வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா? – விதுரன்
உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரிய போராட்டம் நேற்று (22) இரண்டாம் நாளாகவும் அமைதி வழியில் முன்னெடுக்கப்பட்டது.
காணிகளை விடுவிக்க கோரி நேற்று முன் தினமும்(21) மயிலிட்டி சந்தியில் போராட்டம் நடைபெற்றது.
ஞாயிறு விடுமுறை என்பதால் பாடசாலை சிறுவர்கள் தமது நிலங்களிலே மூன்றாம் தலைமுறையாக உரிமை கேட்டு பெற்றாருடன் பதாகைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் மயிலிட்டி, பலாலி, காங்கேசன்துறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள், முதியோர்கள், இளைஞர்கள், சிறுவர்கள், பெண்கள் என பல தரப்பினரும் பங்கு பற்றி இருந்தனர்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து போன மக்கள் யுத்தம் நிறைவடைந்து தமது காணிகளுக்கு வந்த பின்னரும் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் காணிகளை விடுவிப்பதாக கூறி சிறு சிறு இடங்களை மாத்திரம் விடுவித்துள்ளன என்று போராட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.
இதனால் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் முகாம்களிலும் இன்று வரையும் காணி சொந்தக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தற்போது தமிழ் மக்களின் பலத்த ஆதரவை பெற்று அனைத்து காணிகளையும் உடனடியாக விடுவிப்போம் என்ற வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களை கடந்த பின்னும் பெரிய அளவில் காணி விடுவிப்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக காணிகளை வைத்திருப்பதாக கூறுகின்ற இராணுவம் தற்போது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாகிய நிலையிலும் அவர்களின் காணிகளை விடுவிக்காமல் வைத்திருக்கின்றனர் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.
அணுவாயுதத்தை தயாரிக்கும் திட்டம் ஈரானிடம் இல்லை – ஐ.நா
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துசெய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்துசெய்யுமாறு வலியுறுத்தி நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவால் மொஹமட் ருஸ்டி என்ற இளைஞர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை தொடர்பில் தங்களால் கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டது.
இதன்படி எந்தவொரு குற்றத்திற்கும் ஆதாரங்கள் இல்லாத போதிலும், ருஸ்டியை 14 நாட்கள் தடுத்து வைத்து, ‘மதரீதியான கடும்போக்காளர்’ எனச் சித்தரிப்பதற்கு முயற்சிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விடுவிக்கப்பட்டவுடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணை பிரிவில் வாராந்தம் முன்னிலையாதல் மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனைகளின் கீழ் அவர் வைக்கப்பட்டார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் ருஸ்டியின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை மொஹமட் ருஷ்டியின் வழக்கானது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மிகமோசமான ஒடுக்குமுறை போக்கையும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அச்சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாட்டையும் தெளிவாகக் காண்பிப்பதாகவும் நீதியமைச்சருக்கான கடிதத்தில் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், குற்றம் தொடர்பான வரைவிலக்கணம், விசாரணைகளின்றி நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைப்பதற்கான சாத்தியம், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்த வேண்டிய அவசியமின்மை, பிணைக்கோரிக்கை நிராகரிப்பு மற்றும் பொலிசாரிடம் வழங்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தினால் சாட்சியாக ஏற்கப்படல் ஆகிய ஐந்து விடயங்களும் இந்த சட்டத்தின் ஒடுக்குமுறை போக்குக்கான முக்கிய காரணங்களாக அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த காரணங்களுக்காக பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருப்பதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
“ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது ஈரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன,” என்று அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு இலக்கான அணுசக்தி தளங்களை தாங்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மத்திய கிழக்கை பேரழிவுக்கு இட்டுச் செல்கிறது: துருக்கி குற்றச்சாட்டு
ஈரானை தாக்குவதன் மூலம் இஸ்ரேல் மத்திய கிழக்கை முழுமையான பேரழிவுக்கு இட்டுச் செல்வதாக துருக்கி குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்தான்புல்லில் நடந்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) உச்சிமாநாட்டில் பேசிய துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான், “இஸ்ரேல் இப்போது நமது அண்டை நாடான ஈரானை தாக்குவதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியை முழுமையான பேரழிவின் விளிம்புக்கு இட்டுச் செல்கிறது. பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஏமன் மற்றும் ஈரான் தரப்பில் பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் இஸ்ரேலின் பக்கம்தான் பிரச்சினை தெளிவாக உள்ளது.
எனவே, ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் வரம்பற்ற ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை மேலும் ஆபத்தில் ஆழ்த்தும் வன்முறைச் சுழலாக தற்போதைய நிலைமை மோசமடைவதை நாம் தடுக்க வேண்டும்.” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த நிலையில்,இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- Ilakku Weekly ePaper 343 | இலக்கு-இதழ்-343-யூன் 14, 2025
- இஸ்ரேலின் ‘சிங்கத்தின் எழுச்சி’ உலகப் போருக்கான தொடக்கமாகையில்; ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பேண வேண்டிய நிலை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 343
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம்
- வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா? – விதுரன்
- ஆட்சிக்காக யாரோடும்; சேருவோம்.! அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம்.! இதுவே தமிழ்த்தேசிய அரசியல்! – பா. அரியநேத்திரன்
- வலுவானதாக மாறுமா ஐ.நாவின் தீர்மானம்-சுதர்சன்
- பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-04 (இறுதிப்பகுதி) விதுரன்
- இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான் ஆகியவற்றுக்கிடையேயான போரும் சிறீலங்காவின் இனப் பிரச்சினையும் – தமிழில்: ஜெயந்திரன்
- தீப்பந்தம்- இசையமைப்பாளர்: சத்தியன்
- மலையகத்தில் நாட்கூலி முறையில் உள்ள சிக்கலும் மறைமுகமாக இடம்பெறும் இனவழிப்பும் – மருதன் ராம்
- ஈரான்-இஸ்ரேல் பிளவுக்கு நடுவே இந்தியாவின் ஆபத்தான கயிற்று நடை – சத்யா சிவராமன்
- நாட்டின் எல்லைகளைப் பகிராத இஸ்ரேல்; ஈரான் போரின் பின்னணி என்ன? (பகுதி-1) நேர்காணல் B.A காதர்
- ஈரானின் பலம் அறியாது களத்தில் குதித்ததா இஸ்ரேல்? வேல்ஸில் இருந்து அருஸ்
ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 344
ஐக்கிய நாடுள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாதத் தொடக்க அமர்வில் இணை அனுசரணை செய்யும் நாடுகளால் சிறிலங்கா தொடர்பில் புதிய முன்மொழிவு கொண்டுவர வேண்டியிருப்பதால் பிரித்தானியா இணை அனுசரணை வழங்கும் மற்றைய நாடுகளுடன் பேச்சுக்களை இப்போதிருந்தே தொடங்க வேண்டியுள்ளது எனச் சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் மதிப்புக்குரிய அன்றூ பற்றிக் அவர்கள் யூன் 18இல் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சுமந்திரனைச் சந்தித்த பொழுது கூறியுள்ளர். பிரித்தானியத் தூதுவரின் மனித உரிமைகளைப் பேணுவது குறித்த இந்தக் கடமை உணர்வு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் அனைவருக்கும் அவர்களின் இவ்விடயம் தொடர்பான கடமைப் பொறுப்பையும் உடன் செயப்பட வேண்டிய நேரமுகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது. மேலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களின் கிட்டிய குடும்ப உறுப்பினர்களின் சங்க உறுப்பினர்களைச் சந்தித்த பிரித்தானிய தூதுவர், அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் நேரடியாகக் கேட்டறிந்தமையை இலக்கு பாராட்டுகின்றது. தூதுவர் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பொழுது அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை ஊக்குவிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சிவில் சமூகத்தின் முக்கிய பங்களிப்பை பிரித்தானியா அங்கீகரிக்கிறது எனக் கூறியுள்ளமை சிவில் சமூக அமைப்புக்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் சிறிலங்காவுக்கு இம்மாத இறுதி வாரத்தில் மனித உரிமைகளின் நிலை குறித்த மதிப்பீட்டுக்குச் செல்லும் நேரத்தில் மனித உரிமைகள் நிலை குறித்த கடந்த கால நிகழ்கால தரவுகளையும் தகவல்களையும் சான்றாதாரத்துடன் வெளியிட வேண்டிய தேவையை உணர்த்தியுள்ளது என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. மேலும் இஸ்ரேல் ஈரான் யுத்தத்தால் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளரின் சிறிலங்காவுக்கான பயணம் கேள்விக்குறியானாலும் கூட பிரித்தானியத் தூதுவருக்குத் தகுந்த சான்றாதாரங்களை சிவில் சமூகத்தினர் விரைவாகக் கையளிப்பது ஏற்புடைய பலன்களை அளிக்கும் என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
இந்நேரத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்துடன் பணியாற்றிய தன்னார்வ அமைப்புக்கள் ஆணையகத்திடம் தேவையான அனைத்துலக சட்ட நடவடிக்கைகளை எடுக்கும் அளவுக்குச் சான்றுகள் இப்பொழுதே உள்ளன எனவும் இந்நிலையில் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதும் இதற்கான சான்றாதாரங்களை ஆவணப்படுத்தும் அலுவலகத்தை அமெரிக்காவின் இன்றைய நிலைப்பாடுகளால் நிதியளிப்பு இல்லாது மூடப்பட்டு விடாது தடுப்பதுமே இன்றைய சமகாலத்தின் தேவையாக உள்ளதெனக் கூறியுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். இதற்கு இரண்டு விடயங்களில் ஈழத்தமிழர்கள் தெளிவாகவும் ஒருங்கிணைந்தும் விரைவாகச் செயற்பட வேண்டும். ஒன்று ஈழத்தமிழர்கள் தாங்கள் இறைமையுள்ள மக்கள் என்பதை எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் மாறாத உறுதியுடன் வெளிப்படுத்துதல். அடுத்தது ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளைப் பேணுவதற்கான நிதியம் ஒன்று உருவாக்கப்பட்டாலே உலகின் குடிகளாக உள்ள ஈழத்தமிழர்கள் தமது நிதியுதவிகளை ஒருங்கிணைத்து நிதியின்றி தடைப்படக்கூடிய மனித உரிமைகளை பாதுகாப்பான அமைதியைப் பேணும் செயற்திட்டங்களைத் தொடர்ந்து இயங்க வைக்க முயற்கிக்க வேண்டும். இவை இரண்டிலும் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகிலும் எந்த அளவுக்கு ஒருங்கிணைந்து செயற்படுகின்றார்களோ அந்த அளவுக்குத்தான் ஈழத்தமிழரின் மனித உரிமைகள் பாதுகாப்புப் பெறும் என்பதே இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது. மேலும் ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதி வாழ்வுக்கான மனித உரிமைகள் பாதுகாப்புப் பேரவை ஈழத்தமிழர்களால் உலகளாவிய நிலையில் அனைத்து ஈழத்தமிழர் மனித உரிமைகள் மற்றும் ஈழத்தமிழர் பாதுகாப்பான அமைதிக்கான செயற்பாட்டாளர்கள் அனைவரையும் இணைத்து நிறுவப்பட்டால் மட்டுமே சரியானதைச் சரியான நேரத்தில் சரியான முறையில் உலகின் முன்வைக்க இயலும் என்பது இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது. இல்லையேல் கடந்த வார வீரகேசரி வார இதழில் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது போல 13வது திருத்தத்தை வலியுறுத்துமாறு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க எந்தச் சட்டநிலைத் தகுதியும் இல்லாத ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்குச் சில தமிழ் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை மனு சமர்ப்பித்துள்ளமை போன்ற செயற்பாடுகளே நடைமுறையாக அமையும்.
தமக்கு விருப்பமானவர்களை ஆட்சியில் அமர்த்துவதையே ஆட்சி மாற்றம் என்று சதாம் ஹுசைன் முதல் பிரபாகரன் வரை செயற்பட்ட அதே வல்லாண்மைகளே, இன்று ஈரானில் தான் விரும்பிய ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுகின்றன. இஸ்ரேலுக்கு தனது இருப்பினைப் பாதுகாக்க ஈரான் மேல் தாக்குதல் நடாத்தலாம் என்னும் இதே அமெரிக்க மேற்குலக நாடுகள்தான், வரலாற்றக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமுள்ள இறைமையுடன் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள், தங்கள் உயிரையும் உடைமைகளையும் நாளாந்த வாழ்வையும் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பிலிருந்து பாதுகாக்க சனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்தாலும் சரி ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்த வல்ல நடைமுறையரசை அமைத்தாலும் சரி அவற்றை ஏற்க மறுத்து, ஈழத்தமிழர்கள் மேல் சிறிலங்கா மேற்கொள்ளும் இனஅழிப்பை அதன் தேசிய பாதுகாப்புக்கான செயற்பாடு என அங்கீகரித்து நிற்கின்றன. இந்நிலையில் ஈழத்தமிழர்களாலேயே ஈழத்தமிழர் இறைமை எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் மீளுறுதி செய்யப்படாத வரை மனித உரிமைகள் ஆணையகத்தால் சிறிலங்காவைக் கொண்டு பொறுப்புக்கூறலைச் செய்விக்கவே இயலாது என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.
மேலும் பிரித்தானியத் தூதுவர் வடமாகாண ஆளுநர் வேதநாயகத்தைச் சந்தித்து தையிட்டி திஸ்ஸ விகாரைப் பிரச்சினை, 5941 ஏக்கர் தனியார் நிலத்தை மூன்று மாதத்துள் உரிமம் காட்டாதவிடத்து அரசுட மையாக்கும் வர்த்தமானிப் பிரகடனப்பிரச்சினை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு போன்ற சமகால பிரச்சினைகள் குறித்தும் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள், சுற்றுலாப் பயணத்துறையை மேம்படுத்தல் விமான மற்றும் கப்பல் சேவைகளை வளர்த்தல் என்பன குறித்தும் கேட்டறிந்துள்ளமை ஈழத்தமிழ் மக்கள் குறித்த அவரின் அக்கறையாக உள்ளமைக்கு இலக்கு அவருக்கு நன்றி கூறுகிறது. பணியாட்சியில் உள்ள தமிழ் ஆளுநர்கள் அதிகாரிகள் எந்த அளவுக்குத் தங்கள் மனச்சாட்சிக்கு அமைய தரவுகளையும் தகவல்களையும் உண்மையாக வழங்குவார்களோ அந்த அளவுக்குத்தான் அவர்களின் நிர்வாகத்தில் ஈழத்தமிழர்கள் அனைத்துலக ஆதரவுகளை உதவிகளை வழிகாட்டல்களைப் பெறலாம். இது உள்ளூராட்சிக்கும் பொருந்தும். பிரித்தானியத் தூதுவர் யாழ்ப்பாண மாநாகரசபை முதல்வர் விவேகானந்தராசா மதிவதனியைச் சந்தித்து பிராந்திய மேம்பாடு, சேவை வழங்கல்கள், மற்றும் இளையர்களுக்கான வேலை வாய்ப்பு, மாகாண மற்றும் நகராட்சி நிலையில் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உள்ளூர் முன்னுரிமைகள் குறித்து கலந்து பேசியுள்ளார். அவரின் இந்த ஆர்வத்தையும் முன்மாதிரியையும் பார்த்தாவது உள்ளூராட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பினரும் தனது மண்ணினதும் மக்களினதும் தேவைகள் அதற்கான வர்த்தகத் திட்டங்கள் கல்வி தொழில்நுட்ப இணைப்புக்கள் மூலதன மற்றும் மூலவள மனிதவள நிலைகள் குறித்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணங்களைத் தயாரித்து கைகளில் வைத்திருந்தால் மட்டுமே ஈழத்தமிழர் மேல் அக்கறை காட்டும் அனைத்துலகத்தினர் வழி ஈழத்தமிழர்கள் தங்களுடைய தேவைகளை பெறுவதற்கான நிலைமைகளை உருவாக்க முடியும். அதுவும் உலகம் தன்னியங்கிகளதும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளதும் போருக்குள் போய்க் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் மக்களே தங்களின் இறைமையைப் பாதுகாப்பதற்கான வழியில் செயற்பட வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
ஆசிரியர்
மலையக மக்களுக்கான காணி உரிமை கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
காணி உரிமை தினத்தை முன்னிட்டு அட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியுடன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை (21) காலை முன்னெடுக்கப்பட்டது.
மலையக மக்களின் காணி உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மலையக மக்களின் காணி உரிமை மற்றும் வீட்டுரிமைக்கான அமைதி வழிப்போராட்டம் எனும் தொனிப்பொருளில் அட்டன் பல்பொருள் அங்காடியிலிருந்து பஸ்தரிப்பிடம் வரை பேரணியாக வருகைந்தந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுத்தனர்.
மலையக மக்களின் காணி உரிமையை கோரிய கோசங்கள் பதாதைகள் ஏந்தி இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் மலையக சிவில் அமைப்புகள், அரசியல் துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.
இன்றைய ஆர்பாட்ட பேரணிக்கு மலையக அரசியல் அமைப்புகள் தமது ஆதரவினை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025
Ilakku Weekly ePaper 344 | இலக்கு-இதழ்-344-யூன் 21, 2025: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம், தாயகத்தளம், மலையகம், இந்தியத்தளம், அனைத்துலகத்தளம் ஆகிய தளங்களை தாங்கி வெளியாகி உள்ளது.
கீழ் காணும் ஆக்கங்களைத் தாங்கி வெளியாகி உள்ளது
- Ilakku Weekly ePaper 343 | இலக்கு-இதழ்-343-யூன் 14, 2025
- இஸ்ரேலின் ‘சிங்கத்தின் எழுச்சி’ உலகப் போருக்கான தொடக்கமாகையில்; ஈழத்தமிழர் இறைமையை ஈழத்தமிழரே பேண வேண்டிய நிலை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 343
சென்ற வார மின்னிதழை முழுமையாக படிக்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
- ஈழத்தமிழர் இறைமை மீளுறுதி செய்யப்படாதவரை மனிதஉரிமைகள் ஆணையகத்தால் எதுவும் செய்ய இயலாது | ஆசிரியர் தலையங்கம்
- வொல்கர் ரேக் சொல்வாரா? செய்வாரா? – விதுரன்
- ஆட்சிக்காக யாரோடும்; சேருவோம்.! அரசியல் தீர்வுக்காக விலகிச்செல்வோம்.! இதுவே தமிழ்த்தேசிய அரசியல்! – பா. அரியநேத்திரன்
- வலுவானதாக மாறுமா ஐ.நாவின் தீர்மானம்-சுதர்சன்
- பூகோளச் சிக்கலுக்குள் மீண்டும் இலங்கை (பகுதி-04 (இறுதிப்பகுதி) விதுரன்
- இந்தியா, அமெரிக்கா, சீனா, ஈரான் ஆகியவற்றுக்கிடையேயான போரும் சிறீலங்காவின் இனப் பிரச்சினையும் – தமிழில்: ஜெயந்திரன்
- தீப்பந்தம்- இசையமைப்பாளர்: சத்தியன்
- மலையகத்தில் நாட்கூலி முறையில் உள்ள சிக்கலும் மறைமுகமாக இடம்பெறும் இனவழிப்பும் – மருதன் ராம்
- ஈரான்-இஸ்ரேல் பிளவுக்கு நடுவே இந்தியாவின் ஆபத்தான கயிற்று நடை – சத்யா சிவராமன்
- நாட்டின் எல்லைகளைப் பகிராத இஸ்ரேல்; ஈரான் போரின் பின்னணி என்ன? (பகுதி-1) நேர்காணல் B.A காதர்
- ஈரானின் பலம் அறியாது களத்தில் குதித்ததா இஸ்ரேல்? வேல்ஸில் இருந்து அருஸ்