Home Blog Page 2360

குற்றவாளிகளை தண்டிக்காத நாடு இலங்கை என்பது மீண்டும் நிருபணம்! -பா.அரியநேத்திரன்

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை குறுகிய காலத்தில் ஜனாதிபதி அவர்கள் விடுதலை செய்ததன் மூலம் குற்றவாளிகளை தண்டிக்காத நாடு என்ற சிறுமையை இலங்கை பெற்றுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய மிருசுவில் படுகொலைகளில், குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட இராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பாக அவர்மேலும் கருத்துக்கூறுகையில்

பல தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என தொடர்ச்சியாக பல அழுத்தங்களையும் போராட்டங்களையும் தமிழ்தேசியகூட்டமைப்பும் தமிழ்மக்களும் முன்எடுத்த போதும் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விடயத்தில் இலங்கையை ஆட்சிசெய்த எந்த அரசாங்கமாக இருந்தாலும் அதற்கான வாய்புகளை வழங்கவில்லை,

ஆனால் இவ்வாறான வழக்குகள் பல முன்னெடுக்கப்படாத நிலையிலும் வேறு பலர் மேன்முறையீட்டில் விடுவிக்கப்பட்ட போதும் இந்த ஒருவர் தான் அவற்றுக்கு விதிவிலக்காக இருந்தவர். இலங்கையில் இவ்வாறான குற்றங்களைச் செய்தவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை இது உறுதி செய்கிறது.

ற்போது கொரோனா வைரஷ் பீதியில் முழு உலகமும் எமது மக்களும் கவனம் திரும்பி உள்ள இவ்வேளையில் சத்தமில்லாமல் தமது எண்ணங்களை நிறைவேற்றி தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் கசப்புணர்வு ஏற்படும்படியாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

ஜனாதிபதி அவர்கள் தண்டனை கைதிகள் யாருக்கும் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரம் அவருக்கு உள்ளதுஅந்த அதிகாரத்தை இனரீதியான பாகுபாடு காட்டாமல் கடந்த பல வருடங்களாக தமது வாழ்க்கையை தொலைத்து சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளையும் இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கி தமது நல்லெண்ணத்தை காட்டவேண்டும் எனவும் மேலும் கூறினார்.

கொழும்பு மக்கள்! தீவிரமாக பரவுமா வைரஸ்?

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரம் காரணமாக நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மிகுந்த ஆபத்தான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த ஆபத்தினை கொழும்பு வாழ் மக்கள் உணர்ந்து கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மக்களின் அத்தியாவசிய தேவை கருதி கொழும்பு மெனிங் சந்தை சில தினங்களாக திறந்துள்ளது. எனினும் அங்கு பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் கூட்டமாக செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

பொறுப்பற்ற வகையில் மக்கள் செயற்படுவதால் கொழும்பில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரம் அடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

safe கொழும்பு மக்கள்! தீவிரமாக பரவுமா வைரஸ்?

பொருட்களை கொள்வனவு செய்வோர் ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றருக்கும் மேற்பட்ட இடைவெளியில் கடைப்பிடிக்குமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நகரசபையின் முன் ஆயத்த நடவடிக்கையால் சனநெரிசல் கட்டுப்பாட்டிற்குள்

கொரோனோ வைரஸ்தாக்கத்தினை முன்னிட்டு வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வடக்கின் சில மாவட்டங்களில் இன்று காலை 6 மணிமுதல் 2 மணிவரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் வவுனியாவிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை தாங்களே எடுத்து வந்து விற்பனை செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதற்காக சில பகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தது.

காமினிமகாவித்தியாலத்திற்கு முன்பாகவும், ஹொறவபொத்தான வீதியில் ரோயல் உணவகத்திற்கு முன்பாகவும், தமிழ்மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பான பகுதி மற்றும் புதியபேருந்து நிலையத்திற்கு முன்பான பகுதிகளில் அவற்றை முன்னெடுப்பதற்கு வவுனியா நகரசபையால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் நகரில் சில்லறை மரக்கறி விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளையும் அந்த பகுதிகளில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கு உத்தரவிட்டிருந்ததுடன், மொத்த மரக்கறி விற்பனை சந்தையில் சில்லறை வியாபாரம் மேற்கொள்ளவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அதிகமான சனநெரிசலை கட்டுப்படுத்தும் நோக்குடன் சந்தை சுற்றுவட்ட வீதிக்குள் நுளையும் அனைத்துகுறுக்கு வீதிகளும் நகரசபையால் மூடப்பட்டிருந்ததுடன், வாகனங்கள் தரித்துநிற்பதற்கும் இடவசதிகள் ஏற்பட்டிருந்தது. இதனால் அதிகளவான மக்கள் நகர்பகுதி நோக்கி வருகைதந்த நிலையிலும் சனநெரிசல் இல்லாமல் பொருட்கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை வவுனியாநகரசபை ஊழியர்களால் நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களிற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதுடன்,
அண்ணளவாக 330 பொலிஸ் உத்தியோகத்தர்கள் நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் தெரிவிப்பு

நீதி தூக்கிலிடப்பட்ட நாட்டில் கொலையாளிகள் சிறையில் இருப்பதில்லை என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர்கள் இலங்கையிலிருந்து பொறுப்புணர்வையும் நீதியையும் நம்பக்கூடாது.
நாட்டின் உள்நாட்டுப் போரின்போது எட்டு பொதுமக்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு சிப்பாயை இலங்கை ஜனாதிபதி வியாழக்கிழமை விடுவித்துள்ளார்.

இந் நிலையில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக பிரிந்து போவது தான் ஒரே தீர்வு. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியதன் விளைவு தான் இது.

கொன்றவனையே நீதிபதி ஆக்கும் உள்ளக விசாரணை வேண்டாம். கோழிகளுக்கு ஓநாய் பாதுகாவலன் என்று நம்பத் தமிழ் மக்கள் இனியும்தயாரில்லை. தமிழ் இனப் படுகொலையாளிகளிடம் இருந்து தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கேட்க ஐ.நாவிடம் சர்வசன வாக்கெடுப்பை கோரவேண்டும்

சிறீலங்காவின் நீதித்துறை சுயாதீனமாக இயங்கவில்லை. அதற்குள் ஆட்சியாளர்களினதும், இராணுவத்தினரதும் தலையீடுகள் உண்டு. நாடு இராணுவத் தனத்தை நோக்கிப் போகிறது. தமிழ் மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். ஒற்றையாட்சிக்குள் சேர்ந்து வாழ முடியாது என அவ் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்

வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

கடந்த சில நாட்களாக வட மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இன்று காலை 6 மணிமுதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலிற்கு அமைய கிராமங்களில் உள்ள வர்த்தக நிலையங்களிற்கான பொருட்கள் நேற்றைய தினம் விநியோகிக்கப்பட்டதுடன், நகரை அண்டிய பகுதிகளில் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வவுனியா நகரை நோக்கி மக்கள் வருகை குறைவாக இருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதேவேளை சுகாதார திணைக்களத்தினால் கொரோனா தொற்று நோய் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் மக்களிற்கு வழங்கப்பட்டதோடு விழிப்புனர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையாக நின்றதுடன் பலபொருள் விற்பனை நிலையங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்ததுடன் அதிகளவான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

01 4 வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

02 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

03 5 வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

04 2 வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

05 1 வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

06 வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

07 வவுனியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

கொரோனா வைரசின் மையப்புள்ளியாக மாறிய அமெரிக்கா

கோவிட்-19 வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா சீனாவை பின்தள்ளியுள்ளது.

அமெரிக்காவில் 82,400 பேரும், சீனாவில் 81,782 பேரும், இத்தாலியில் 80,589 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் இதுவரையில் 500,000 இற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 23,000 பேர் பலியாகியுள்ளனர்.

எங்களை அழைத்துச் செல்லுங்கள்;தமிழ்நாட்டில் சிக்கியுள்ள கிழக்கு பல்கலை மாணவர்கள்

இந்தியாவின் தமிழ்நாட்டில் கல்வியை தொடரும் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்,மாணவர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிதம்பரம்,அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கற்றுவரும் விரிவுரையாளர்கள்,மாணவர்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர்.

இந்தியாவில் பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகள் இடை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தாங்கள் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்தியாவில் கொரனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதனால் தாங்கள் மிகுந்த அச்ச நிலையில் உள்ளதாகவும் விரைவாக தங்களை இலங்கைக்கு அழைத்துச்செல்ல அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடும்பங்களை பிரிந்து தாங்கள் இங்கு கல்வி கற்பதற்காக வருகைதந்ததாகவும் தங்களை எவ்வளவு விரைவாக அழைத்துச்செல்லமுடியுமோ அவளவு விரைவாக அழைத்துச்செல்ல அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் கூட தாங்கள் காசுக்காக வாங்கும் நிலையில் தற்போதைய நிலையில் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கு தாங்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கிவருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

http://www.ilakku.org/wp-content/uploads/2020/03/VID-20200326-WA0052.mp4

பங்கோலியன் என்ற மிருகத்தின் மூலமே வைரஸ் பரவியது?

சீனாவக்குள் கடத்திக் கொண்டுவரப்பட்ட பங்கோலியன் என்ற மிருகத்தின் மூலமே கோவிட்-19 மனிதர்களுக்கு பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பி.பி.சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

காட்டு மிருகங்கள் சந்தைகளில் விற்பனை செய்யப்படுவது தடை செய்யப்பட வேண்டும். அதன் மூலமே எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களை தவிர்க்க முடியும் என அனைத்துலக குழு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக கடத்திவரப்படும் பங்கோலியன் என்ற மிருகம் மருந்து மற்றும் உணவுத் தேவைக்காக பயன்படுத்தப்படுவதுண்டு.

வெளவ்வால்களும் வைரசை அதிகம் பரப்பும் உயிரினமாகும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க யாழில் முக்கிய நடவடிக்கை!

வலி மேற்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உழவர் சந்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் வலி மேற்கில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உழவர் சந்தைகள் நாளை முதல் பின்வரும் இடங்களில் செயற்படவுள்ளது.

சங்கானை
1.சங்கானை உப அலுவலகம் முன் உள்ள டச்சு கோட்டை

2.கூடத்து அம்மன் கோயில் மேற்கு புற மைதானம்

3.சிலம்புப்பளியடி பிள்ளையார் கோயில் வீதி

4.சங்கானை நிகரவைரவர் கோயில் வீதி

5.சலேசியார் கோயில் வீதி

சுழிபுரம்
1.சத்தியக்காட்டு சந்தைகள்

2.தொல்புரம் மத்திய சந்தைகள்

3.பனிப்புலம் சந்தை

4.பொன்னாலை பனையடி சந்தை

அராலி
1.அராலி செட்டியார்மட சந்தை

2.அராலி உப அலுவலகம் முன்பாகவுள்ள கருப்பட்டி பிள்ளையார் கோயில் பின் வீதி

வட்டுக்கோட்டை
1.வட்டுக்கோட்டை பொதுச்சந்தை

2.சக்கரத்தை பொதுச்சந்தை

வடக்கு ஆளுநர் எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்.

வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடமாகாண ஆளுநர் செயலகத்தில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் ஏனைய அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் பங்கு பற்றிய விசேட கலந்துரையாடலில் ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களுக்கான சேவைகள் கிடைப்பதற்கான நடை முறைகள் தொடர்பில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், ஊரடங்கு நேரத்தில் பொதுமக்களிற்கான சேவைகள் கிடைப்பதற்கான நடைமுறைகள் பின்வருமாறு,

பலசரக்கு பொருட்கள்

* உள்ளூர் பலசரக்கு கடைகள் பொது மக்களின் தேவைகளுக்காக தொடர்ந்து திறந்து நடாத்துவதற்காக அனுமதி வழங்கபட்டுள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் வாகனங்களை பயன்படுத்தாது நடந்து சென்று தமக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது. இந்நோக்கத்திற்கான வாகன பயன்பாடு அனுமதிக்கப்படமாட்டாது.

* பலசரக்கு கடைகள்/அங்காடி விற்பனை நிலையங்கள் அவசியமான ஐந்து அல்லது ஆறு பொருட்களை 500 ரூபாய் 1000 ரூபாய் பெறுமதியான பொதிகளாக்கி வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யமுடியும்.

மரக்கறி வகைகள்

தற்போது உள்ள சூழ்நிலையில் சந்தைகளை இயக்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு பின்வரும் ஒழுங்குகள் செய்யபட்டுள்ளன.

* மரக்கறி வியாபாரிகள் தாங்களாகவே உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து உள்ளூரில் விற்பனை செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை பிரதேச செயலாளார், உள்ளூராட்சி சபைகள், கமநல சேவைகள் திணைக்களம், விவசாய திணைக்களம் என்பன இணைந்து பொருத்தமான நடைமுறைகளை ஏற்படுத்தல் வேண்டும்.

கடல் உணவுகள்

* ஊரடங்கு நேரத்தில் மீன் பிடிப்பதற்கான அனுமதி வழங்கபட்டுள்ளது. சந்தைகளில் மீன் விற்பது தடைசெய்யபட்டுள்ளது மாற்று ஒழுங்காக அவற்றை வியாபாரிகள் வீதிகளில் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.

வெதுப்பகம்

* ஊரடங்கு நேரத்தில் வெதுப்பகங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வெதுப்பகங்களின் உற்பத்திகளை நடைமுறையில் உள்ள விநியோக முறைப்படி வாகனங்கள் மூலம் மக்களுக்கு விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.

அரிசி ஆலை

* அரிசியின் சீரான விநியோகத்தை மேற்கொள்வதற்காக அரிசி ஆலைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.

* வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களில் இருந்து யாழ் மாவட்டதிற்கு அரிசி கொண்டு வருவதற்கு அனுமதியளிக்கபட்டுள்ளது.

* வடமாகாணத்திற்கான அரிசி இருப்பை உறுதிபடுத்தும் பொருட்டு ஏனைய மாகாணங்களுக்கு அரிசி கொண்டு செல்வது தொடர்பாக உரிய மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

ஐஸ் தொழிற்சாலை

* மீன் பிடி தொழிலுக்கு தேவையான ஐஸ் கட்டிகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியளிக்கபட்டுள்ளது.

மருந்தகம்

* மருந்தகங்கள் ஊரடங்கு நேரத்தில் திறந்திருக்கும்

* வைத்திய மருத்துவ குறிப்பேடு மற்றும் கிளினிக் கொப்பிகளுடனும் சென்று மருந்துகளை பெற்றுகொள்ளலாம்.

* கிளினிக் கொப்பியுடன் அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு செல்ல நோயாளர்களிற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது.

இவ்வொழுங்குகளை யாழ் மாவட்டத்தில் உடனடியாக நடைமுறைப்படுத்துவதுடன் ஏனைய மாவட்ட அரசாங்க அதிபர்கள் தங்கள் மாவட்ட பாதுகாப்புபடையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று நடைமுறை படுத்துமாறும் அரசாங்க சுற்று நிரூபங்கள் மற்றும் தற்போதுள்ள விசேட நடைமுறைகளுக்கு அமைவாக இந் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.