பராமரிப்பாளரை அணைத்தபடியே  மரணித்த  உலகப் புகழ் பெற்ற டகாசி

உலகப் புகழ் பெற்ற டகாசி

இயல்பாக செல்ஃபிக்கு முகம் கொடுத்து உலகப் புகழ் பெற்ற டகாசி என்ற கொரில்லாவின் அந்தப் புகைப்படம்  அப்போது பிரபல்யமானது.

இந்நிலையில், அந்த கொரில்லா தனது 14 வயதில் நீண்ட உடல்நலக் குறைவு காரணமாக தன்னை குழந்தையில் இருந்து பராமரித்து வந்த பரமரிப்பாளரை அணைத்த படியே உயிரிழந்துள்ளது.

கொங்கோ ஜனநாயக குடியரசில் உள்ள ஆப்ரிக்காவின் பழமையான தேசிய பூங்காவான, விருங்கா கொரில்லா காப்பகத்தில்தான் அந்த 14 வயது பெண் கொரில்லா உயிரிழந்துள்ளது.

2007ஆம் ஆண்டு கடத்தல்காரர்கள் டகாசியின் பெற்றோரை கொன்றுவிட்டிருந்தபோது இரு மாத குழந்தையாக இருந்த டகாசியை காப்பாற்றிய விலங்கு நல பாதுகாவலர்கள், விருங்கா தேசியப் பூங்காவில்  வைத்து அண்ட்ரே பவுமா என்பவரால் பராமரிக்கப்பட்டு வந்தது.

அன்றிலிருந்து டகாசியின் இறுதி நிமிடம் வரை ஆண்ட்ரே பவுமாதான் அதனைப் பராமரித்து வந்தார்.

உலகப் புகழ் பெற்ற டகாசி

2019-ல் டகாஸியும், இன்னொரு பெண் கொரில்லாவான டேஸேவும் காங்கோ விருங்கா தேசியப் பூங்காவில் பராமரிப்பாளர்கள் இருவர் செல்ஃபி எடுக்க இடையில் தோரணையாக நின்று போஸ் கொடுத்த காட்சி ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டகாசியின் இழப்பு குறித்து ஆண்ட்ரே பவுமா விடுத்துள்ள அறிக்கையில்,

அதில், ”நான் டகாஸியுடன் பழகிய நாட்கள் மனித குலத்திற்கும் கொரில்லா ஏப்களுக்கும் இடையே ஏன் நெருக்கம் தேவை என்பதை உணர்ந்தேன். அதேபோல், நாம் ஏன் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன். நான் அவளை ஒரு குழந்தையாக நினைத்து நேசித்தேன். அவளுடைய புன்னகை பூக்கும் முகம் ஒவ்வொரு முறை நான் அவளைப் பார்க்கும் போதும் எனக்கு மகிழ்ச்சியைக் கடத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply