Home Blog Page 2359

24 மணித்தியாலங்களுக்குள் எவருக்கும் கொரோனா இல்லை

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் எந்த ஒரு நபரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை தொடர்பில் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச கால்நடை உற்பத்தி பண்ணையில் முட்டை ஒன்று 16 ரூபாய்க்கு விற்பனை!!

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள அரச கால்நடை உற்பத்தி பண்ணையில் இன்றயதினம் முட்டை ஒன்று 16 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனோ வைரஸ்தாக்கம் ஏற்பட்ட நிலையில் முட்டை, ரின்மீன், பருப்பு ஆகியவற்றின் விலையை ஜனாதிபதி கோட்டாபய ராயபக்ச குறைத்து உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயாக குறைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வவுனியாவில் அமைந்துள்ள அரசின் பண்ணையிலேயே முட்டையின் விலை குறைக்கப்படாதநிலையில் 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, இதன்போது அதனை கொள்வனவு செய்த பொதுமக்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த கால்நடை பண்ணையின் பொறுப்பு வைத்தியரிடம் கேட்டபோது முட்டையினை 10 ரூபாவிற்கு விற்பனை செய்யுமாறு உத்தியோகபூர்வமான சுற்றுநிருபம் எவையும் எமக்கு வராதமையினால் குறைத்து விற்கமுடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதேவளை வவுனியாவில் இன்றயதினம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சில வியாபாரிகள் 10 ரூபாய்க்கும் சிலர் 20 ரூபாய்க்கும் முட்டையினை விற்பனை செய்திருந்தமை குறிப்பிடதக்கது.

ஏப்ரல் 10ஆம் திகதி வரை பொலிசாருக்கான விடுமுறைகள் இரத்து

அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபரினால் இவ்வாறு விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி வரை விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு வழியில்லை – எம்.கே.சிவாஜிலிங்கம்

இலங்கை என்ற ஓர் ஆட்சி அதிகாரத்திற்குக் கீழே ஒரு அரசியல் தீர்வையோ அல்லது வேறு ஏதையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இவ்வாறான நிலை தொடருமானால் இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத்தான் மரணதண்டணை விதிக்கப்பட்ட இரானுவ அதிகாரி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதை எடுத்துக் காட்டுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எம்.கே.சிவாஐpலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..

‘யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டுப் பேரை படுகொலை செய்த பிரதான குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றவாளிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்துள்ளார்.

இதேபோல்இ திருகோணமலையில் குமாரபுரத்தில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி திருகோணமலையில் இடம்பெற்ற வழக்கை அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதி மறுக்கப்பட்டது. அத்தகைய கொலைகளைச் செய்தவர்களை ஜனாதிபதியும் இலங்கை அரசாங்கமும் பொதுமன்னிப்பளித்து விடுதலைசெய்து வருகின்றது.

இத்தகைய சம்பவங்களைச் செய்துவரும் ஜனாதிபதியும் இந்த அரசாங்கமும் தமிழ் மக்களைப் படுகொலை செய்தது சரி என்பதை நிலைநாட்டி வருகின்றமையால் இலங்கைக்குள் இனிமேல் நீதியை எதிர்பார்ப்பதில் பயனில்லை என்பதை எங்களுக்கு நூறு வீதம் புரியவைத்துள்ளார்கள். தமிழ் மக்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த சூழ்நிலையின் பின்னணியில்தான் நாங்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளைச் செய்யவேண்டும்.

இதேவேளை, ஜனாதிபதி சிங்கள பௌத்த பேரினவாத ஜனாதிபதியில்லை என்பதை நிரூபிப்பவராக இருந்தால் ஆகக்குறைந்தது 15 வருடங்களுக்கு மேலே தண்டனை வளங்கப்பட்டவர்கள் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை (அரசியல் கைதிகள்) முதற்கட்டமாகவும் பத்து வருடங்களுக்கு மேலே சிறைச்சாலையில் இருப்பவர்களை இரண்டாவது கட்டமாகவும், ஏனையவர்களை மூன்றாவது கட்டமாகவும் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாதுவிடின் நாங்கள் இலங்கை என்ற ஓர் ஆட்சி அதிகாரத்திற்குக் கீழே ஒரு அரசியல் தீர்வையோ அல்லது வேறு ஏதையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இவ்வாறான நிலை தொடருமானால் இந்த நாடு பிளவுபடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத்தான் இத்தகைய செயற்பாடு எடுத்துக் காட்டுகின்றது.

இலங்கையர் நாடு திரும்ப வேண்டாம் என சிறீலங்கா அரசு கோரிக்கை

கொரோனா தொற்றை ஒழிக்கும் வரை தாம் தங்கியுள்ள இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு, தாய்நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களிடம் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சிறீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க இன்று(27) வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாய்நாட்டிற்கு வருகை தருவதற்காக எதிர்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டினுள் வைரஸ் வருவது மற்றும் பரவுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இரந்து வருகை தருவதை முழுமையாக நிறுத்தியுள்ளது. ஏனைய நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு நாட்டினுள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் நாட்டிற்கு வருகை தருவதற்காக முன்வைக்கும் கோரிக்கைகளை நாட்டில் கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட்டு நிலைமைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னர் கவனத்திற் கொள்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது தாங்கள் இருக்கின்ற இடங்களில் விமான நிலையங்களுக்கு அல்லது வேறு இடங்களுக்கு பயணம் செய்வது அவர்களுக்கும் இந்த நோய் தொற்றக்கூடிய இடர் நிலைமை உள்ளது.

எனவே தம்மைப் பற்றிய தகவல்களை குறித்த நாட்டின் இலங்கை தூதுவராலயத்திற்கோ அல்லது கொன்சியுலர் ஜெனரல் அலுவலகத்திற்கோ தெரியப்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு தாய் நாட்டிற்கு வருகை தர எதிர்பார்த்துள்ள அனைத்து இலங்கையர்களிடமும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கொரோனா தொற்றினால் புலம்பெயர் ஈழத் தமிழர் இருவர் பலி

கொரோனா தொற்றினால் புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் வசித்த புங்குடுதீவைச் சேர்ந்த 61  வயதான     லோகநாதன் என்ற நபர் உயிரிழந்துள்ளார். ஆவார் இவரின் குடும்பத்தினர் புங்குடு தீவில் வசித்து வருகின்றனர்.  இவர் நீரிழிவு நோய் உள்ளவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இவர் உணவகம் ஒன்றில் கடமையாற்றி வந்துள்ளார்.

மேலும் பிரான்சில் வசித்து வரும் யாழ்ப்பாணம் தாவடியைச் சேர்ந்த 32 வயதான குணரத்தினம் கீர்த்திகன் என்பவர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் தாவடி வேம்படி முருகமூர்த்தி கோவிலடியைச் சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். இவரின் மனைவி கர்ப்பிணிப் பெண்ணாவார்.

Tamil 1 கொரோனா தொற்றினால் புலம்பெயர் ஈழத் தமிழர் இருவர் பலி14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட இவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று(26) மரணமடைந்துள்ளார். இவரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மருத்துவர்கள் மறுத்து விட்டார்கள்.

 

பிரித்தானியா பிரதமரையும் தாக்கியது கொரோனா

பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சற்கு கோவிட்-19 வைரஸ் தொற்றுதல் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

பரிசோதனைகளின் முடிவில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவருக்கு மிகவும் குறைவான அறிகுறிகளே காணப்படுவதாகவும் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

தன்னிச்சையான முடிவின் மூலம் நீதியை தலைகீழாக மாற்றுவது வெறுக்கத்தக்கது

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 8 பொதுமக்களை கொலை செய்த குற்றத்துக்காக தண்டனை பெற்றிருந்த இராணுவ உறுப்பினரை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய எடுத்த தீர்மானத்தை சர்வதேச மன்னிப்பு சபை கண்டித்துள்ளது.

இலங்கையில், மனித உரிமை மீறல்களுக்கு இன்னும் உரியமுறையில் பொறுப்புக்கூறாதுள்ள நிலையில் குற்றவாளியான சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ உறுப்பினரின் விடுதலை என்பது முற்றிலும் வருந்ததக்க செய்தியாகும்.

இதன்மூலம் பயங்கரமான குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாலும் கூட ஒருவர் இராணுவத்தை சேர்ந்தவராக இருந்தால் அவர் விடுதலை செய்யப்படுவார் என்பதை உணர்த்துவதாக மன்னிப்பு சபையின் தென்னாசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

2000ம்ஆண்டு மிரிசுவில் பகுதியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் சுனில் ரட்நாயக்க என்ற இராணுவ உறுப்பினருக்கு 2015ம் ஆண்டு தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவர் 13 குற்றங்களுக்காக குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தார்.இந்நிலையில் சிறிய குற்றங்களுக்காக பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாதவர்கள் சிறையில் உள்ளபோது, கொலைகளை புரிந்தவருக்கு மன்னிப்பு என்ற செய்தி வெளியாகியுள்ளதாக மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி கடும் குற்றங்களை செய்தவர்களும் விடுவிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.தன்னிச்சையான முடிவின் மூலம் நீதியை தலைகீழாக மாற்றுவது வெறுக்கத்தக்கது என்றும் சர்வதேச மன்னிப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

கோவிட் -19 – ஆண்களையே அதிகம் கொல்கின்றது

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் ஆண்களையே அதிகம் பாதித்து வருவதுடன், ஆண்களே அதிகம் மரணமடைந்தும் வருகின்றனர்.

இதுவரை கிடைக்கப்பபெற்ற தகவல்களின் அடிப்படையில் இறந்தவர்களில் சீனாவில் 64 விகிதமும், இத்தாலியில் 71 விகிதமம், ஸ்பெயினில் 65 விகிதமும் ஆண்களாகும்.

கொரோனா வைரசையும் தனது இன அழிப்புக்கு பயன்படுத்தியது சிறீலங்கா

யாழ் மாவட்டம் மிருசுவில் பகுதியில் ஐந்து வயதுக் குழந்தை உட்பட 8 அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயை சிறீலங்கா அரசு விடுதலை செய்துள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது வீடுகளைப் பார்வையிடுவதற்கு சென்ற தமிழ் மக்களையே சிறீலங்கா இராணுவம் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருந்தது.

சிங்களச் சிப்பாயின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தபோதும், தமிழ் மக்களை படுகொலை செய்த எந்த ஒரு சிப்பாயும் தண்டிக்கப்படுவதில்லை என்ற சிங்கள அரசின் கொகையை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தியே வருகின்றது.

கொரோன வைரசின் தாக்கத்தை தடுப்பதற்கு சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற ஐ.நாவின் கோரிக்கையை தனது இனவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தியுள்ளது சிறீலங்கா அரசு.

குற்றங்கள் சுமத்தப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காது, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிங்களச் சிப்பாயை விடுவித்துள்ளது சிறீலங்கா அரசு.

சிறீலங்காவின் இந்த செயலை அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டித்துள்ளதுடன், சிறீலங்காவில் நீதி நிலைநாட்டப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் இன் தாக்கத்தை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றது எனவும் அது தெரிவித்துள்ளது.