்துவமனைகளில் உள்ளதாகவும், அடுத்த சில வாரங்களில் இதன் தேவை பல லட்சங்களை தாண்ட கூடும் என்றும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவில் ஏற்கனவே வென்டிலேட்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை அதிகளவிலான கருவிகளை உற்பத்தி செய்யுமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோன்று, மகேந்திரா உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் குறைந்த விலை வென்டிலேட்டர்களை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன.

முன்னதாக, கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போதைக்கு 3,044 வென்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பிபிசி

சிறீலங்காவில் 120 பேர் கோவிட்-19 நோயினால் பாதிப்பு

சிறீலங்காவில் இன்று (30) கோவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு இதுவரை மொத்தம் 120 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் இறந்துள்ளார். 11 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, ஆறு மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருக்கும் என சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச்சட்டம் மீண்டும் மாலை 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும்.

சமய காரணங்களுக்காக வைத்திருக்கும் நிதியை மக்களுக்கான நிவாரணங்களுக்காக வழங்கவேண்டும்.

சமய காரணங்களுக்காக வைத்திருக்கும் நிதியைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ்சால் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு வணக்கஸ்தலங்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் அறநிலையக் காப்பாளர்களிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இன்று வணக்கஸ்தலங்களில் நடைபெற வேண்டிய வருடாந்த திருவிழாக்கள் பூஜைகள் ஆராதனைகள் வழிபாடுகள் அனைத்தும் கொரோனாவின் நிமித்தம் ஸ்தம்பிதமாகியுள்ளன.

யார் யாரை இந்த வைரஸ் அடுத்துத் தாக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது.

இந்த நிலையில் சமயச் சடங்குகளுக்காகப் பயன்படவிருந்த நிதியனைத்தும் செலவு செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

அதே நேரம் நாளாந்தம் கிடைக்கும் வருமானத்தில் தமது குடும்பங்களைப் பராமரிக்க வேண்டிய குடும்பத் தலைவர்கள் மற்றும் தலைவிகள் வீட்டுக்கு வெளியே செல்ல முடியாது தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பலருக்கு தத்தமது ஊர்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல குடும்பங்கள் அடுத்த வேளை சாப்பாடு எங்கிருந்து கிடைக்கும் என்று ஏங்கிக் கிடக்கின்றனர்.

பலர் பட்டினியின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு தத்தளித்து வருகின்றனர்.

கோயில்களில் திருவிழாக்கள் செய்ய இருந்த உபயகாரர்கள்; வணக்கஸ்தலங்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் மற்றும் அறநிலையக் காப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இன்று பட்டினியால் வாடும் பல வறிய குடும்பங்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

ஓரிரு வாரங்களுக்கேனும் பயன்படுத்த கூடிய உலர் உணவுப் பொதிகளை சமய காரணங்களுக்காக வைத்திருந்த தமது நிதியைப் பயன்படுத்தி அவர்களுக்கு வாங்கிக் கொடுக்க முன்வர வேண்டும் என சி.வி.விக்னேஸ்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தினால் 100 குடும்பங்களுக்கு நிவாரனம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று பிரசித்திபெற்ற ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகத்தினால் 100 குடும்பங்களுக்கு உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீடுகளில் இருந்து வரமுடியாது முடங்கிக் கிடக்கின்ற நிலையில் நாளாந்த கூலித்தொழில் செய்கின்ற பலர் தமக்கான நாளாந்த உணவு உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்குகின்ற நிகழ்வுகளை இன்றையதினம் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினர் முன்னெடுத்திருந்தனர்

அதனடிப்படையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னசாளம்பன் மற்றும் முத்துஐயன்கட்டு ஜீவநகர் பகுதிகளில் குறித்த நூறு குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொதிகளை கையளித்தனர் குறித்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் இ. சத்தியசீலன் அவர்களும் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊரடங்குச் சட்டத்தின்போது இந்தியாவில் இலங்கை அகதிகளின் நிலை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 144 தடையுத்தரவு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் பெறுவது தடைப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அரசாங்கம் சில ஏற்பாடுகளை செய்து வீட்டை விட்டு வெளியே யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

அதனையும் மீறி 10 சதவித மக்கள் குறிப்பாக இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து ஊர் சுற்றிக்கொண்டு உள்ளனர்.

இதற்கிடையில் திருவண்ணாமலை – காஞ்சி சாலையில் இலங்கை அகதிகள் முகாம் சாலையோரமே உள்ளது. பாழடைந்த வீடுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன.

வைரஸ் பரவலை தடுப்பதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததும் இலங்கை அகதிகள் முகாம்மை சேர்ந்தவர்கள், தங்களது வீடுகளில் வீட்டுக்கு ஒரு புடவையை வாங்கி அதை இணைத்து 300 மீட்டர் தூரத்துக்கு தங்களது குடியிருப்பை வெளியார் பார்வையில் இருந்து மறைத்துள்ளனர்.`

உள்ளேயுள்ள குடியிருப்பில் இருந்து வெளியே வரவும், வெளியில் இருந்து உள்ளே வரவும் ஒரு வழியை மட்டும் வைத்துள்ளனர்.

அந்த வழியையும் அடைத்து வைத்துள்ளனர். அனுமதியில்லாமல் யாரும் உள்ளே வரவும், வெளியே செல்லாதபடி கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். அந்த நுழைவாயிலில் இது 144 மற்றும் ஊரடங்கு உத்தரவால் இந்த ஏற்பாடு என நோட்டீஸ் ஒட்டிவைத்துள்ளனர்.

இதுக்குறித்து அவர்கள் தெரிவிக்கையில்,

“இலங்கையில் இதுபோல் பல ஊரடங்கு, 144 தடை உத்தரவுகளை பார்த்தவர்கள் நாங்கள். பல நோய்களுக்கு நாங்கள் ஆட்பட்டவர்கள்.

பிறரிடம் இருந்து நாங்கள் அங்கே விலகியிருக்க இந்த வழியைத்தான் பயன்படுத்துவோம். அதையே தான் இங்கும் செயல்படுத்தியுள்ளோம்” என்கிறார்கள்.

கொரோனாவினால் இதுவரை 33,968பேர் பலி..

உயிர்க்கொல்லி வைரஸான கொரோனா வைரஸை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன.

உலகின் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இன்று காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் இதுவரை 7 இலட்சத்து 22 ஆயிரத்து 289 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 33 ஆயிரத்து 968 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 5 லட்சத்து 36 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 26 ஆயிரத்து 681 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 901 பேர் குணமடைந்து மீண்டும் தமது வீடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனாவால் இத்தாலியில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் 10 ஆயிரத்து 779 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களில் ஸ்பெயின் (6803 பலி), சீனா (3304 பலி) ஆகிய நாடுகள் உள்ளன.

அமெரிக்காவில் 2493 பேரும், பிரான்சில் 2611 பேரும், ஈரானில் 2640 பேரும், பிரிட்டனில் 1231 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்படுகின்றது.

மார்ச் மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும் தனிப்பட்ட தனிமைப்;படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுரையை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனிமைப்படுத்தல் சட்டமூலத்திற்கு இணங்க, இந்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கு விசேட அவசர இலக்கமாக 1933 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

ஊரடங்குச்சட்ட கால கட்டத்தில் பயணிப்பதற்கு அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படுவது அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக மட்டுமே ஆகும். இவ்வாறு வழங்கப்படும் ஊரடங்குச்சட்ட அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம் திகதி வரை செல்லுபடியாகும் என்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் – மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 33,000

கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் உள்ள 177 நாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 33,000 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் இன்று (29) தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள் அங்கு 10,779 பேர் மரணமடைந்துள்ளனர், இன்று 756 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர்.

அதற்கு அடுத்த நிலையில் ஸ்பெயின் உள்ளது. அங்கு இதுவரையிலும் 6,528 பேர் மரணமடைந்துள்ளனர், இன்று 838 பேர் அங்கு மரணமடைந்துள்ளனர்.

நேற்று ஸ்பெயினில் 832 பேரும், இத்தாலியில் 889 பேரும், பிரித்தானியாவில் 260 பேரும், பிரான்ஸ் இல் 319 பேரும் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரையில் 1,700 பேர் மரணமடைந்துள்ளதுடன், 115,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் இல் 2,606 பேர் மரணமடைந்துள்ளர். இன்று அங்கு 292 பேர் பலியாகியுள்ளனர்.

பிரித்தானியாவில் இன்று 209 பேர் மரணமடைந்துள்ளனர், அங்கு இதுவரை 1,228 பேர் மரணமடைந்துள்ளதுடன், 19,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் இது வரை 700,000 இற்கு அதிகமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 149,000 பேர் குணமடைந்துள்ளனர்.

அயர்லாந்தில் இன்று 10 பேர் இறந்துள்ளனர், மொத்தமாக அங்கு 46 பேர் பலியாகியுள்ளதுடன், 2,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுவிற்சலாந்தில் 257 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 14,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 2,191 பேர் பலியாகியுள்ளதுடன், 124,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் 61 பேர் உயிரிழந்ததுடன், 5,655 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெதர்லாந்தில் 771 பேர் பலியாகியுள்ளதுடன், 10,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் -19 – ஜேர்மனின் மாநில நிதி அமைச்சர் தற்கொலை

கொரோனா வைரசினால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பின் எதிர்விளைவுகளால் அதிர்ச்சியடைந்த ஜேர்மனின் கெஸ் மாநில நிதி அமைச்சர் தேமஸ் ஸ்காபேர் (54) இன்று (29) தற்கொலை செய்துள்ளார்.

புகையிரத பாதை அருகில் இன்று அவர் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும்இ இது தற்கொலையாக தாம் கருதுவதாகவும் ஜேர்மன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனின் மிக முக்கிய வங்கிகளான டெற்சு வங்கிஇ ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கி மற்றும் கொமெர்ஸ் வங்கி போன்றவற்றின் தலைமையகமகத் திகழும் பிராங்போட் நகரின் நிதி அமைச்சராகவே அவர் பணியாற்றி வந்துள்ளார்.

பிரான்ஸில் 3 ஈழத்தமிழர்கள் கொரோனா வைரசுக்கு பலி

பிரான்ஸ் நாட்டில் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 3 ஈழத்தமிழ் மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குணரட்னம் கீர்த்திபன், சாந்தன் மற்றும் பொன்னன் குலசிங்கம் ஆகியவர்களே பிரான்ஸ் நாட்டில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளனர்.

இதுவரை பிரான்ஸ் இல் 2,314 பேர் மரணமடைந்துள்ளதுடன், 37,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

keerthi பிரான்ஸில் 3 ஈழத்தமிழர்கள் கொரோனா வைரசுக்கு பலிponnan பிரான்ஸில் 3 ஈழத்தமிழர்கள் கொரோனா வைரசுக்கு பலி