கொரோனா வைரசையும் தனது இன அழிப்புக்கு பயன்படுத்தியது சிறீலங்கா

யாழ் மாவட்டம் மிருசுவில் பகுதியில் ஐந்து வயதுக் குழந்தை உட்பட 8 அப்பாவித் தமிழ் மக்களை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவச் சிப்பாயை சிறீலங்கா அரசு விடுதலை செய்துள்ளது.

2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமது வீடுகளைப் பார்வையிடுவதற்கு சென்ற தமிழ் மக்களையே சிறீலங்கா இராணுவம் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருந்தது.

சிங்களச் சிப்பாயின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தபோதும், தமிழ் மக்களை படுகொலை செய்த எந்த ஒரு சிப்பாயும் தண்டிக்கப்படுவதில்லை என்ற சிங்கள அரசின் கொகையை சிறீலங்கா அரசு நடைமுறைப்படுத்தியே வருகின்றது.

கொரோன வைரசின் தாக்கத்தை தடுப்பதற்கு சிறைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற ஐ.நாவின் கோரிக்கையை தனது இனவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தியுள்ளது சிறீலங்கா அரசு.

குற்றங்கள் சுமத்தப்படாது தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காது, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிங்களச் சிப்பாயை விடுவித்துள்ளது சிறீலங்கா அரசு.

சிறீலங்காவின் இந்த செயலை அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டித்துள்ளதுடன், சிறீலங்காவில் நீதி நிலைநாட்டப்படுவதில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் இன் தாக்கத்தை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றது எனவும் அது தெரிவித்துள்ளது.