கனேடிய பிரதமர் மற்றும் சீன அதிபருக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தகவல்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங்குக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.  இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட இவ்விருவரும் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சிகள் கெமராக்களில்...

இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் 

மியான்மரிலிருந்து இரண்டு படகுகளில் வெளியேறிய 230 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். மியான்மரில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிங்கியா மக்கள் பல ஆண்டுகளாக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய...

போலந்தில் ஏவுகணையொன்று வீழ்ந்து வெடித்ததில் இருவர் பலி

போலந்தில் ஏவுகணையொன்று வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். யுக்ரைனுக்கு அருகிலுள்ள போலந்து கிராமமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேட்டோ அங்கத்துவ நாடான போலந்தில் ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், போலந்துக்கு தேவையான...

துருக்கி குண்டுவெடிப்பில் 6 பேர் பலி

மத்திய இஸ்தான்புல்லியின் பரபரப்பான பகுதியில் நடைபெற்ற  குண்டுவெடிப்பில்  6 பேர் கொல்லப்பட்டு, 81 பேர் காயமடைந்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை 4:20 மணியளவில் தக்சிம் சதுக்கம் பகுதியிலுள்ள ஒரு கடை...

இந்தியாவின் அருணாச்சலம் பிரதேசத்தில் நில நடுக்கம்

இந்தியாவின் அருணாச்சலம் பிரதேச மாநிலத்தில் 5.6 ரிக்டர் அளவிலான பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ஆனால் உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து இது வரையில் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், அவர்களுடைய 2 விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு...

காலநிலை மாற்றம்: 30 ஆண்டுகளுக்குள் முக்கிய பனிப்பாறைகள் உருகிவிடும்-ஐ.நா

காலநிலை மாற்றம் காரணமாக ஆஃப்ரிக்காவில் எஞ்சியிருக்கும் கடைசி பனிப்பாறைகள் உட்பட உலகில் உள்ள பனிப்பாறைகள் 2050ஆம் ஆண்டுக்குள் தவிர்க்க முடியாதபடி உருகி விடும் என்று  ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு...

முதலாளித்துவத்தின் வீழ்ச்சியே சூழலை பாதுகாக்கும் – தன்பேர்க்

உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றத்திற்கு முதலாளித்துவமே காரணம் எனவே அதன் வீழ்ச்சியே உலகத்தை பாதுகாக்கும் என சுவீpடனை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார். 19 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ போராடும் ஈரானிய அகதிகள் 

அவுஸ்திரேலியாவில் தங்களை நிரந்தரமாக வாழ அனுமதிக்கக் கோரி மெல்பேர்ன் நகரில் உள்ள குடிவரவுத்துறை அலுவலகத்தின் வெளியே காத்திருப்பு போராட்டத்தினை கடந்த நவம்பர் 3ம் திகதி ஈரானிய அகதிகள் தொடங்கியிருக்கின்றனர். தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறுகிய கால...

ஈரான் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: இதுவரை 277 பேர் பலி

ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி இதுவரை 277 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஈரானில் மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா....