Home Blog Page 2357

இனப்படுகொலையாளியின் விடுதலை மாவைக்கு தெரியாதாம்

யாழ் மவாட்டம் மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழ் மக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் சிறீலங்கா உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவச் சிப்பாயை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா விடுதலை செய்தது தனக்கு தெரியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாக தமிழ்மிரர் என்ற ஊடகம் கடந்த வெள்ளிக்கிழமை (27) தெரிவித்துள்ளது.

அனைத்துலக மன்னிப்புச்சபை, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன இது தொடர்பில் உடனடியாக கண்டன அறிக்கைகள் வெளியிட்டதும், தற்போதைய கொரோனா வைரசின் பிரச்சனையை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக அவை குற்றம் சுமத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 – ஈராக்கில் இருந்து வெளியேறுகின்றது பிரான்ஸ் இராணுவம்

கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக ஈராக்கில் உள்ள தனது படையினரை திரும்ப பெறுவதற்கு பிரான்ஸ் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க படையினர் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரான்ஸ் நாட்டுப் படையினர் ஈராக்கில் இருந்து வெளியேறவுள்ளனர். ஈராக் படையினருக்கான பயிற்சி நடவடிக்கை என்ற போர்வையில் தங்கியுள்ள 200 படையினரையும் வெறியேற்ற பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.

போர் மற்றும் இராஜதந்திரப் பேச்சுக்கள் மூலம் வெளியேற்ற முடியாத மேற்குலக படையினரை வைரஸ் வெளியேற்றியுள்ளதாக ஈராக் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைசெய்யப்பட வேண்டும்

கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கு பல நாடுகள் திட்டமிட்டுவருவது ஒருபுறம் இருக்க சில நாடுகள் கைதிகளை விடுதலை செய்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையும் சிறு குற்றங்களில் ஈடபட்ட கைதிகளை விடுதலைசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் ஈரான் 85,000 கைதிகளை தற்காலிகமாக விடுதலை செய்துள்ளதுடன், 10,000 பேருக்கு பொதுமன்னிப்பும் வழங்கியுள்ளது.

எதியோப்பியா 4,000 கைதிகளை விடுவித்துள்ளது.

இந்தியாவின் மாகாராட்ரா மாநில அரசு 11,000 கைதிகளையும், புதுடில்லி 3,000 கைதிகளையும் விடுவித்துள்ளது.

பாகிஸ்த்தான் மற்றும் ஆப்பாகானிஸ்தான் நாடுகளும் கைதிகளை விடுவித்துள்ளன.

சிறைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பிரித்தானியா அரசும் சிந்தித்து வருகின்றது.

எனவே சிறீலங்கா அரசினால் எந்தவித குற்றமும் சுமத்தப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.

இந்த விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளும், புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் சிறீலங்கா அரசுக்கும் அனைத்துலக சமூகத்திற்கும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என தமிழ் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகள் இறப்பு எண்ணிக்கையை குறைத்துக் கூறுகின்றன

கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் உயிரிழப்பவர்களின் எணிண்ணிக்கையை உலக நாடுகள் குறைத்துக் கூறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சீனாவில் 3,212 பேர் இறந்ததாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றபோதும் அங்கு இறப்பு எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என மேற்குலக நாடுகளின் ஊடகங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

அதேசமயம், தற்போது பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இறப்பு எண்ணிக்கையை குறைத்து வெளியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் வெளியிடும் தகவல்கள் வைத்தியசாலைகளில் இறப்பவர்களின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. வீடுகளில் மற்றும் வயோதிப இல்லங்களில் இடம்பெறும் மரணங்கள் அதில் உள்ளடக்கப்படுவதில்லை என பிரான்ஸின் வைத்தியசாலைகள் கூட்டமைப்பின் தலைவர் பிரெடெறிக் வலnhக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இத்தாலியில் இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சிறீலங்கா நபர் மரணம்

கொரோன வைரசினால் பாதிக்கப்பட்ட சிறீலங்காவைச் சேர்ந்த 61 வயதான லக்ஸ்மன் விஜயரத்தினா என்ற நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பிரித்தானியா தகவல்கள் தெரிவித்துள்ளன.

லண்டன் பெல்தாம் பகுதியில் வசித்து வந்தவரே அவசர சிகிக்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளார்.

யாழ் சிறையிலிருந்து கைதிகள் பிணையில் விடுதலை

யாழ்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறு குற்றங்கள் புரிந்த நீதிமன்றங்களால் பிணை வழங்கப்பட்டு பூர்த்தி செய்ய முடியாது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் என 110 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறே யாழ்ப்பாணம் சிறைச்சாலை இருந்து விடுதலை செய்யப்பட்ட 110 கைதிகளும் தனி நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதாவது தங்களுக்குத் தாங்களே பிணையில் கையொப்பமிட்டு நீதிபதிகளின் அறிவுறுத்தலின் படி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதலை செய்யப்பட்ட அனைவரும் அவர்களின் வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள மேலும் பல கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா பணியாளர்கள் 86 பேர் கொரோனாவால் பாதிப்பு

கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு தமது பணியாளர்கள் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று (28) தெரிவித்துள்ளது.

ஆசியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் ஐரோப்பாவிலேயே அதிக பணியாளர்கள் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர் என ஐ.நாவின் பேச்சாளர் ஸ்ரீபேன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஸ்பெயினில் 9,444 சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வரையில் அங்கு 5,000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், 65,700 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

கிளினிக் நோயாளர்களுக்கான மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கை

சுகாதார அமைச்சு சகல கிளினிக் நோயளர்களுக்குமான மாதாந்த மருந்துகளை அவர்களது வீடுகளுக்கே நியோகிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் வடக்கு மாகாண கிளினிக் நோயளர்களுக்கும் மாதாந்த மருந்து வகைகளை விநியோகிக்க வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.

வடக்கு மாகாணாத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலாவது அல்லது அரச நடமாடும் கிளினிக் நிலையங்களிலாவது பதிவு செய்து மாதாந்தம் மருந்து பெற்று வருபவர்கள் உடனடியாக தமது கிளினிக் நடைபெறுகின்ற வைத்தியசாலைகளுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளுளமாறும் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

புத்தளத்தில் மூன்று ஊர்கள் முடக்கம்

புத்தளம் கடையான் குளம் பகுதியில் உள்ள இரண்டு ஊர்களும் அக்குரணை பகுதியிலுள்ள ஒரு ஊரும் முடக்கப்பட்டு உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகளுக்கான தகவல்

தற்போது நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக யாழ்.மாவட்டத்தில் 76048 சமுர்த்தி குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்க யாழ்.மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள அலுவலகப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமை பணிப்பாளர் நாயகம் ஆ.பீ.பீ.திலகசிறியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ் உலர் உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கைகளை சமுர்த்திப் பிரிவினர் எடுத்துள்ளனர்.

இதன்படி பலநோக்க கூட்டுறவுச் சங்க கிளைகள் ஊடாக வழங்கப்படவுள்ளது. சமுர்த்தி முத்திரைக் கொடுப்பனவு பெறும் பயனாளிகளில்

இரு அங்கத்தவர்களுக்கு 1,500 ரூபாவும், மூன்று அங்கத்தவர்களுக்கு 2,500 ரூபாவும், நான்கு அங்கத்தவர்களுக்கு 3,500 ரூபாவும் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.