83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி: பகுதி 1

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி

அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம் யூலை இனப்படுகொலை சம்பந்தமாக அவர் வழங்கிய சிறப்பு நேர்காணல்

கறுப்பு யூலை (Black July)
கேள்வி?
திருநெல்வேலியில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட பாதுகாப்புத் தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டது தான் 83 யூலை இனப்படுகொலைக்குக் காரணம் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?

பதில்!
உண்மையில் அப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு தொடர் செயற்பாட்டின் விளைவு என்று தான் நாங்கள் கூறலாம். இதற்கு முன்னர் மிக நீண்ட காலமாக, எப்போது ஆட்சி அதிகாரம் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு கைமாற்றப்பட்டதோ அந்தக் கைமாற்றப்பட்ட காலத்திலிருந்து தமிழ் மக்களை கட்டமைப்பு ரீதியாக அழிக்கும் செயற்பாடு ஆரம்பமாகி விட்டது.

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்திஇது உண்மையில் டொனமூர் அரசியல் யாப்புக் காலத்திலிருந்தே உருவாகி விட்டது. பின்பு சோல்பரி அரசியல் யாப்பு, சுதந்திரத்துக்கு பின்னர் கட்டமைப்புசார் இனவழிப்பினை மிக மோசமாக செய்து கொண்டு வந்தார்கள். நிலப் பறிப்பு, மொழிப் புறக்கணிப்பு, கலாச்சார அழிப்பு, பொருளாதார சிதைப்பு என தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதையே அழித்துக் கொண்டு வந்தார்கள். இந்த அழிப்பினுடைய ஒரு உச்ச வடிவம் தான் இந்த இனப் படுகொலை.

உண்மையில் அப்படி நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. இது ஒரு தொடர் செயற்பாட்டின் விளைவு என்று தான் நாங்கள் கூறலாம். இதற்கு முன்னர் மிக நீண்ட காலமாக, எப்போது ஆட்சி அதிகாரம் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு கைமாற்றப்பட்டதோ அந்தக் கைமாற்றப்பட்ட காலத்திலிருந்து தமிழ் மக்களை கட்டமைப்பு ரீதியாக அழிக்கும் செயற்பாடு ஆரம்பமாகி விட்டது.

இது உண்மையில் டொனமூர் அரசியல் யாப்புக் காலத்திலிருந்தே உருவாகி விட்டது. பின்பு சோல்பரி அரசியல் யாப்பு, சுதந்திரத்துக்கு பின்னர் கட்டமைப்புசார் இனவழிப்பினை மிக மோசமாக செய்து கொண்டு வந்தார்கள். நிலப் பறிப்பு, மொழிப் புறக்கணிப்பு, கலாச்சார அழிப்பு, பொருளாதார சிதைப்பு என தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதையே அழித்துக் கொண்டு வந்தார்கள். இந்த அழிப்பினுடைய ஒரு உச்ச வடிவம் தான் இந்த இனப் படுகொலை.

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி:

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்திஉண்மையிலே இதை ஒரு இனக் கலவரம் என்றும் சொல்ல முடியாது. இனக் கலவரமென்றால், இரண்டு பக்கத்துக்கும் அழிவு இருக்கும். இதில் தமிழ் மக்கள் ஒன்றுமே செய்யவில்லை. சிங்களக் காடையர்கள் தான் அழித்தார்கள். எனவே நாங்கள் இதை ஒரு இன அழிப்பாகப் பார்க்க வேண்டுமே தவிர இதை நாங்கள் ஒரு இனக் கலவரமாகப் பார்க்க முடியாது. அத்துடன் இந்த 13பேர் கொல்லப்பட்ட விடயம் அவர்களுக்கு ஒரு நல்ல சாட்டாகவும் நல்ல சந்தர்ப்பமாகவும் அமைந்தது.

1983 யூலை இனப் படுகொலையால் (Black July)சொல்லப்பட்ட செய்தி ஒரு தேசமாக இருக்க நினைத்தால் உங்களை அழிப்பதற்கு நாம் தயங்க மாட்டோம்

அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தான் அவர்கள் இந்த இனப் படுகொலையை செய்திருக்கிறார்கள் என்று தான் நாங்கள் கூற வேண்டும். இப்படித் தான் 58 இனக் கலவரத்திற்கும் 77 இனக் கலவரத்திற்கும் அவர்கள் ஏதாவது காரணங்களைச் சொல்வார்கள். 58 இனப் படுகொலைக்கு தமிழர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியதா காரணம்? 77 இனப் படுகொலைக்கு களியாட்ட விழாவில் நடந்த ஒரு சிறிய சர்ச்சை தான் காரணம் என்று நாங்கள் சொல்ல முடியுமா? ஆகவே இது ஒரு திட்டமிட்ட செயற்பாட்டின் விளைவு என்று தான் நான் பார்க்கிறேன். அதுவும் குறிப்பாக இனப்பிரச்சினை என்பது, தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக இருப்பதை அழிப்பது தான். ஆகவே இந்த அழித்தல் செயற்பாட்டினுடைய உச்ச வடிவம் தான் இந்த இனப் படுகொலை. இதனை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

கேள்வி?
இந்தக் கலவரத்தின் (Black July)மூலமாக சிங்களத் தரப்பினர் எவ்வாறான ஒரு செய்தியை தமிழ் மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள?

பதில்!
சிங்களத் தரப்பினர் கூறுவது என்னவென்றால், நீங்கள் ஒரு தேசிய இனமாக இருக்க முடியாது. நீங்கள் வேண்டுமென்றால், அதிகாரங்கள் எவற்றையும் கோராத ஒருசிறு இனமாக இருந்து விட்டுப் போங்கள். அப்படி இருக்க விட்டதே சிங்களத் தரப்பினுடைய பெருந்தன்மை என்று தான் அவர்கள் கருதுகிறார்கள். ஏனெனில், சிங்களச் சமூகம் கட்டியெழுப்பப்பட்டதே சிங்கள பௌத்த  கருத்து நிலையால் தான். இந்த சிங்கள பௌத்த கருத்தியலால் தான் சிங்கள சமூக உருவாக்கமே நடக்கிறது. இந்த சமூக உருவாக்கத்திலிருந்து தான் அரசு உருவாக்கம் நடக்கின்றது. இந்த அரசியல்வாதிகள் எல்லாம் சமூக உருவாக்க கருத்து நிலைக்குமேல் குந்திக் கொண்டார்கள்.

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்திஅப்படிக்  குந்திக்  கொண்டதனால் இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியதென்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே இந்தக் இனப்படு கொலையால் தமிழ் மக்களுக்குச் சொல்லப்பட்ட செய்தி என்னவென்றால், நீங்கள் ஒரு சிதைந்த இனக் குழுவாக இருக்கிறதென்றால் இருங்கோ. அதுவும் கூட நாங்கள் பெருந் தன்மையோடு விட்டுத் தருகிறோம். ஆனால் நீங்கள் ஒரு தேசமாக இருக்க நினைப்பீர்கள் என்று சொன்னால், உங்களை அழிப்பதற்கு நாங்கள் தயங்கமாட்டோம் என்ற செய்தியைத் தான் உண்மையில் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள் என்று தான் நான் கருதுகிறேன்.

கேள்வி?
சிங்கள மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய முற்போக்கு சக்திகளால் இந்தக் காலப் பகுதியில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய வகையில்  செயற்பட முடியாமற் போனதற்கு என்ன காரணம் எனக் கருதுகின்றீர்கள்?

பதில்!
ஏற்கனவே நான் கூறியது போல சிங்கள சமூகத்தை இயக்குவது சிங்கள பௌத்த கருத்து நிலை தான். ஆகவே இந்த சிங்கள பௌத்த கருத்து நிலைக்கு வெளியில் நிற்கிறவர்கள் எவருக்குமே அரசியல் இருப்பு இல்லை. இது தான் உண்மையான விடயம். இடது சாரிகளும் கூட – சிங்கள முற்போக்கு சக்திகளாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகள் தான். அரசியல் கட்சிகளும் இருக்கிறார்கள். சிங்கள சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.  இவர்கள் எல்லாரும் ஆரம்பத்தில் தமிழ் மக்களுக்கு சார்பாக கதைப்பார்கள். கதைத்தார்கள்.

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்திகுறிப்பாக  தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, கொல்வின் ஆர் டி சில்வா ஒரு மொழி இரு நாடு வேண்டுமா? அல்லது இரு மொழி ஒரு நாடு வேண்டுமா என்று எல்லாம் கர்ச்சித்தார்கள். ஆனால் அவர் தான் தமிழ் மக்களை அரச அதிகாரத் திலிருந்து முழுமையாக நீக்கும் யாப்பை 72ஆம் ஆண்டு உருவாக்கினார். ஆகவே அவர்களும் சிங்களப் பெருந் தேசிய வாதத்தின் கைதிகளாக இருக்கிறார்கள். கைதிகளாக இருப்பதனால் அவர்களாலும் இதில் எதையும் செய்ய முடியாத சூழல் தான் அங்கு இருக்கின்றது. தமிழ் மக்களுக்கு சார்பாக இருந்தால் அவர்கள் சிங்கள மக்களால் துரோகிகளாகக் கணிக்கப் படுவார்கள். துரோகிகளாக இருந்து கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் வேலை செய்ய முடியாது.

இன்று தமிழ் மக்கள் மீது கொஞ்சமாவது அக்கறையாக இருப்பவர்கள் எல்லாரும் சிங்கள தரப்பில் துரோகிகளாகத் தான் பார்க்கப்படுகின்றார்கள்.   ஆகவே அந்தப் பயத்திற்காக – உண்மையில் முற்போக்கு சக்திகள் என்று நாங்கள் கூறிக் கொள்கின்ற இடதுசாரிகள் உட்பட மற்றைய தரப்புகள் எல்லாமே ஒன்றில் மௌனமாக இருக்கிறது அல்லது பெருந் தேசியவாதத்தோடு தங்களுடைய இருப்புக்காக இணைந்து கொள்கிறது.

பல புத்திஜீவிகள். தயான் ஜயதிலக, குமார் ரூபசிங்க உட்பட பலர் எங்களுக்கு நேரடி அனுபவத்தில் இருக்கிறார்கள். அவர்களும் ஆரம்பத்தில் நல்லதாகத் தான் பேசினார்கள். ஆனால் அவர்களும் பின்னர் பெருந்தேசிய வாதத்திற்குள் செல்கிற ஒரு சூழலைத்தான் நாம் பார்க்கிறோம். இதற்குமையமான காரணம் என்னவென்று சொன்னால், அந்தப் பெருந்தேசியக் கருத்தியல் ஆட்சி நிலையில் இருக்கிறபடியால் அவர்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர் என்பது தான் உண்மையில் அடிப்படையான கருத்து என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி?
தமிழ் மக்களின் அரசியல் போக்கில் இந்த இனப் படுகொலை (Black July) எவ்வாறான ஒரு தாக்கத்தை அல்லது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது?

பதில்!
உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் 83 யூலை இனப் படுகொலை தான் உண்மையில் பிரிவினைக் கோடு என்று சொல்லலாம். இதற்குப் பிறகு இலங்கை என்கின்ற ஒற்றையாட்சி அதிகாரக் கட்டமைப்பிற்குள்ளே நாங்கள் இருக்க முடியாது என்கின்ற நிலைக்கு தமிழ்ச் சமூகம் முழுக்க வந்தது. இதற்கு முன்னரே அரசியல் சக்திகள் வந்தது விட்டார்கள் என்பது வேறு விடயம். 1968ஆம் ஆண்டு தமிழர் விடுதலை இயக்கம் தொடங்கியது அது தனி நாட்டுக் கோரிக்கையை வைக்கிறது. அத்துடன் அரசியல் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கினார்கள்.

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி
தமிழீழத் தீர்மானம்

70இல் தமிழ் மாணவர் பேரவை 73இல் தமிழ் இளைஞர் பேரவை வருகிறது. அதற்குப் பிறகு ஆயுத இயக்கங்கள் வருகிறது. 77இல் ஆயுத இயக்கங்கள் வந்தது. 1976இல் தமிழர் விடுதலைக் கூட்டணி அவர்களின் போக்கோடு இணங்கிப் போக வேண்டும். என்பதற்காக அவர்கள் தமிழீழத் தீர்மானம் எடுக்கிறார்கள். 77ஆம் ஆண்டுத் தேர்தலை தமிழீழத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பென்றுதான் சொல்கிறார்கள். கல்குடா தேர்தல் தொகுதியை விட  ஏனைய தேர்தல் தொகுதிகளிலும் 50 % இற்கு மேல் அவர்கள் எடுத்திருந்தார்கள். இதில் போட்டியிட்ட ஏனைய தமிழ் தேசிய ஆதரவுக் கட்சிகளின் வாக்குகளையும் சேர்க்கின்ற போது அண்ணளவாக 62.5 வீதமான வாக்குகள் தனிநாட்டிற்கு ஆதரவாக கிடைக்கின்றது.

இந்த அரச அதிகாரக் கட்டமைப்பிற்குள் இருக்க முடியாது என்ற முடிவிற்கு தமிழ்ச் சமூகமாக வருகிறார்கள். தனியாக இருக்கின்ற செயற்பாட்டை நோக்கி அவர்கள் முன்னேறுகிறார்கள். அதற்கான ஒரு பிரிந்த கோடாக இந்தக் கலவரம் இருந்தது என நம்புகிறேன். ஏனெனில். 58, 77ஆம் ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 83 யூலை இனப் படுகொலையின் வித்தியாசம் என்ன வென்று சொன்னால், இந்த 83 யூலை இனப் படுகொலை மட்டும் ஒரு பிரிவினைக் கோடாக இருந்ததை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

இலங்கை குறித்த சர்வதேசத்தின் பார்வை
கேள்வி?
இலங்கை குறித்த சர்வதேசத்தின் பார்வையில் இந்த யூலை இனப் படுகொலை ஏற்படுத்திய தாக்கம் (Black July) என்னவென்று கூறமுடியுமா?

பதில்!
இலங்கை குறித்த சர்வதேசத்தின் பார்வை, சர்வதேசம் அதற்குப் பிறகு தான் இங்கு இனப்பிரச்சினை ஒன்று இருக்கிறது. அல்லது இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்கின்ற ஒரு முடிவிற்கு வருகிறார்கள்.  சர்வதேசத்தை ஆகப் பாதித்த விடயம் வெலிக்கடை படு கொலை தான். அரச பாதுகாப்பில் இருந்த அரசியல் கைதிகள் சிறைக் காவலர்களினதும், படையினரதும் ஒத்துழைப்போடு படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விடயம். இதற்குப் பின்னர் தான் தமிழ் மக்களின் அரசியல் விவகாரத்தை சர்வதேசம் அவதானிக்கத் தொடங்கியது.

83 யூலை இனப் படுகொலையால் சொல்லப்பட்ட செய்தி
சிங்கள கடற்படை அணிவகுப்பில் தாக்கப்பட்ட ராஜீவ் காந்தி

இலங்கை குறித்த சர்வதேசத்தின் பார்வை, இலங்கையின் வெளிநாட்டு உறவுகள் படுமோசமாக வீழ்ச்சி யடைந்திருந்தது. தங்களின் சார்பாக உலகைத் திருப்புவதற்கு சரியாக கஸ்டப் பட்டார்கள். அதனை மீண்டும் நிவர்த்தி செய்தவர் லக்ஸ்மன் கதிர்காமர் தான். சர்வதேசம் இலங்கை மீது ஒரு கறுப்பு அடையாளத்தைப் போட்டதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால் துரதிஸ்டம் என்னவென்றால் இந்த அபிப் பிராயங்களை ஒன்றுதிரட்டி, அதனை ஒரு அரசியலாகக் கொண்டு செல்லக் கூடிய வகையில் எங்களின் அரசியல் தலைமை அன்று எழுச்சியடைந் திருக்கவில்லை.

ilakku-weekly-epaper-140-july-25-2021