Home Blog Page 3101

வரணி விவகாரத்தை அடுத்து சைவத்திருக் கோவில்களுக்கான பொது ஒழுக்கக் கோவை தயாரிப்பு

வரணி விவகாரத்தை அடுத்து நல்லை, தென் கைலை ஆதீனங்களின் அருள் வழிகாட்டலுடன் சைவத்திருக் கோவில்களுக்கான பொது ஒழுக்கக் கோவை, யாப்பு , நடைமுறைகள் என்பன தொடர்பாக ஆராய நிபுணர் குழு அமைக்கப்படவுள்ளது. ஆதீனங்களும், முக்கிய அகில இலங்கை ரீதியான சைவ அமைப்புக்களும் இணைந்து இம் முடிவை மேற்கொண்டுள்ளன.

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற துன்பியல் நிகழ்வுகள் போன்று நடைபெறாது தடுத்தல்,

ஆலயங்களை பொருள் பொதிந்த சமூக மையங்களாக மாற்றியமைத்தல்,

ஆலயத்தை ஆதரிக்கும் ஏழை மக்களிற்கு ஆலய வருமானத்தின் ஓர் பகுதி பயன்படும் வகையில் அறப்பணி நிதியத்தை தாபித்தல்,

ஆலய தொன்மம் பாதுகாத்தல், வெளிப்படைத் தன்மையான சனநாயக ரீதியிலான தவணை அடிப்படையிலான நிர்வாகத் தெரிவு,

சமய, சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் தான்தோன்றினமான தனிநபர் முடிவுகளை கட்டுப்படுத்தல்,

கூட்டு வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தல், ஆலயத்தினால் கேளிக்கைகள் வீண் ஆடம்பரங்கள் நிகழ்த்தப்படுவதை கட்டுப்படுத்தல்,

ஆலயச் சூழலின் புனிதத்தை பாதுகாத்தல்

போன்ற முக்கியமான விடயங்களில் நிபுணர்கள் ஒழுக்க கோவை தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கவுள்ளனர்.

2020 தைப்பூசத்திற்கு முன்னதாக நிபுணர் குழுவின் பரிந்துரைகள் ஆதீனங்கள், அகில இலங்கை ரீதியான சைவ அமைப்புக்கள் உள்ளிட்ட சமய உயர் பீடங்களிடமும் இந்துக் கலாச்சார அமைச்சு, மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு உள்ளிட்ட அரச உயர் பீடங்களிடமும் கையளிக்கப்படும்.

2019 மார்கழிற்கு முன்னதாக நிபுணர் குழுவிடம் நேரிலோ தபால், மின்னஞ்சல் மூலமாகவோ சைவ சமயிகள் தங்கள் பரிந்துரைகளையோ சாட்சியங்களையோ வழங்கலாம்.

வெகு விரைவில் நிபுணர் குழு விபரம், தொடர்பு முகவரி, இலக்கங்கள் அறிவிக்கப்படும். உங்களுடைய ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சிங்களச் சிறுவர்களின் இனப்பற்று – தலைகுனிந்த தமிழர்கள்

யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பொரும்பான்மை சிங்கள இனச் சிறுவர்கள் கடற்கரை மணலில் பேரினவாத சிங்கள மக்களின் அடையாளமாகத் திகழும் பௌத்த ஆலயங்களின் உருவங்களை உருவாக்கி விளையாடியது தமிழ் மக்களிடம் பெரும் ஆச்சரியங்களைத் தோற்றுவித்துள்ளது.

சிறீலங்காவை முழுமையான சிங்களத் தீவாக மாற்றவேண்டும் என அரச தலைவர் உட்பட சாதாரண சிங்கள இன குடிமகன் வரை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுவருகையில் சிங்கள இனச் சிறுவர்களின் மனங்களில் உள்ள இனப்பற்று சுற்றுலாச் சென்ற சக தமிழ் மக்களிடம் பெரும் ஆச்சரியத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் நிலங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள இன மக்கள் தமது அடையாளமாக பௌத்த ஆலயங்களை அமைத்துவருவது நாம் அறிந்ததே.

singala tour சிங்களச் சிறுவர்களின் இனப்பற்று – தலைகுனிந்த தமிழர்கள்

சிறீலங்காவில் நடைபெற்ற இனஅழிப்புக்கு சர்வதேச விசாரணை நடாத்த ஐ.நாவிடம் கோரிக்கை – கனடிய எதிர்கட்சி

கனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட் ஜெனஸ் MP Garnett Genius ; அவர்களால், கனடிய வெளியுறவு மற்றும் பல்நாட்டு அபிவிருத்திக்கான பாராளுமன்றக்குழுவில் முன்மொழியப்பட்டு அனைத்துக்கட்சிப் பாராளுமன்ற பிரதிநிதிகளாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வரைபு பின்வருமாறு:

தற்போது செயற்பாட்டிலுள்ளவெளிநாட்டு அலுவல்கள் மற்றும்சர்வதேச முன்னேற்றத்திற்கானகுழுவால், கனடிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் கோரிக்கை வருமாறு:

1. சிறீலங்காவில் வன்முறைகள் மற்றும்பேர்ரினால் பாதிப்புற்ற அனைவருக்கும் எமது கவலையைத் தெரிவிக்கிறோம்.

2. அண்மைக் காலத்தில் சிறீலங்காவில் முஸ்லிம்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிப்பதுடன், அடிப்படை மனித உரிமைகளை மதித்தவாறு இனவாதமற்றும் தீவிரவாத செயற்பாடுகளை தடுக்க அதிகரித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறீலங்கா அரசைவேண்டுகிறோம்.

3. உயிர்ப்பு ஞாயிறு தாக்குதலில்பாதிப்படைந்தோருக்கு நீதி வழங்கசிறீலங்கா அரசு முனையவேண்டும், அத்துடன் சமயத் தலங்களைப்பாதுகாப்பதற்கும் மதரீதியானசிறுபான்மை இனங்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

4. ஐநா மனித உரிமை சபையின் தீர்மானங்களான 30-1 மற்றும் 40-1 என்பவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்படும் காலக்கெடுவுக்குள் சிறீலங்கா தனது கடப்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமென்ற கனடியநிலைப்பாட்டை மீளவும்உறுதிசெய்வதுடன், அந்நாட்டில் வாழும்அனைத்து இன மக்களுக்குமானஅமைதி, இணக்கப்பாடு மற்றும்பொறுப்புக்கூறல் என்பவற்றை முன்னெடுப்பதில் கனடாவின் ஆதரவு தொடருமெனவும் உறுதிகூறுகிறோம்.

5. 2009 போரின் இறுதிப்பகுதி உட்பட, தமிழர்களுக்கெதிராக சிறீலங்காவில் நடைபெற்றிருக்கக்கூடிய இன அழிப்புக்குசுதந்திரமான சர்வதேச விசாரணைநடாத்துவதற்கு ஐநா சபையைக்கோருகிறோம்.

6. சட்டக்கோவை 109ற்கு அமைய, கனடிய அரச சபையில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதுடன், இந்தஅறிக்கைக்கு அரசாங்கம் விரிவானபதிலை வழங்க வேண்டு மென்றும் கோருகிறோம்.

நீராவியடியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பௌத்த மயமாக்க இரகசியத் திட்டம் – நவநீதன்

பிள்ளையார் கோவில் விவகாரம் தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்தப் பகுதி பதற்றமாகவே இருக்கின்றது. அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் இவ்வார ஆரம்பத்தில் நிலைமைகளை நேரில் ஆராய்வதற்காக அந்தப் பகுதிக்குச் சென்றிருந்தார்கள். அந்தப் பகுதியை ஆக்கிரமித்து புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துவிட்டு, பாரிய கட்டுமாணப் பணிகளை அமைப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாகவுள்ள பிக்கு, சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காமல் எந்தளவுக்கு அடாத்தாகச் செயற்படுகின்றார் என்பதை அவர்களினாலும் அவதானிக்க முடிந்தது.

போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் சென்றுள்ள நிலையில், புதிய வடிவத்தில் முன்னெடுக்கப்படும் இந்த வகையான ஆக்கிரமிப்பு வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களின் இருப்பைக் கேள்விக்குறியாக்குவதையே இலக்காகக் கொண்டது. செம்மலைப் பகுதியின் அமைதியைக் குலைத்துள்ள குறிப்பிட்ட பிக்கு, உண்மையிலேயே ஒரு பௌத்த துறவியா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கின்றது. ஏனெனில் இத்துறவியின் இரண்டு பிள்ளைகள் இங்கிலாந்தில் கல்வி கற்பதாகச் சொல்லப்படுகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலமாக விளங்கிய நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளவில் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன் கடந்த சனவரியில் புத்தர் சிலை அமைக்கப்பட்டதுடன்தான் இங்கு பிரச்சினை ஆரம்பமாகியது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலேயே, காவல் துறையினரின் ஆதரவுடன் அந்த புத்தர் சிலை திறந்துவைக்கப்பட்டது. பௌத்த மதத்தைப் பின்பற்றும் எவரும் வசிக்காத அந்தப் பகுதியில், புத்தர் சிலை அமைக்கப்பட்டது, அந்தப் பகுதியை சிங்கள மயப்படுத்துவதை விட வேறு நோக்கங்களுக்காக இருக்க முடியாது.

இதற்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இரண்டு தரப்பும் அங்கு வழிபாட்டில் ஈடுபடலாம் எனவும், ஆனால், அபிவிருத்தி கட்டுமாணப் பணிகளில் ஈடுபடுவதாயின் உரிய உள்ளூர் அமைப்புக்களின் அனுமதியுடனேயே அதனைச் செய்யலாம் எனவும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில், அங்குள்ள தற்போதைய நிலை என்ன என்பதையிட்டும், அமைச்சர் மனோ  கணேசன் அங்கு மேற்கொண்ட விஜயம் குறித்தும், “தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர் வீ.நவநீதனிடம் கேட்டோம். அவர் தெரிவித்ததாவது:

“கோவில் தரப்பைப் பொறுத்தவரையில் அந்தக் காணி எம்முடையதுதான் என்பதை உறுதிப்படுத்தும் கடிதமும், பிரதேச சபையின் அனுமதி போன்றவற்றைப் பெற்றுத்தான் வேலைகளைத் தொடங்கியிருந்தோம். ஆனால், பிக்குவைப் பொறுத்தவரையில், அவ்வாறான ஆவணங்களோ அனுமதியோ இல்லாமலே கட்டுமாணப் பணிகளை முன்னெடுத்திருந்தார். இது குறித்து நாம் காவல் துறையினருக்கு பல தடவை முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அமைச்சர் மனோ கணேசன் கடந்த செவ்வாய்க்கிழமை இங்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதும் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அப்போது, நாம் நீதிமன்ற உத்தரவின்படியே செயற்படுகின்றோம் என்பதையும், பிக்கு அவ்வாறில்லாமல் கட்டுமாணப் பணிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தபோது, காராசாரமான விவாதம் ஒன்று அங்கு இடம்பெற்றது.

அதன்பின்னர் அரச அதிபர், உதவி அரசாங்க அதிபர் ஆகியோர் இந்த விடயத்தில் தலையிட்டு தற்போதுள்ள கட்டுமாண வேலைகள் குறித்து ஒளிப்பதிவு ஒன்றைச் செய்யுமாறு மனோ கணேசன் கேட்டிருந்தார். அதன்படி அவ்வாறான ஒளிப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவின்படி அனுமதியில்லாமல் புதிய கட்டுமாணப் பணிகள் எதனையும் செய்ய முடியாது. உரிய அனுமதியுடன் வரும் தரப்பை, கட்டுமாணப் பணிகளைச் செய்வதற்கு காவல் துறை ஒத்துழைக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.”

அவர் இலக்கு மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணலின் முழுவடிவம் வருமாறு:

கேள்வி: இது தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட ஒரு பகுதியா?

neeraviyady நீராவியடியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பௌத்த மயமாக்க இரகசியத் திட்டம் - நவநீதன்நவநீதன்: கோவில் உள்ள பகுதியை தாம் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி என தாம் பிரகடனம் செய்யவில்லை என தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளரே பகிரங்கமாகச் சொல்லியிருக்கின்றார். ஆனால், வீதியின் எதிர்ப்பக்கத்தில் விடுதலைப் புலிகளின் காலத்தில் கட்டப்பட்ட கட்டடம் ஒன்று இருந்தது. அது செங்கல்லினால் கட்டப்பட்டது. அந்த செங்கல்லை எடுத்துவைத்துக்கொண்டு அதனை தொல்பொருள் என்று சொல்கின்றார்கள். 2013 ஆம் ஆண்டு இந்தப் பகுதியை தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகப் பிரகடனப்படுத்துவதாக வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வந்தது. அது முறையாக நீலஅளவீடு செய்யப்பட்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு அல்ல. அத்துடன் இடமும் செட்டிமலை என்றே போடப்பட்டிருக்கின்றது. செட்டிமலை என்று ஒரு இடம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இல்லை. அதனால், அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என நாம் நீதிமன்றத்தில் சொன்னோம். இப்போது அந்த வர்த்தமானி அறிவிப்பை மாற்றி வெளியிடுவதற்கான முயற்சி ஒன்று இடம்பெறுவதாகவும் அறிய முடிகின்றது.

கேள்வி: அப்படியானால், குறிப்பிட்ட பிக்குவால் செம்மலையில் குடியேறி புத்த விகாரை ஒன்றையும் எவ்வாறு அமைக்க முடிந்தது?

நவநீதன்: தொல்லியல் திணைக்களத்தின் செம்மலைக்கு வந்திருந்தார். அவரது செயற்பாடுகளுக்கு வவுனியா தொல்லியல் திணைக்களம் முதலில் அனுமதி வழங்கியது. அவர்களின் அனுமதியுடனேயே கட்டுமாணப் பணிகளை தான் ஆரம்பித்ததாகவும் அவர் முதலில் சொல்லியிருந்தார். தொல்லியல் திணைக்களம் கொடுத்த கடிதம் ஒன்றைத் தவிர அவரிடம் இப்போது வேறு எந்த ஆவணமும் அவரிடம் இல்லை.

கேள்வி: வடக்கு கிழக்கில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக எத்தனை இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள? அவை எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றன?

பதில்: வடக்கில் 337 இடங்கள் தொல்லியல் முக்கியத்துவம் மிக்க பகுதிகளாக தொல்லியல் திணைக்களத்தினால், அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் முல்லைத்தீவில் 167 இடங்கள் உள்ளன.  அடையாளம் காணப்பட்ட பெரும்பாலான இடங்களில் செயற்பாடுகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. தொல்லியல் திணைக்களம் எழுந்தமானமாகவே அவற்றைத் தெரிவு செய்கின்றது. அதற்காக முறைப்படி ஆய்வுகள் செய்யப்படுவதில்லை. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாகவே இவை உள்ளன. மணலாறு. கரைத்துறைப் பற்று பகுதிகளில் மட்டும் 47 இடங்கள் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு இணைப்பை கேள்விக்குள்ளாக்குவதும், தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதும்தான் இதன் நோக்கம். அடையாளம் காணப்படும் பகுதிகளில் புத்த விகாரைகளை உடனடியாகக் கட்டுவதும், சிங்கள குடியிருப்புகளை உருவாக்குவதும்தான் அவர்களுடைய திட்டம்.

neeraviyady2 நீராவியடியில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பௌத்த மயமாக்க இரகசியத் திட்டம் - நவநீதன்நீராவியடிப் பகுதியில் கூட, புத்த விகாரைகளைக் கட்டுவது மட்டும் அவர்களுடைய திட்டமாக இருக்கவில்லை. அதனையடுத்துள்ள கடற்பகுதியில் மீனவர் குடியிருப்பு. மற்றப் பகுதியில் விவசாயக் குடியேற்றம் ஒன்றை ஏற்படுத்தி, சிங்களவர்களைக் கொண்டுவருவதுதான் அவர்களின் திட்டம். இங்கு சுமார் 1,000 ஏக்கரில் காணியைப் பெற்று பௌத்த மயமாக்கல் திட்டம் ஒன்று அவர்களிடம் இருந்துள்ளது. இது வெறுமனே குறிப்பிட்ட பிக்குவின் திட்டம் அல்ல. அதன் பின்னணியில் பௌத்த மயமாக்கல் கொள்கை வகுப்பாளர்கள் உள்ளனர்.

கேள்வி:  இந்த பௌத்த மயமாக்கல் திட்டத்தில் இராணுவப் பங்களிப்பு எப்படியுள்ளது?

பதில்: நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதியில் இராணுவ முகாம் இருந்தது. பின்னர் அவர்கள் வெளியேறினாலும், பிள்ளையார் கோவில் இருந்த பகுதியில் புத்தர் சிலையை அமைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தியது அவர்கள்தான். இராணுவம் வெளியேறும்போது அந்தப் பகுதி பிக்குவிடம் கொடுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் இராணுவக் காப்பரண் அமைக்கப்பட்டு புத்தர் சிலையைப் பாதுகாக்கின்றார்கள். வடக்கில் இந்தளவுக்கு பெருமளவில்  பாரிய இராணுவ முகாம்கள் இருப்பதன் மற்றொரு நோக்கம் இவ்வாறான குடியேற்றங்களைப் பாதுகாப்பதும், அதற்கு அனுசரணை வழங்குவதும்தான்.

 

 

“தமிழ் வாழ்க” என்று நாடாளுமன்றில் சொன்னால் போதுமா – இயக்குநர் தங்கபச்சன்

இந்திய நாடாளுமன்றில் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்றதுடன், தமிழ் வாழ்க என்று சிலர் கோஷமிட்டனர். இதனை பெருமையாக பேசி வருகின்றார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்ற பொன் இராதாகிரஷ்ணன் தமிழில் பதவியேற்றுள்ளார் என்பது வரலாறு.

திரைப்பட இயக்குநர் தங்கபச்சன் தன்னுடைய முகநூலில் ஒரு பதிவை எழுதியுள்ளார். அதில், விமானங்களில் இந்தியாவிற்குள் பயணம் செய்யும் போதெல்லாம் நம் மொழி புறங்கணிக்கப்படுவதைக் கண்டு கொதித்திருக்கின்றேன். ஒரு குடிமகனுக்கு இருக்கும் உணர்வுகூட நாள்தோறும் விமானங்களில் பயணம் செய்யும் நம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இல்லாதது வியப்பாக இருக்கின்றது.

இந்நிலையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழாவில் தமிழில் பதவியேற்றுக் கொண்டதை நாம் பாராட்டுகின்றோம்.

இப்படியானவர்கள் புதுடில்லிக்குச் சென்ற விமானத்திலேயே தங்களுடைய எதிர்ப்புக் குரலை எழுப்பி தமிழில் அறிவிப்பை செய்திருக்க வேண்டும். இதுவரை செய்யாமல் போனாலும், இனியாவது அவர்கள் அப்படி தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுத் தரவேண்டும் என தங்கபச்சன் தனது முகநூலில் எழுதியுள்ளார்.

 

ஈரானுடனான முறுகலையடுத்து 1,000 அமெரிக்கப் படையினர்

ஈரானுடனான முறுகல் நிலையைத் தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிக்கு 1,000 படை வீரர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஈரானின் போக்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்நடவடிக்கையை  மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஓமான் வளைகுடாவில் அண்மையில் நடந்த எண்ணெய் தாங்கி தாக்குதலுடன் ஈரான் தொடர்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்தமையை உறுதிப்படுத்துவதற்காக புதிய படங்களை அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ளது. ஈரான் தனது அணுசக்தி பயன்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காக 2015இல் சர்வதேச நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதிக்கு இனி இணங்காது என்று அண்மையில் அறிவித்தது.

ஜுன் 27இற்குள் யுரேனியம் செறிëட்டப்பட்ட இருப்புகளின் பயன்பாட்டு அளவுக் கட்டுப்பாடு தொடர்பாக சர்வதேச நாடுகளுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை தான் மீறவுள்ளதாகவும் ஈரான் அறிவித்துள்ளது. இதன் பின்னரே அமெரிக்கா தனது படையை அதிகரிக்க முடிவு செய்தது.

இது ஈரானுடனான போருக்கான நடவடிக்கை அல்ல என்றும், தங்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கை என்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பாட்ரிக் ஷானஹான் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமக்குக் கிடைத்த உளவுத் தகவல்களை உறுதிப்படுத்துவது போன்றே ஈரானின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும், அதற்கான நடவடிக்கையாகவே இந்த படை குவிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பதற்றமான சூழ்நிலை குறித்த நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து, தேவைப்பட்டால் படைவீரர்களின் அளவில் மாற்றத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இந்த படை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எந்தப் பகுதியில் நிலைநிறுத்தப்படும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

கோத்தபாயாவின் பயண அனுமதி நீடிப்பு

சிறீலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சாவின் வெளிநாட்டு பயண அனுமதியை சிறீலங்கா உயர் நீதிமன்றம் நீடிப்புச் செய்துள்ளது.

டி. ஏ ராஜபக்சா நினைவு தொல்பொருள் மண்டபத்தை கட்டியதன் மூலம் 33 மில்லியன் ரூபாய்களுக்கு மேல் அரச பணத்தை வீணாக செலவு செய்தது தொடர்பில் கோத்தபாயா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வெளிநாட்டுக்கான அவரின் பயணங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன. எனினும் மருத்துவ காரணங்களை காண்பித்தததால் அவருக்கு மே மாதம் 24 ஆம் நாளில் இருந்து ஜுன் 2 ஆம் நாள் வரையிலான பயண அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

ஆனால் சிங்கப்பூருக்கு அறுவைச் சிகிச்சைக்கு சென்றுள்ளதால் தனது பயண அனுமதியை மேலும் நீடிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் கோத்தபாய போட்டியிடவுள்ள நிலையில் அவர் மீது சிறீலங்காவிலும், வெளிநாடுகளிலும் அவசரமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவது நாம் அறிந்ததே.

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை – பலவந்தமாக பணம்பறிக்கும் படையினர்

சிறிலங்கா சிங்கப் படைப்பிரிவின் இராணுவத்தினர் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட 14 நிர்வாகப் பகுதிகளிலும் அதிஸ்டலாபச் சீட்டு விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, பொது மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

படுவான்கரைப் பகுதியில் இராணுவ முகாம்களுக்கு அருகில் வீதியால் செல்லும் மக்களை வழிமறித்து ரூபா 100 பெறுமதியான அதிஸ்டலாபச் சீட்டை கட்டாயமாக வாங்கும்படி கோருவதுடன், வாங்க மறுப்பவர்களை கட்டாயப்படுத்தி மிரட்டி வாங்க வைப்பதாகவும் அப்பகுதி மக்கள் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம் கிடைக்கும் நிதி, போரில் காயமுற்று, ஊனமடைந்துள்ள இராணுவத்தினரின் தேவைக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு  உதவுவதற்கும் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகின்றது.  இந்த விற்பனையில் தரவை பகுதி இராணுவத்தினரே கூடிய கவனம் எடுப்பதாக அறியப்படுகின்றது.

மட்டக்களப்பு படுவான்கரைப்பகுதி போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். படுகொலைகள்,நிலப்பறிப்பு,சொத்தழிவு என சொல்லொணா துன்பங்களை அனுபவித்து இன்று வறுமையின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் இந்த மக்களிடம் சிங்கள படையினர் இவ்வாறு பணம் பறிப்பது மிகவும் கீழ்த்தரமானது.

போர்க்குற்றவாளியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பதவிக் காலம் ஜூன் 22 முடிவடைவதாக இருந்தாலும், சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில் அவரின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் சமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு நிறைவடைந்த போரில் பெருமளவான மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட சில்வா மீது அனைத்துலக நாடுகளில் பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

அவருக்கு எதிராக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகையில் சிறீலங்கா அரசு தொடர்ந்து அவற்றைப் புறக்கணித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தியப் படையின் ரண்வீர் கொழும்பு துறைமுகத்தில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ரண்வீர் என்ற கப்பல் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.

இந்தக் கப்பல் 146 மீற்றர் நீளத்தைக் கொண்டதுடன் 4560 தொன் எடையைத் தாங்கிப் பயணிக்கக் கூடியதுமாகும்.கப்பலின் கட்டளை அதிகாரி ஷேதன் சந்திரதேவ், மேல் மாகாண கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.இக் கப்பலில் 273 இந்தியக் கடற்படையினர் விஜயம் செய்துள்ளனர். இவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.3 நாள் விஜயமாக இலங்கை வந்துள்ள ரண்வீர் எதிர்வரும் 20ஆம் திகதி நாடு திரும்ப உள்ளதாக அறியப்படுகின்றது.