இந்தியத் தலைநகரில் வரலாறுகாணாத கடும் குளிர்  

டெல்லியில் அதிகாலை குறைந்தபட்ச வெப்ப நிலை 1.1 டிகிரி செல்ஷியஸ் அளவுக்கு சென்றதாக சஃப்தர்ஜங் தட்ப வெட்ப கண்காணிப்பகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“காலை 6 மணி அளவில் பனி மூட்டம் முழுவதுமாக சாலைகளில் எதிரில் வருவோரைக் கூட பார்க்க முடியாத அளவில் இருந்தது. அந்த நேரத்தில் காணும் திறன் பூஜ்யமாக இருந்தது” என்று வானிலை ஆய்வு மையத்தின் வட்டாரத் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்துள்ளார்.

இது டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த வெப்ப நிலை என்று என்.டி.டி.வி. இணைய தளம் கூறுகிறது.

2006ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி டெல்லியில் வெப்பநிலை 0.2 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் பதிவானது என்றும் கடந்த ஆண்டு ஜனவரியில் குறைந்தபட்சமாக 2.4 டிகிரி வெப்பநிலை பதிவானது என்றும் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார்.