இலங்கையில் நிலைகொள்ளும் எந்த திட்டமும் அமெரிக்காவிடம் இல்லை – அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கும் – அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறைமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படமாட்டாதென இலங்கைக்கான அமெரிக்க தூவர் அலேனா டெப்பிளிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் கிடையாதென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற விசேட நேர்காணலில் அமெரிக்க தூதுவர் கருத்து வெளியிட்டார். அமெரிக்க இராணுவ முகாம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுமென்று ஊடகங்களின் ஊடாக போலியான கற்பிதங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இலங்கை அரசாங்கத்திள் அழைப்பின் பேரில் மாத்திரம் பயிற்றி மற்றும் அனர்த்த பதிலளிப்பு போன்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் இணங்கிச் செயற்படுவது அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும். அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களின் மூலம் இலங்கையின் நடுநிலை தன்மைக்கு பாதிப்பு ஏற்பட மாட்டாது என்று அஸ்கா ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் பயிற்சி, இயங்கை அனர்த்தங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் பொருட்களையும், சேவைகளையும் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு மாத்திரமே கிடைக்கின்றது.

அமெரிக்க இராணுவம் பெற்றுக் கொள்ளும் பொருட்கள் சேவைகளுக்காக கட்டணங்களை செலுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மைகள் கிடைக்கும். இது புரிந்துணர்வு, இணக்கப்பாடு மாத்திரமாகும் என்றும் அவர் கூறினார். இலங்கை மீது அமெரிக்கா ஒருபோதும் அழுத்தங்களை பிரயோகிக்க மாட்டாதென்றும் அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார்.