2400 வீடுகளுடன் 100 மாதிரிக் கிராமங்களை சிறீலங்காவில் அமைக்க இந்தியா முடிவு

கம்பக மாவட்டத்தில் 2400 விடுகளுடன் கூடிய 100 மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு இந்திய 1200 மில்லியன் ரூபாய்களை சிறீலங்காவுக்கு வழங்கியிருந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் நிர்மானிக்கப்பட்ட ஒரு தொகுதி வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (06) கம்பகாவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறீலங்காவின் வீடமைப்பு மற்றும் காலாச்சார அமைச்சர் சஜித் பிரேமதாசா, முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா குமாரணதுங்கா மற்றும் பிரதி இந்தியத் தூதுவர் சில்பக் அம்புலே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியா அமைக்கும் இந்த 2400 வீடுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படும் 60,000 வீட்டுத் திட்டத்திற்கு மேலதிகமாக வழங்கப்படுவதாகவும், சிறீலங்காவில் 70 இற்கு மேற்பட்ட திட்டங்களை தாம் முன்னெடுத்து வருவதாகவும் இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவுக்கு ஏறத்தாள 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தி உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. இதில் 560 மில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளது.