ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் தினத்தில் தமிழினமே நீதிக்காக ஓரணியில் எழுந்துநில்!

2000 த்திற்கும் மேற்பட்ட நாட்களாக 138 உயிரிழப்புகளுடன் உறுதியுடன் நீதிக்காகப் போராடும் பாதிப்புற்ற கிட்டிய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவளி-  மூத்த அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன். சிறிலங்கா அராசங்கம் ஈழத்தமிழ் மக்கள் மேல் மேற்கொண்ட...

ஜனநாயக கோட்பாடுகளுக்கு மதிப்பளிக்காத பயங்கரவாத தடைச் சட்டம் – துரைசாமி நடராஜா

இலங்கை அரசு பயங்கரவாத தடைச் சட்டத்தைதைப் பயன்படுத்தி கைது நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகின்றமை தொடர்பில் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.   இச்சட்டத்தின் ஊடாக நாட்டில் ஜனநாயகத்தையும், ஊழலற்ற அரசியல் கலாசாரத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட...

அனைத்துலக வலிந்து காணாமலாக்கப்பட்டுப் பாதிப்புற்றோர் நாளில், “தமிழ் தேசிய சக்திகள் கிழக்கில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்”

தமிழர்களின் விடுதலைப் போராட்டங்களானது பல்வேறு வலிகளையும் வேதனைகளையும் சுமந்த போராட்டங்களாகும். இந்த போராட்டங்கள் பல குடும்பங்களின் கண்ணீராக தொடரும் நிலையினையும் ஏற்படுத்தியுள்ளது. இழப்புகளை எதிர்கொள்ளாத சமூகம் சுதந்திரத்தினை அடையமுடியாது என்பது பொதுவான கருத்துகளாக...

நீதிக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குப் போராடுவது? – பி.மாணிக்கவாசகம்

இலங்கையில் வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் ஓர் எரியும் பிரச்சினையாக சுமார் 40 வருடங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நோக்கத்துடன் 1983 ஆம் ஆண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட கறுப்பு ஜுலை வன்முறைகளில் இருந்து நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது.குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காகத் தலையெடுத்த ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதற்காக ஆட்களைக் காணாமல் செய்வதை ஒரு தாக்குதல் உத்தியாக ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டத்தில் தீவிர பங்கேற்கின்ற கிராமிய மற்றும் பிரதேச மட்டத்திலான குடிநிலைசார் தலைவர்கள் முக்கியஸ்தர்களுடன் முக்கியமாக இளைஞர் யுவதிகளும் முதலில் இலக்கு வைக்கப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடத்தப்பட்டார்கள். பின்னர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். இதனைவிட விபரம் அறிய முடியாத முறையில் ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பொதுமன்னிப்பளிக்கப்படும் என்ற உத்தரவாதத்துடன் இராணுவத்திடம் சரணடையுமாறு அரசாங்கம் ஒலிபெருக்கிகள் மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று சரணடைந்த நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகளும் காணாமல் போயுள்ளார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்பதைத் தெரிவிப்பதற்கு ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்டும் கடத்திச் செல்லப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் ஆதாரங்களாக இருந்த போதிலும், அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அரசுகள் இன்னும் பொறுப்பேற்கவில்லை. 'வலிந்து காணாமல் ஆக்கப்படுவதற்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்குகின்ற செயற்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். ஆட்களை வலிந்து காணாமல் ஆக்குகின்ற குற்றச் செயல்கள் இனிமேல் தொடராமல் தடுக்க வேண்டும்'...

இலங்கை-அழுத்தத்தின் ஊடாக வெற்றி -துரைசாமி நடராஜா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தப்பியோடியதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு புதிய ஜனாதிபதியாகும் வரம் கிடைத்திருக்கின்றது. அடுத்த இரண்டரை வருட காலத்துக்கு அவர் இப்பதவியை வகிக்கவுள்ள நிலையில் அவரின் பதவிக்காலம் மிகவும் சவால்...

பதவியில் தொடர்வதற்காக ரணில் வகுக்கும் உபாயம்-அகிலன்

நெருக்கடியான ஒருகாலகட்டத்தில் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க அவருக்கு இருக்கக்கூடிய பதவிக்காலத்தின் இரண்டரை வருடங்களை பூர்த்தி செய்வரா என்ற கேள்வி ஆரம்பத்தில் எழுந்திருந்தது. அதற்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது: பாராளுமன்றத்தில் ஆதரவற்ற...

பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள கிழக்கு ஆபிரிக்க நாடுகள்- பகுதி 1

கிழக்கு ஆபிரிக்காவில் கடும் வரட்சியின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பட்டினிச்சாவைத் தற்போது எதிர்கொண்டிருக்கிறார்கள். இவ்விடயத்தை முதன்மைப்படுத்தி, அதாவது கிழக்கு ஆபிரிக்காவில் பல மில்லியன் எண்ணிக்கையிலான மக்கள் போதிய உணவின்றி பட்டினியை எதிர்நோக்கியுள்ளதாக அனைத்துலக...

கெரில்லா தாக்குதலில் இழப்புக்களை சந்திக்கிறதா ரஸ்யா? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கையானது தற்போது ஒரு கெரில்லா தாக்குதலை எதிர்கொள்ளும் நிலைக்கு மாற்றமடைந்து வருகின்றது. ஆகஸ்ட் மாதம் உக்ரைனின் சுதந்திரதினம் கொண்டாடப்படுவதால் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை உக்ரைன் மேற்கொள்ளலாம் என்ற...

மலையக கல்விச் சவால்கள்-  துரைசாமி நடராஜா

இலங்கை இப்போது பல துறைகளிலும் சவால்களை சந்தித்து வரும் நிலையில் இதனால் ஏற்படும் தாக்க விளைவுகள் அதிகமாகியுள்ளன. இவற்றுள் கல்வித்துறை மிகவும் முக்கியமானதாக விளங்குகின்றது. கல்வித்துறையின் பின்னடைவுகள் பாதிப்புகள் பலவற்றுக்கும  அத்திபாரமாக அமையும் நிலையில்...

திருக்கோணேஸ்வரம்- காத்திருக்கும் ஆபத்து! – அகிலன்

ஈழத் தமிழர்களின் தலைநகராகக் கருதப்படும் திருகோணமலையில் உள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோணேஸ்வரம் கோவிலின் ஆபத்தான நிலை தொடர்பில் மீண்டும் பேசப்படுகின்றது.  இவ்விடயத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உடனடியாகச் செயற்படாவிட்டால், திருக்கோணேஸ்வரம் முற்றுமுழுதாக சிங்கள...