Home Blog Page 2358

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 கைதிகள் விடுதலை

சிறு குற்றங்களை புரிந்த குற்றச்சாட்டில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 கைதிகள், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு சிறைச்சாலை அதிகாரி ஆர்.டப்ளியூ. டப்ளியூ சம்பாவோ இதனை தெரிவித்தார்.

சிறைச்சாலைக்குள் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், இவர்கள் விடுதலை செய்யபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை ஆணையாளரின் வழிகாட்டலில், நீர்கொழும்பு பிரதான நீதவான் ரஜீந்ரா ஜசூரியவின் உத்தரவுக்கமைய, இந்த வாரத்தில் மொத்தமாக 170 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பிணை வழங்கப்பட்டுள்ள கைதிகள், பிணை வழங்கப்பட்டு பிணையில் செல்ல வசதியில்லாத கைதிகள், இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட கைதிகள் அவர்கள் வசிக்கும் பிரதசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சிறைச்சாலை வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையில் முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு மாவட்டங்கள்

கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களை சேர்ந்த இரு பிரதேசங்களை முழுமையாக தனிமைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அக்குறன பிரதேசம் மற்றும் புத்தளம் கடமன்குளம் கிராமத்தின் ஒரு பகுதியை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று தொடர்ந்து பரவாமல் இருப்பதற்காக இவ்வாறு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு மூடப்படும் பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் பரிசோதனைகளை மேற்கொண்டு சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்

இதேவேளை யாழ்ப்பாணத்தில் சில பகுதிகள் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் முதலாவது மரணம் நேற்று சம்பவித்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவிட்-19 – மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,249

கொரோனா வைரசின் தாக்கதால் உலகில் உள்ள 177 நாடுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,249 இற்கும் அதிகமாகும் என ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் நேற்று (28) தெரிவித்துள்ளது.

இறந்தவர்களின் அதிகமானவர்கள் இத்தாலியை சேர்ந்தவர்கள் அங்கு 10,023 பேர் மரணமடைந்துள்ளதுடன், தினமும் ஏறத்தாள 800 பேர் அங்கு மரணமடைந்து வருகின்றனர். அங்கு 92,500 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.

அதற்கு அடுத்த நிலையில் ஸ்பெயின் உள்ளது. அங்கு இதுவரையிலும் 5,812 பேர் மரணமடைந்துள்ளனர், 72,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று ஸ்பெயினில் 832 பேரும், இத்தாலியில் 889 பேரும், பிரித்தானியாவில் 260 பேரும், பிரான்ஸ் இல் 319 பேரும் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் இதுவரையில் 1,700 பேர் மரணமடைந்துள்ளதுடன், 115,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் இல் 2,314 பேர் மரணமடைந்துள்ளதுடன், 37,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் இது வரை 649,904 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 137,283 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னை நகரில் இருந்து இலங்கைக்கு வந்த அனைவரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இனங்காணப்பட்ட 4 கொரோனா நோயாளர்களில் இருவர் சென்னையில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த மார்ச் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் சென்னையில் இருந்து இலங்கை வந்த அனைவரும் அவர்கள் தங்கியிருக்கும் பிரதேசத்தின் பொது சுகாதார பரிசோதகரிடம் அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

ஆனந்த சுதாகரனின் விடுதலை கானல்நீர், ஆனால் படுகொலையாளி விடுதலை- செ. மயூரன்

ஆனந்தசுதாகரனின் விடுதலை கானல் நீராகியுள்ள நிலையில் படுகொலையாளி விடுவிக்கப்பட்டுள்ளார் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ. மயூரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் இராணுவ வீரரொருவர் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த நாட்டை ஆண்டவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை வழங்கியிருந்தால் தமிழ் மக்கள் அவர்களுக்கு எதிராக போராடவேண்டியேற்பட்டிருந்காது.

எமது சகோதரர்களான அரசியல் கைதிகள் சிறையில் வாடுவதற்கு பெரும்பான்மை இன அரசியல் தலைவர்களே காரணமாகும். தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்காது தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் இந்த பேரினவாத அரசாங்கங்ககோடு உறவாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் இனியாவது தமிழர்களின் நலன்சார்ந்து சிந்திக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் விடுதலை செய்யப்படுவார் என சொல்லப்பட்ட ஆனந்தசுதாகரனின் விடுதலை இன்றும் கானல் நீராகவே காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களை படுகொலை செய்ததாக நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட இராணுவத்தினரை பொது மன்னிப்பில் விடுதலை செய்துள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஜனாதிபதியின் செயற்பாடானது ஒரு பக்கச்சார்பானது என்பதனை வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறான ஒருபக்கச்சார்பான செயற்பாடு ஜனாதிபதியாக இருக்கும் ஒருவருக்கு ஏற்புடையதல்ல. இந்த நாட்டில் சட்டம் நீதி உள்ளதா என்கின்ற சந்தேகத்தினை இச் செயற்பாடு வலுவடையச்செய்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர் என்ற ரீதியில் தன் இனத்தினதும் இராணுவத்தினரதும் மனங்களை குளிர்மைப்படுத்தி அடுத்த கட்ட அரசியலை செயற்படுத்துகின்றார். அதன் காரணத்தினாலேயே கோத்தபாய ராஜபக்ச இராணுவ அதிகாரி என்பதனையும் நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டியவர்களாகின்றோம்.

எனவே தமிழ் மக்கள் இந்த நாட்டில் சம உரிமைகளை பெற்று வாழ வேண்டும் என்பதனை ஜனாதிபதியின் செயற்பாடு எடுத்தியம்புகின்றது என்பதனை மனத்தில் கொண்டு தமிழ் தலைமைகள் தமது செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையின் முதலாவது மரணம்

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையின் முதலாவது மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் எனவும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.நா பணியாளர்கள் 86 பேர் கொரோனாவால் பாதிப்பு

கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு தமது பணியாளர்கள் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இன்று (28) தெரிவித்துள்ளது.

ஆசியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் ஐரோப்பாவிலேயே அதிக பணியாளர்கள் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர் என ஐ.நாவின் பேச்சாளர் ஸ்ரீபேன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஸ்பெயினில் 9,444 சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வரையில் அங்கு 5,000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், 65,700 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

வெலிக்கந்தை கொரோனா மருத்துவமனையிலிருந்து….- மருத்துவர் றொசான்

நாம் வளர்ந்த சூழல்கள் என் மனதில் வந்து போயின… சாவினை எதிர்பார்த்து தினமும் வாழ்ந்து சாவையே வென்ற உத்தமர்கள் வாழ்ந்து மடிந்த மண்ணில் வளர்ந்த ஒருவன்…. இதற்காகவா பயப்படுகிறாய் என்று என்னையே நான் கேட்கும்பொழுது இருந்த சிறுபயமும் இருந்த இடம் தெரியாமல் ஓடிக்கொண்டது.
                                            

18.03.2020 அன்று வவுனியா வைத்தியசாலையில் கடமையில் இருந்தபொழுது வைத்தியசாலை இயக்குனரிடமிருந்து ஓர் தொலைபேசி அழைப்பு என்னை வரும்படி. நானும் செய்துகொண்டிருந்த வேலையை முடித்துவிட்டு வைத்தியசாலை இயக்குனரிடம் சென்றேன். அவர் என்னை Welikanda என்னும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட Covid19 Specialized Treatment Hospital இற்கு பணியாற்ற செல்லுமாறு கேட்டுக்கொண்டார். தேவை உணர்ந்து மனதின் ஆழத்தில் சிறு பயத்துடன் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு கடமையாற்ற செல்லுவதற்கு பூரண சம்மதம் தெரிவித்தேன்.

19.03.2020 காலை எமது வைத்தியசாலை Ambulance இல் பொலநறுவை வைத்தியசாலை நோக்கி புறப்பட்டேன். செல்லும்போது எனது மனதின் ஆழத்தில் இருந்த பயம்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன்… அப்பொழுது நாம் எமது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எடுத்துக்கொண்ட சத்தியப் பிரமாணம் மனதில் தோன்றியது. (எல்லா மருத்துவர்களும் எடுக்கும் சத்திய பிரமாணமான Hippocratic Oath எனப்படும் சத்திய பிரமாணம் அது.) அத்துடன் நான் / நாம் வளர்ந்த சூழல்கள் என் மனதில் வந்து போயின… சாவினை எதிர்பார்த்து தினமும் வாழ்ந்து சாவையே வென்ற உத்தமர்கள் வாழ்ந்து மடிந்த மண்ணில் வளர்ந்த ஒருவன்…. இதற்காகவா பயப்படுகிறாய் என்று என்னையே நான் கேட்கும்பொழுது இருந்த சிறுபயமும் இருந்த இடம் தெரியாமல் ஓடிக்கொண்டது.

மிகவும் உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் பொலநறுவை வைத்தியசாலை வந்தடைந்தேன். பொலநறுவை வைத்தியசாலை இயக்குநரை சந்தித்து கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டு Welikanda சென்றடைந்தேன்.
அங்கு வந்தடைந்தவுடன் அதற்கு பொறுப்பான மருத்துவரை சந்தித்தோம். அவர் சொன்னார் நாளையில் இருந்து வேலையை ஆரம்பிப்போம் என்று. பின்னர் எமக்கென்று ஒதுக்கப்பட்ட தங்குமிடம் சென்று ஓய்வு எடுத்துவிட்டு மறுநாள் கடமையை ஆரம்பித்தேன்.

வைத்தியசாலையில் Corona virus இனால் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களையும், Corona virus இனால் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் என்று சந்தேகித்து பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் நோயாளர்களையும் வெவ்வேறாக ஒதுக்கப்பட்ட இடங்களில் அனுமதித்தோம்.நோயாளியின் உடற்பரிசோதனை செய்வதற்கும், தேவையான பரிசோதனை மாதிரிகளை பெறுவதற்கும், நோயாளர்களின் அருகில் செல்லவேண்டியது அவசியம். ஆகவே PPE( Personal Protective Equipment) எனப்படும் பாதுகாப்பு உடை அணிந்துதான் செல்லவேண்டும்.

இவ் உடை 100% தொற்றிலிருந்து பாதுகாப்பை தரக்கூடியது அல்ல என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த உடையை அணிந்து செல்வது என்பது நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு கடினமான விடயமாகும். குறிப்பாக அதை அணிந்ததும் வியர்வை அதிகமாக இருக்கும், வெப்பம் அதிகமாக இருக்கும், உடல் irritation ஆகும். இவை அனைத்தையும் தாங்கி நோயாளியை உடற்பரிசோதனை செய்து, மாதிரிகள் எடுத்து , நோயாளியின் மனநிலையை திடப்படுத்தி என்று கடமை ஆற்றுகின்றேன்.

மருத்துவர்கள் நாங்கள் மட்டுமல்ல. தாதியர்களும் இதனை அணிந்து கடமை புரிகின்றனர். வெளியில் வந்து மயங்கி விழுந்த தாதிகளும் உள்ளனர்.
இவ்வாறு ஒரு நாளுக்கு 12 – 16 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தூக்கமின்றி கடமை புரிகின்றேன். சற்று நேரம் ஓய்வு எடுத்தபின் மறுநாள் மீண்டும் இதேவேலை என்று தொடர்கிறது எனது பணி.

வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் எமக்கு மிகவும் அதிகம் என்று தெரிந்தும் நான் ஏற்றுக்கொண்ட பணியை ஒரு மருத்துவனாக மனதிற்குப் பிடித்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றேன் இன்றுவரை…..

நாம் ஆற்றும் பணிகளை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துகொள்ள பிடிக்காத ஒருவன் நான். இந்த பாழாய்ப்போன சமூகவலைத்தளங்களில் (குறிப்பாக Facebook ) கடந்த காலங்களில் மருத்துவர்கள் பற்றி உண்மை தன்மை அறியாமல் மிகவும் கேவலமாக விமர்சித்து பதிவுகளை, செய்திகளை பார்த்தும், இதனால் மருத்துவர்கள் பற்றி ஏற்படுத்திய தவறான பாதிப்புகளை அறிந்தும், கோபப்பட்டவனாய் , அவ்வாறு விமர்சிக்கும் அடிமட்ட முட்டாள்களை ஒரு பொருட்டாகவே கருதாத ஒருவனாய் கடந்துசென்ற ஒருவன், ஏன் இன்று இதை உங்களிடம் பகிர வேண்டும் என்ற கேள்வி என் மனதில் ஆயிரம் தடவை எழுந்து. முடிவில் “ஆம்” பகிர வேண்டும் என்ற விடையே தோன்றியது. காரணம்….எனது தமிழ் சமூகம் மட்டுமே.

அரசாங்கம், பல மருத்துவர்கள், மருத்துவ துறை சான்றோர், சமூகவலைத்தளங்கள், ஊடகங்கள், தொலைக்காட்சி ஊடாகவும், வானொலிகள் ஊடாகவும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும்கூட அதனைப் பொருட்படுத்தாமல் ஊரடங்கு தளர்த்திய பின்பு வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணம், வவுனியாவில் கூடிய கூட்டம், கூடியவர்களின் நடத்தையும்…… இதனால் ஏற்பட்ட கோபம், கவலை, இயலாமை போன்ற உணர்வுகள் ஒன்றுசேர உருவான ஓர் உணர்வே இப் பதிவை போட காரணமாகும்.

ஐயோ! என் தமிழ் சமூகமே, நீங்கள் இந்நோயின் விளைவுகளை இவ்வளவு தூரம் துறைசார்ந்தோர் தெளிவுபடுத்தியும் இன்னும் முழுமையாக அறியவில்லையா? அறிந்திருந்தால் குடும்பம், சமூக அக்கறை இருந்திருந்தால் உங்களால் உங்கள் வீட்டு கதவுகளை திறக்க கூட முடியாதல்லவா?
நேரடியாக இந்த நோயுடன் களத்தில் நிற்கும் ஒரு மருத்துவனாக உங்களை கெஞ்சிக் கேட்கின்றேன். தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். அப்படி செய்து கொண்டாலே நீங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கம் உங்கள் சமூகத்திற்கும் இதைவிட மேலான ஒன்று இப்பிறவியில் செய்துவிட முடியாது என்று ஆணித்தரமாக கூறுகின்றேன்.

Covid19 இனால் ஏற்படும் அறிகுறிகள், அதனை தடுப்பதற்கான வழிகள் என்பவை பற்றி நான் இங்கு பதிவிட விரும்பவில்லை. காரணம் இந் நாட்களில் எதனை பார்த்தாலும் கேட்டாலும் இந் நோய் பற்றியதாகவே உள்ளமையாலும் எனது நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கிலும்.

ஒரு விடயம் இந் நோய் சார்ந்து கூறிக்கொள்ள விரும்புகின்றேன்
இலங்கையிலும் பாதித்திருக்கும் இந் நோயின் தாக்கத்தை எம்மால் குறிப்பிடும் அளவிற்கு கட்டுப்படுத்தி வைத்திருக்க முக்கிய காரணமாக நான் கருதுவது ஊரடங்கு சட்டமும், தனிமைப்படுத்தல் முகாம்களும் தான் (Quarantine Camp). காரணம் இலங்கையில் Corona virus தொற்றுக்கு உட்பட்ட நோயாளிகள் மிக அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களே ஆவர்.

இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தோரை குறிப்பிடத்தக்க அளவிற்கு (கிட்டத்தட்ட முழுமையாக) பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தி அவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதனால் இந் நோய் வெளியில் பரவும் வீதத்திற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

ஆனால் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு ஒன்றுகூடலால் அடையாளம் காணப்பட்ட ஒரு நோயாளி வெளிநாட்டிலிருந்து வந்தவர் அல்ல. அதோடு அந்த ஒன்றுகூடலை நடத்திய தொற்றுக்குள்ளான நபர் வெளியில் நடமாடி ஒன்றுகூடலை நடத்தியவர். இந்த ஒரு கவனயீன/ பொறுப்பற்ற செயற்பாட்டின் விளைவாக ஏற்பட்ட சமூக பரவல் (Community Spread) இன் வீதம் நீங்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு ஏற்கனவே நிகழ்ந்துவிட தொடங்கியிருக்கும்.

நிலமை இப்படியிருக்க இதனை இன்னும் அதிகரிக்கும் விதமாக ஊரடங்கு தளர்த்திய போது கூடிய கூட்டம்… மொத்தத்தில் இதற்கான (அதாவது துறைசார்ந்தோர் அறிவுறுத்தியும் நீங்கள் விட்ட தவறுக்கான ) விளைவுகளை எனதும், உங்களதுமான சமூகம்தான் எதிர்நோக்கும்.

தொற்று ஏற்பட்ட நோயாளரின் எண்ணிககை அதிகரித்தால் எமது பிரதேசத்திலேயேதான் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டிவரும். அவ்வாறு சிகிச்சை அளிப்பதற்கு எம்மிடம் போதிய உபகரணங்களோ இதர வளங்களோ இல்லை. இதனால் நாம் பாரிய இடையூறுகளை நினைத்துப்பார்க்காத அளவிற்கு எதிர்நோக்கவேண்டி வரும். அதனை நாம் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்ற அச்சம் எம்மத்தியில்….

ஆதலால் தயவுசெய்து இனிவரும் காலங்களிலாவது ஊரடங்கு சட்டம் தளர்த்தினால் கூட வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்…

இரண்டு கிழமையோ, நான்கு கிழமையோ ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு கூட உயிர் வாழ முடியும். (எங்களில் பலர் இன்னும் சாதாரண நாட்களில் கூட இவ்வாறுதான் வாழ்கின்றார்கள் என்ற கசப்பான உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.)
பொருட்களை தேவைக்கு அதிகமாக வாங்கி குவித்தல், பதுக்கல் போன்ற கீழ்த்தரமான செயல்கள் பற்றியும் இப் பதிவில் கூற நான் விரும்பவில்லை.
தயவு செய்து அனைவரும் ஒத்துழைப்பு தந்து எமது சமூகத்தை பாதுகாக்க உதவுங்கள்.

##இளைஞர்களே……

இது நம்முடைய நேரம். நாம் செயற்பட வேண்டிய நேரம். காலத்தின் கோர மாற்றத்தால் எமது இளைஞர்கள் சிலர்/பலர், குறிப்பாக வடக்கு மாகாணத்தில் குடி, போதைப்பொருள் பாவனை, பெண்துஷ்பிரயோகங்கள், வாழ்வெட்டு போன்றவற்றிற்கு அடிமையாகி வேண்டப்படாத / விரும்பத்தகாத அடையாளம் ஒன்றை எமக்கும் எமது சமூகத்திற்கும் பெற்றுக்கொடுத்து அதனை இன்னும் வளர்த்து கொண்டே இருக்கும் இக் காலத்தில்….சமூக அக்கறை உள்ள பல இளைஞர்கள் மௌனித்தும், செயற்பட இயலாதவர்களாகவும் ஆக்கப்பட்டிருக்கும் இக் காலத்தில்…
எமது சமூகத்தை தூக்கி நிமிர்த்த வந்த வாய்ப்பாக இதனை நாம் சேர்ந்து கையிலெடுப்போம்.

இரண்டு கிழமைக்கு முன் வரை தமிழர்களை முன்னிறுத்தி சுய விளம்பரத்திற்காக ் பேசியவர்கள் இவ் விடயத்தில் மௌனித்திருப்பதை நாம் காண்கின்றோம். இது நமது தலைவிதி.

ஆனால் இளைஞர்களாகிய நாம் ஒற்றுமையுடன் ஒன்றுசேர்ந்து எமது சமூகத்தை இப் பாரிய அனர்த்தத்தில் இருந்து காப்பாற்றி தூக்கி நிமிர்த்துவோம்.அதை எவ்வாறு செயற்படுத்தலாம்? எனது ஆலோசனைகள் சில….

➢ உங்கள் ஊரைப்பற்றி உங்களைவிட அறிந்தவர்கள் எவருமில்லை.

➢ ஊங்கள் ஊரிலுள்ள ஏழைகள், நாளாந்த வேலை, சம்பளங்களில் வாழ்பவர்கள் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள்.

➢ ஊங்களிடம் உள்ள தொலைபேசியினூடாக தேவையான இளைஞர்களை (தயவு செய்து சமூக சீர்கேடுகளை உருவாக்ககூடியவர்களை தவிர்த்துவிடுங்கள்) ஒன்றுசேருங்கள்.

➢ ஊரினை பகுதி பகுதியாக பிரித்து பொறுப்பெடுங்கள்.

➢ அதன் பின் கிராமசேவகர், பிரதேச சபை உறுப்பினர், PHI, PHM போன்றோருடன் கலந்தாலோசித்து அவர்களுடாகவோ அல்லது முடியுமானால் நேரடியாகவோ

பொலிசாருடன் ஆலோசித்து சட்டத்திற்கு உட்பட்டு உணவுகளை, உங்கள் ஊரிலேயே சேர்த்து / கிடைக்கக்கூடிய வழிகளை கண்டறிந்து திட்டமிட்டு கொடுத்து உதவுங்கள்.

➢ அடுத்ததாக இந் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்களை இனம்கண்டு, உதாரணமாக

1. வெளிநாட்டில் இருந்து வந்து தெரியப்படுத்தாமல் இருப்பவர்கள்
2. யாழ்ப்பாணத்தில் சமீபத்தில் நடந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டு தங்களை தெரியப்படுத்தாமல் இருப்பவர்கள்
3. நோய் அறிகுறியுடன் இருப்பவர்கள்

போன்றவர்களை பொலிசுக்கோ / கிராம சேவகருக்கோ / சுகாதார துறையினருக்கோ தெரியப்படுத்தி அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளையும், சிகிச்சைகளையும் பெற்றுக்கொடுக்க உதவுங்கள்.
இறுதியாக எனது மரியாதைக்குரிய சமூகமே! புரிந்துகொள்!

➢ இது மறைக்கப்பட வேண்டிய நோயல்ல, மாறாக வெளிப்படுத்தப்பட வேண்டிய நோய்!

➢ தனிமைப்படுத்தல் முகாம் என்பது சிறைச்சாலை அல்ல நீ செய்த பிழைக்கு தண்டனை அனுபவிக்க… மாறாக நீ உன்னையும், உனது குடும்பத்தையும் உனது சமூகத்தையும் பாரிய அழிவிலிருந்து காப்பாற்றிக்கொள்ள உனக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பு அது!

தயவு செய்து நோயின் விளைவுகளை கருத்தில் கொண்டு அனைவரும் ஒத்துழைத்து விரைவில் மீண்டெழுவோம் ஒன்றாக!

கொரோனாவைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை வெலிக்கந்தையில் விசேடமாக அமைக்கப்பட்ட வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் றொசான் அந்தோணிப்பிள்ளை தனது முகநூலில் பகிர்ந்து கொண்டவை……

 

 

 

சிறீலங்காவில் நீதி நிலைநாட்டப்படுவதில்லை – ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு

படுகொலை குற்றவாளியை விடுதலை செய்யும் சிறீலங்கா அரசின் நடவடிக்கை அங்கு நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆணைக்குழுவின் பேச்சாளர் ரூபெட் கொல்விலே மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரசு வெளியிட்டுள்ள அறிக்கை மிகவும் பிரச்சனைக்குரியது. சிறீலங்கா நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்ட கொலைக் குற்றவாளியான இராணுவ அதிகாரி சுனில் ரட்நாயக்காவை சிறீலங்கா அரசு விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

ஐந்து இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டபோதும் ஒருவர் தான் தண்டிக்கப்பட்டார். ஆனால் அவரையும் சிறீலங்கா அரசு தற்போது விடுதலை செய்துள்ளது.

இது சிறீலங்காவில் நீதி நிலைநாட்டப்படுவதில்லை என்பதை காண்பித்துள்ளது. சிறீலங்காவின் இந்த நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது என தெரிவித்துள்ளார்.

விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரனா பரிசோதனை தடுப்பு முகாமிலிருந்து விமான பயணிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

கொரோனோ வைரஸ்தாக்கம் நாட்டில் இனம்காணப்பட்டநிலையில் வெளிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி பரிசோதனைக்குட்டபடுத்தப்படுவார்கள் என்று அரசு அறிவித்திருந்தது.

அந்தவகையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை தடுப்பு முகாமுக்கு கடந்த 13 ஆம் திகதி 212 விமான பயணிகள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.

இத்தாலி, தென்கொரியா, ஈரான் நாட்டவர்கள் குறித்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டிருந்ததுடன் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கபட்டு கொரோனா தொற்று உள்ளதா என்ற பரிசோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 167 பேர் இன்றயதினம்(28) விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டில் இருந்து வருகைதந்திருந்த நிலையில் அவர்களிற்கு நோய்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.

வன்னிமாவட்ட கட்டளைதளபதிமேயர் ஜெனரல் ரோகிததர்மசிறி தலைமையில் அவர்கள் இன்றயதினம் வழிஅனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.அவர்கள் பயணிப்பதற்காக 11 பேருந்துகள் இராணுவத்தால் தயார்செய்யபட்டிருந்தது.

இலங்கையின் மொனராகலை, காலி மாத்தறை, கண்டி ,கலாவத்த, மீகவும, புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெரும்பாண்மையின மக்களும்
வடக்கின் முல்லைத்தீவு,மன்னார், யாழ்பாணம் பகுதிகளை சேர்ந்த 9 தமிழர்களும் இதன்போது விடுவிக்கப்பட்டிருந்தனர்.

008 விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!

குறித்த பயணிகளிற்கு கொரோனோ தொற்று பீடிக்கவில்லை என்று பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே வதிவிடங்களுக்கு அனுப்பபட்டுள்ளதுடன், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நோய்தொற்று இல்லைஎன்று உறுதிப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
007 விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!
006 விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!005 1 விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!004 1 விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!003 1 விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!002 1 விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!00 விமான பயணிகள் விடுவிக்கப்பட்டனர்!!