ஐ.நா பணியாளர்கள் 86 பேர் கொரோனாவால் பாதிப்பு

கோவிட்-19 வைரசின் தாக்கத்திற்கு தமது பணியாளர்கள் 86 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை நேற்று (28) தெரிவித்துள்ளது.

ஆசியா, அமெரிக்கா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும் ஐரோப்பாவிலேயே அதிக பணியாளர்கள் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர் என ஐ.நாவின் பேச்சாளர் ஸ்ரீபேன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஸ்பெயினில் 9,444 சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று வரையில் அங்கு 5,000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும், 65,700 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.