Home Blog Page 2744

முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வு திட்டங்கள் ஒருபோதும் நடக்காது -எச்.எம்.எம்.ஹரீஸ்

ஒரு கையால் தட்டி சத்தம் வராது. இரு கைகளும் இணைந்து தட்டி ஓசை எழுப்ப வேண்டும். முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வு திட்டங்கள் ஒருபோதும் நடக்காது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கல்முனை  பிரதேச செயலக பிரிவில் வசிக்கும் சமூர்த்தி பயனாளிகளுக்கு  உரித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (06) மாலை சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சருமான தயா கமகே அவர்கள் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் கல்முனை பிரதேச செயலாளர் திரு எம்.எம்.நஸீர், கல்முனை தொகுதி ஐ.தே. க. அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ரஸாக், கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி, சமூர்த்தி திணைக்கள உயரதிகாரிகள், சமூர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் 1100  பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்,
ஸஹ்ரான் எனும் சிறிய குழுவினர் செய்த தாக்குத்தலின் பின்னராக அண்மைய காலங்களில் எமது மக்களின் மீது நடக்கும் அநீதிகள் மனவேதனையாக உள்ளது. ஹபாயா, ஹிஜாப் அணிவதில் எமது பெண்களுக்கு வந்த சிக்கலையும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளாகிய  நாங்கள் போராடி வெற்றி பெற்றோம்.
கண்டியில் எமது அமைச்சர்களில் ஒருவரான றிசாத் அவர்களையும் முஸ்லிம் ஆளுணர்களையும் குறிவைத்து அத்துரலிய தேரர் இருந்த உண்ணாவிரதம் மூன்று நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அது நாட்டுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நான் எல்லோரையும் ஒன்று திரட்டி 09 அமைச்சர்களையும் இராஜினாமா செய்ய வைத்து நாட்டை பாதுகாத்தோம். இல்லாது போனால் இந்த நாடு இனவாதத்தில் தீக்கீரையாகி இருக்கும்.
இப்போது எமது பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க முன்வருகிறது. ஜனாதிபதி தேர்தலை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ள இந்த காலகட்டத்தில் எமது இருப்புக்கு பாரிய சவால் இருக்கிறது.
எம்.எஸ். காரியப்பர், எம்.சி. அஹமத், ஏ.ஆர்.எம். மன்சூர், தலைவர் அஷ்ரப், போன்றோர்கள் கல்முனையை மாவட்ட காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள் அடங்கிய முக்கிய நகரமாக மாற்றியமைத்தவர்கள். கல்முனையை செதுக்கியத்தில் முஸ்லிங்களின் பங்கு அளப்பரியது. இதனை அறியாமல் தமிழ் முஸ்லிம் உறவை சீரழித்து கல்முனையை கூறுபோட மூன்றாம் தரப்பின் உதவியுடன் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். வெளிமாவட்ட அரசியல் தலைவர்கள் இதனை வழிநடத்தி செய்கிறார்கள். அரசாங்கத்துக்கும், அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கும் ஒரு செய்தியை கூறியுள்ளோம். கல்முனை பிரிப்பதாக இருந்தால் ஆங்கிலையரின் ஆட்சி காலத்தில் இருந்தது போல பிரியுங்கள்.
கிளிநொச்சி, யாழ், வவுனியா, மட்டக்களப்பு, போன்ற பல நகரங்கள் தமிழ் மக்களின் பிரதான நகரங்களாக இருக்கிறது. ஆனால் கல்முனை மாநகரம் முஸ்லிங்களின் தாயகம் அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ் தலைமைகள் நியாயமில்லாமல் நடக்கிறார்கள், அவர்கள் இதன் பின்விளைவுகளை சிந்திக்க வேண்டும். யாழில் வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தழுதலுத்த குரலில்  “தமிழர்களின் தீர்வு திட்டம் மழுங்கடிக்கப்படுகிறது, அரசாங்கம் ஏமாற்றுவதாக பேசினார்” தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயங்களை உணர்ந்து அவர்களுடன் கைகோருக்க வேண்டிய உணர்வு முஸ்லிங்களுக்கு இருந்தது. எங்களின் நியாயத்தை மறுக்கும்போது எங்களின் பாணியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டி வரும். ஒரு கையால் தட்டி சத்தம் வராது. இரு கைகளும் இணைந்து தட்டி ஓசை எழுப்ப வேண்டும். முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வு திட்டங்கள் ஒருபோதும் நடக்காது என்றார்.

இலங்கையில் நிலைகொள்ளும் எந்த திட்டமும் அமெரிக்காவிடம் இல்லை – அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கும் – அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறைமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படமாட்டாதென இலங்கைக்கான அமெரிக்க தூவர் அலேனா டெப்பிளிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் கிடையாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டார். அமெரிக்க இராணுவ முகாம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுமென்று ஊடகங்களின் ஊடாக போலியான கற்பிதங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இலங்கை அரசாங்கத்திள் அழைப்பின் பேரில் மாத்திரம் பயிற்றி மற்றும் அனர்த்த பதிலளிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் இணங்கிச் செயற்படுவது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும். அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையின் நடுநிலை தன்மைக்கு பாதிப்பு ஏற்பட மாட்டாது என்று அஸ்கா ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் பயிற்சி, இயங்கை அனர்த்தங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் பொருட்களையும், சேவைகளையும் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு மாத்திரமே கிடைக்கின்றது.

அமெரிக்க இராணுவம் பெற்றுக் கொள்ளும் பொருட்கள் சேவைகளுக்காக கட்டணங்களை செலுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மைகள் கிடைக்கும். இது புரிந்துணர்வு, இணக்கப்பாடு மாத்திரமாகும் என்றும் அவர் கூறினார். இலங்கை மீது அமெரிக்கா ஒருபோதும் அழுத்தங்களை பிரயோகிக்க மாட்டாதென்றும் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்பிரதேசங்களை இலக்கு வைக்கும் சிறீலங்கா படையினர்

யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில், கடந்த வாரம் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மிக அழகான அரியவகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வடக்கு கடற்படை நிறைவேற்றுப் பிரிவிற்குட்பட்ட கட்டளைத் தளபதி றியல் அட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்றே இதைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

400 மீற்றர் நீளத்தைக் கொண்டுள்ள இந்தப் பவளப்பாறையானது கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தை சமநிலைப்படுத்துவதில் இன்றியமையாத பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

pavalam kks யாழ்ப்பாணத்திலுள்ள கடற்பிரதேசங்களை இலக்கு வைக்கும் சிறீலங்கா படையினர்இந்த பவளப்பாறைகள் இயற்கை மற்றும் மனித செயற்பாடுகளினால் அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் இவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்திலுள்ள கடற்பிரதேசங்களை படையினர் இலக்கு வைப்பதாக தோன்றுகின்றது. மண்டைதீவு கடற்பிரதேசத்தை சுற்றுலா மையம் ஒன்றை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தற்போது காங்கேசன்துறை கடலில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற கடல் நடவடிக்கை ஆய்வுகள் ஊடாக கடற்படையினர் எந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

உலகின் புராதன நகரங்கள் பட்டியலில் இணைந்தது இந்தியா ஜெய்பூர்

உலகின் புராதன நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் ஜெய்பூர் நகரும் இணைக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபைக்கான கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ உலகின் மிகவும் பழமையான நகரங்கள் மற்றும் பாரம்பரிய சின்னங்களையும் புராதன பட்டியலில் இணைத்து வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரம் புராதன சிறப்பு மிக்க நகராக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இந்தியப் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  இதேவேளை கடந்த ஆண்டு யுனெஸ்கோ சார்பில் இந்தியாவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் புராதன நகரம் என்ற பெருமையை ஆமதாபாத் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

2400 வீடுகளுடன் 100 மாதிரிக் கிராமங்களை சிறீலங்காவில் அமைக்க இந்தியா முடிவு

கம்பக மாவட்டத்தில் 2400 விடுகளுடன் கூடிய 100 மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு இந்திய 1200 மில்லியன் ரூபாய்களை சிறீலங்காவுக்கு வழங்கியிருந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் நிர்மானிக்கப்பட்ட ஒரு தொகுதி வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (06) கம்பகாவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறீலங்காவின் வீடமைப்பு மற்றும் காலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாசா, முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்கா மற்றும் பிரதி இந்தியத் தூதுவர் சில்பக் அம்புலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியா அமைக்கும் இந்த 2400 வீடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படும் 60,000 வீட்டுத் திட்டத்திற்கு மேலதிகமாக வழங்கப்படுவதாகவும், சிறீலங்காவில் 70 இற்கு மேற்பட்ட திட்டங்களை தாம் முன்னெடுத்து வருவதாகவும் இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவுக்கு ஏறத்தாள 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தி உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. இதில் 560 மில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளது.

இலங்கையில் குப்பைகொட்டும் இங்கிலாந்து; வறிய நாடுகளை குப்பை மேடாக்கும் மேற்குலகு

கழிவுப்பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தற்பொழுது பலம்பொருந்திய நாடுகளின் நாகரீகமாக மாறியுள்ளது.அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளின் கழிவுகள் கானா, நைஜீரியா, இந்தோனசியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றமை இதற்கு சான்றுகளாகும்.

கழிவுப்பொருட்களின் ஏற்றுமதியில் ஐரோப்பிய நாடுகள் முன்னிலை பெற்றாலும் கழிவு ஏற்றுமதி செய்யும் தனி இராச்சியமாக திகழ்வது அமெரிக்கா என BBC தகவல் வௌியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மெத்தைகள் அடங்கிய 65 கொள்கலன்களை சுங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

இவை கழிவுப்பொருட்களாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார்.இவற்றில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்கள் காணப்படலாம் எனவும் சுங்கப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளார்.சில கொள்கலன்கள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.தனியார் நிறுவனமொன்றே நாட்டிற்கு இந்த மெத்தைகளை இறக்குமதி செய்துள்ளது.

இதுவரையில் இவ்வாறான மெத்தைகள் அடங்கிய 100 கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.

இலங்கை கைச்சாத்திட உத்தேசித்துள்ள சிங்கப்பூர் – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மூலமாக கழிவுகள் கொட்டப்படும் நாடுகளில் ஒன்றாக இலங்கையையும் மாறுவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புத்திஜீவிகள் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இதன் விபரீதத்தை புரிந்துகொண்டு அதற்கு எதிராக தங்களது கொள்கைகளை மாற்றிக்கொண்டாலும் இலங்கை இது தொடர்பில் புத்திசாலித்தனமாக செயற்பட்டுள்ளதாகத்
தெரியவில்லை.

அது மாத்திரமன்றி இந்நாட்டில் கழிவுகளைக் கொட்டுவதற்கு நேர்த்தியான முறைமை இல்லாத நிலையில் கண்டி, மாத்தறை கரதியான உள்ளிட்ட பகுதிகளில் குப்பை மலைகள் பல உள்ள நிலையில், வௌிநாட்டு குப்பைகளை இறக்குமதி செய்வதற்கு
அனுமதி கொடுத்தது யார்?

இடையிடையே புத்தளம் மற்றும் அதனை சூழவுள்ள கடல் எல்லைகளில் இந்தியாவின் மருத்துவக்கழிவுகள் கரையொதுங்கியமையும் இதற்கு ஒப்பான செயற்படாகும்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கோசங்களை எழுப்பியிருந்த அதேவேளை கைதுசெய்யப்பட்டதிலிருந்து எந்தவிதமான குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கான விசாரணைகளும் இல்லாமல் நீதிக்கு புறம்பாக சிறைகளில் அடைத்து வைத்திருப்பதை சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேலும் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் மர்மமான முறையில் இறந்துவருவதையும் சுட்டிக்காட்டி இந்த இறப்புகள் தொடர்பாக தாங்கள் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் மேலும் இறப்புகள் நிகழ சிறைச்சாலைத்துறையின் கவனயீனமே காரனமெனவும் கூறி அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டுமெனவும் கோரியிருந்தனர்.

எதிர்வரும் தேர்தல்களில் கூட்டமைப்பினரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  நிராகரிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத் தராது மக்களை நடுவீதியில் நிர்க்கதியாக விட்ட கூட்டமைப்பினருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காது புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர். இந்தக் கோரிக்கையை இந்த சங்கத்தின் தலைவி கா.ஜெயவனிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாடு நடைபெற்ற மண்டபத்திற்கு எதிரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட போராட்ட இடத்திற்குச் சென்ற சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.

மூன்று மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு

சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் ஊடாக 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாமென ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இலங்கை சட்டத்தரணிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார் அவர் மேலும் கூறுகையில், அரசாங்கம் இந்த உடன்பாட்டில் கைச்சாத்திட்டால், சீருடை தரித்த அமெரிக்க இராணும் இலங்கைக்கு வருகை தந்து நடமாடும் நிலை வரலாம் என்றும், சோபா உடன்படிக்கை நாட்டிற்கு பாரியளவு பாதிப்பை ஏற்படுத்தும் என காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.

இதேவேளை  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா, சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறையாண்மைக்கு எந்த விதத்திலும் பாதிப்புகள் ஏற்படமாட்டாது என கூறியிருக்கின்றார்.

அமெரிக்க இராணுவ முகாம் அமையும் என்ற ஊடகங்களின் போலியான அறிவிப்பினை மறுத்ததுடன், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பயிற்சி மற்றும் அனர்த்த பதிலளிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் இணங்கி செயற்படுவது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலைவர்களை மக்களின் பின்னால் அணிவகுக்க வைத்த பிள்ளையார்

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று (06) இடம்பெற்றுள்ளது. சிங்கள பேரினவாத அரசின் நில ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு மக்களின் தொடர் போராட்டங்களினால் தன்னைத் தக்கவைத்துள்ள பிள்ளையாரின் பொங்கல் விழாவில் பெருமளவான தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இன்று அதிகாலை பொங்கல் விழாவுக்காக கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணியிலிருந்து எடுத்து வரப்பட்ட மடைப்பண்டம் அதிகாலை ஆலயத்தை வந்தடைந்ததுடன், பொங்கல் விழா ஆரம்பமாகியது.

இந்த பொங்கல் விழாவில்; வடமாகாணசபை முன்னாள முதல்வர் திரு விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன், மாவை சேனாதிராஜா உட்பட பல அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பௌத்த ஆலயங்களை நிறுவுவதன் மூலம் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பதற்காக சிங்கள அரசின் உதவியுடன் சிங்கள பௌத்த துறவிகள் மேற்கொண்டுவரும் தொடர் நடவடிக்கைகளில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயமும் பாதிப்புக்களைச் சந்தித்திருந்தது.

neeravi 4 அரசியல் தலைவர்களை மக்களின் பின்னால் அணிவகுக்க வைத்த பிள்ளையார்ஆனால் தமிழ் மக்களின் தொடர் போராட்டங்களினால் தமிழ் மக்களின் நிலம் தற்போது பாதுகாக்கப்பட்டுள்ளது. மக்கள் போரட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அவர்களின் பின்னால் அரசியல்வதிகளை அணிதிரள வைத்துள்ளது மக்கள் சக்தி.

neeravi 2019 2 அரசியல் தலைவர்களை மக்களின் பின்னால் அணிவகுக்க வைத்த பிள்ளையார்

neeravi 2019 3 அரசியல் தலைவர்களை மக்களின் பின்னால் அணிவகுக்க வைத்த பிள்ளையார்neeravi mavai அரசியல் தலைவர்களை மக்களின் பின்னால் அணிவகுக்க வைத்த பிள்ளையார்