கார்த்திகைக் காந்தள்- கவிபாஸ்கர்
கார்த்திகைக் காந்தள்
உப்புக் கண்ணீர்
ஈரத்தில்..
குருதிக் காயாத
கறையோடு
முள்ளிவாய்க்காலில்
மூடப்பட்ட- எம்
உறவின்
எலும்புக் கூடுகளின்
வழியாய்..
எழும்புகிறது
எம் மாவீரர்களைப் போலவே
காந்தள் பூ!
இன அழிப்பில்
இறந்த காந்தள்
மாவீரர் நாளில்
முட்டி முளைத்து
நிமிர்கிறது..
விடுதலை திறப்பின்
அடையாளமாய்!
கார்த்திகைப்
பனிச்சாரலிலும்
முற்றத்து ஓரங்களிலும்
முன்னிலும்
பெரிதாய் சுடர் விடுகிறது
தமிழீழம் நோக்கிய
காந்தள்!
உலகில்
வாசனை பரப்பவே
பூத்த பிற பூவெல்லாம்
தலைகுனிந்தது…
தன் மண்ணை வணங்க
தலை நிமிரும்
காந்தள்...
ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே -மாரீசன்
ககனத்தில் உலவி வரும் தியாகிகளைப் பாடு குயிலே
இன்சுவையி லிசைபாடும் மாந்தோப்புக் குயிலே
மாங்கனியின் சுவையினினும் உனது குரல் இனிதே
தேன்சொட்டும் குரலினிலே கவியொன்று பாடி
மாவீரர் தியாகத்தைப் புகழ்ந்திடுவாய் குயிலே
பூவெங்கும் புகழ்பரப்பும் தலைவன்குரல் கேட்டு
ஆவேசங் கொண்டுடனே ஆயுதங்க ளேந்தி
சாவொன்றும்...
இன அழிப்பு அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது: அருட்பணி லியோ ஆம்ஸ்ரோங்
“எமது இனத்தின் மேல் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்ற இன அழிப்பு அடிமைத்தன சங்கிலி இன்றும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது” என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத் தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு கிழக்கு பொதுக்கட்டமைப்பின்...
‘ஆளுமையுள்ள தலைமை தொடர்பில் தமிழ் மக்களை சிந்திக்க வைத்தவர்’ தலைவர் பிரபாகரன்
இலங்கையின் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு 'புரட்சியாளன்'. விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகவும், அதன் தலைவரை பயங்கரவாதியாகவும் இலங்கை அரசு உருவகப்படுத்தியுள்ள போதிலும், இந்த நாட்டின்...
வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு – இலக்கும் போக்கும் – பொன்னையா விவேகானந்தன் – கனடா
பொன்னையா விவேகானந்தன் - கனடா
வாழிட நாடுகளில் மரபுரிமை விழிப்புணர்வு: தமிழர் வரலாற்றில் தைத்திங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. வாழ்வாதாரத்தின் அடித்தளமாகத் திகழ்ந்த உழவுத்தொழிலைப் போற்றிய தமிழர், தைத்திங்களையே அறுவடைக் காலமாகக் கொண்டனர். வாழ்வை வளப்படுத்தும்...
இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன்
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை
2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சமாதானம் முழுமை பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் இலங்கை மக்களின்...
‘பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்பாதை காட்டிடும் புறப்பட்டு வா’-றோய்
பிரம்மஞானியின் பாதச்சுவடுகள்
பாதை காட்டிடும் புறப்பட்டு வா....
ஈழத்தை நோக்கிப்
பயணித்த பாதங்கள்
இடையினில் நிக்குது
பாரடா இளைஞனே
தேசத்தின் குரலாய்
அகிலத்தில் ஒலித்த
புரட்சிக் குரலது
கேட்குதா உனக்கு...
ஈரேழு வருடங்கள்
கடந்திட்ட போதும்
ஓயாமல் நின்று
அழைக்குது பாரு
அன்ரன் பாலசிங்கம்
அண்ணணாய் ...
அரசியல் ஆசானாய் ...
தத்துவ மேதையாய்த்
தமிழீழக் கனவுடன்
ஓயாது உழைத்தவர்
இன்றைக்குத்...
ஈகை. முத்துக்குமார் நினைவாக… | பகுதி 2 | பெ. தமயந்தி (வழக்கறிஞர்) சென்ற வாரத் தொடர்ச்சி….. |
ஈகை முத்துக்குமார்: உண்ணாவிரதத்தை யெல்லாம் தூக்கியெறிந்து விட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல்...
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள கல்வெட்டு பாதுகாக்கப்படுமா…? – ஹஸ்பர் ஏ ஹலீம்
ஈழத்தில் பாடல் பெற்ற சிவத் தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் என்னும் இரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறு பன்னெடுங் காலமாக அகில உலகச் சைவ மக்களின் நெஞ்சில் நிலை பெற்றிருப்பது போன்று, ஈழ...
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்வைச் சொல்லும் ‘மேதகு’ திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கையைச் சொல்லும் 'மேதகு' திரைப்படம், BS value OTT தளத்தில் இன்று வெளியானது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் ஆரம்பகால வாழ்க்கை வரலாற்றைப் பதிவு...