போலந்தில் ஏவுகணையொன்று வீழ்ந்து வெடித்ததில் இருவர் பலி

60 Views

போலந்தில் ஏவுகணையொன்று வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். யுக்ரைனுக்கு அருகிலுள்ள போலந்து கிராமமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேட்டோ அங்கத்துவ நாடான போலந்தில் ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், போலந்துக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் ஜி7 மற்றும் நேட்டோ தலைவர்கள் கூட்டாக விடுத்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர்.

யுக்ரைன் மீது ரஷ்யா நேற்று சுமார் 100 ஏவுகணைகளை ஏவிய நிலையில், போலந்திலும் ஏவுகணையொன்று வீழ்ந்துள்ளது.

இந்த ஏவுகணை எங்கிருந்து ஏவப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை.

இச்சம்பவத்தையடுத்து போலந்து இராணுவம் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply