தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி- ஒத்திகை தொடங்கியது

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை  ஐந்து மாவட்டங்களில்  நடைபெறுகிறது என தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் நடைபெறும் இந்த ஒத்திகை...

நாகாலாந்து முதல் மணிப்பூர் வரை பரவிய காட்டுத் தீ –  அணைக்க பெரும் முயற்சி

நாகாலாந்து மாநிலத்தின் துக்கோ பள்ளத்தாக்கில் ஏற்பட்டுள்ள  காட்டுத் தீ தற்போது நாகாலாந்திலிருந்து  மணிப்பூர் மாநிலத்திற்குப் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத் தீயை அணைக்க   இந்திய விமானப்படை,தேசிய பேரிடர்...

தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்கக் கோரும் அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள பிரியா- நடேசலிங்கம் எனும் தமிழ் அகதி குடும்பத்தை அவுஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என அவுஸ்திரேலிய மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இக்குடும்பம் ஆயிரம் நாட்களுக்கு மேலாக தடுத்து...

விமான நிலையத்திலிருந்து தப்பியோடிய இரு பயணிகளை தேடும் அவுஸ்திரேலியா

விமானநிலையத்திலிருந்து தப்பியோடிய இரு பயணிகளை அவுஸ்திரேலிய காவல்துறை  தேடி வருகின்றது. கன்பரா வழியாக மெல்பேர்ன் விமான நிலையத்தில் வந்திறங்கிய நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த இரண்டு பயணிகள், விமான நிலைய அதிகாரிகள் விடுத்த...

தமிழக மீனவர்களின் அத்து மீறலால் இலங்கை மீனவர்கள் பாதிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினர்  தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருவதோடு அவர்கள் மீது தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். இதனால் அம் மீனவர்கள் உயிரிழப்புக்களையும் சந்திக்கின்றனர். மேலும் வாழ்வாதாரத்தையும்...

இந்தியாவில் நாளை கொரோனா தடுப்பூசி போடும் ஒத்திகை நடைபெறுவுள்ளதாக அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக  தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரிலும் குறைந்தது மூன்று இடங்களில் இந்த  ஒத்திகை நடத்தப்படும்...

புது வருடத்தில் உலகளவில் 3.70 இலட்சம் குழந்தைகள் பிறப்பு: யுனிசெப் தகவல்

புத்தாண்டு தினத்தன்று உலகளவில் 3.70 இலட்சம் குழந்தைகளும், இந்தியாவில் ஏறக்குறைய  60 ஆயிரம் குழந்தைகளும் பிறந்திருக்கக்கூடும் என எதிர்பார்க்கிறோம் என்று யுனிசெப்   தெரிவித்துள்ளது. இதுகுறித்து  யுனிசெப் வெளியிட்ட அறிவிப்பில், “உலகளவில் குழந்தைகள் பிறப்பு என்பது 10...

கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய விசாவாசிகளை நாடு கடத்தும் அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய தற்காலிக விசாவாசிகள் நாடுகடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த கடற்கரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் பெரும் கூட்டம்...

இந்தியத் தலைநகரில் வரலாறுகாணாத கடும் குளிர்  

டெல்லியில் அதிகாலை குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சென்றதாக சஃப்தர்ஜங் தட்ப வெட்ப கண்காணிப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “காலை 6 மணி அளவில் பனி மூட்டம் முழுவதுமாக சாலைகளில் எதிரில்...

புத்தாண்டில் பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் அவுஸ்திரேலியாவின் தேசிய கீதம்

இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து அவுஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று  அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். தேசிய கீதம் இனி அவுஸ்திரேலியாவை 'இளமையான, சுதந்திரமான' என்று குறிப்பிடாது....