அம்பாறையில் சுகாதார ஊழியர்கள் போராட்டம்

சுகாதார ஊழியர்கள்

அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி நிலைய சுகாதார ஊழியர்கள் இன்று காலை தொடக்கம் பிற்பகல் வரையில் அடையாள வேலை நிறுத்த  போராட்டத்தினை மேற்கொண்டனர்.

ஏனைய வைத்தியசாலைகளில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7500ரூபா கொடுப்பனவினை தமக்கும் வழங்குமாறு கோரியே இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 7.00மணி தொடக்கம் பகல் 01.00மணி வரையில் வேலை நிறுத்தம் மேற்கொண்ட சுகாதார ஊழியர்கள், வைத்தியசாலைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்தனர்.

ஏனைய வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் 7500ரூபாவினை ஆயுர்வேத வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


ilakku-weekly-epaper-150-october-03-2021

Leave a Reply