உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள காலநிலை மாற்றத்திற்கு முதலாளித்துவமே காரணம் எனவே அதன் வீழ்ச்சியே உலகத்தை பாதுகாக்கும் என சுவீpடனை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பேர்க் தெரிவித்துள்ளார்.
19 வயதான அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) லண்டனில் இடம்பெற்ற தனது நூல் வெளியீட்டுவிழாவின் போது மேலும் தெரிவித்துள்ளதாவது:
மிகப்பெரும் மாற்றம் ஒன்றின் ஊடாகத்தான் சூழல் மாசடைவதை கட்டுப்படுத்த முடியும். நாம் மீண்டும் ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பப்போவதில்லை. முதலாளித்துவம், காலணித்துவம், அடக்குமுறைகள், இனப்படுகொலை என்பன செல்வங்களை சேகரித்து தற்போதைய உலக ஒழுங்கை ஏற்படுத்தியுள்ளன.
பொருளாதார வளர்ச்சிதான் எமக்கு முன்னுரிமை என்றால் தற்போது உள்ள நிலையை விட நாம் எதனை எதிர்பார்க்க முடியும். மசகு எண்ணையை அகழ்வது என்பது ஒரு இனவாதம்.
எதிர்வரும் வாரம் எகிப்தில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் கோப்-27 என்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை. அது ஒரு போலியான விளையாட்டு, அரசியல்வாதிகள் தங்களை சூழலியலாளர்களாக காண்பிப்பதற்கு நடத்தும் நாடகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.