சிறீலங்கா மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை-அனைத்துலக நீதியாளர் அமைப்பு

சிறீலங்கா இராணுவச் சிப்பாயான சுனில் ரட்நாயக்காவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு என்பது சிறீலங்கா மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக அனைத்துலக நீதியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தகைய மன்னிப்பு என்பது அனைத்துலக நீதி விதிகளுக்கு முரனானது, எவ்வளவு பாரதூரமான குற்றங்களைச் செய்தாலும் படையினர் நீதிக்கு விதிவிலக்கானவர்கள் என்பதையே இது காட்டுகின்றது என அனைத்துலக நீதியாளர் அமைப்பின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பிரடெறிக் றவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீதான நீதிக்குப்புறம்பான படுகொலைகள் போன்ற தீவிர குற்றங்களுக்கு அனைத்துலக சட்டங்களில் மன்னிப்புக்கள் வழங்கப்படுவதில்லை. மக்கள் கொரோனா வைரஸ் இன் தாக்கம் தொடர்பான அச்சத்தில் உள்ளபோது அவர்களின் மனங்களை மேலும் பாதிக்கும் வண்ணம் இந்த விடுதலை அமைந்துள்ளது.

சிறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது சிறீலங்கா அரசு. தான் அரச தலைவராக பதவியேற்றால் படையினர் எவரும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்ற தனது உறுதிமொழியை தங்போதைய அரச தலைவர் நிறைவேற்றியுள்ளார். சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.