காலநிலை மாற்றம் காரணமாக ஆஃப்ரிக்காவில் எஞ்சியிருக்கும் கடைசி பனிப்பாறைகள் உட்பட உலகில் உள்ள பனிப்பாறைகள் 2050ஆம் ஆண்டுக்குள் தவிர்க்க முடியாதபடி உருகி விடும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐநாவின் உலக பாரம்பரிய இடங்களில் மூன்றில் ஒரு மடங்கு இடம் பெற்றுள்ள பனிப்பாறைகள் 30 ஆண்டுகளுக்குள் உருகிவிடும் என்றும் யுனெஸ்கோ அதன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய நடவடிக்கைகள் எதுவாக இருந்தபோதிலும் அவை உருகுவதை தடுக்க முடியாது என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.