தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் பையூர், வேலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாம்களில் அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை குழு வளாகத்தில் இலங்கை ஏதிலிகள் முகாம் உள்ளது.
ஆய்வின்போது இலங்கை ஏதிலிகள் முகாமைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:-
குடிநீர் பிரச்சினை
நாங்கள் இப்பகுதியில் 32 ஆண்டுகளுக்கு முன்பு அகதிகளாக தஞ்சமடைந்தோம். இன்று வரை ஒரே இடத்தில் தகடுகளால் அறை அமைத்துத் தங்கி வசித்து வருகிறோம்.
இங்கேயே எங்களது குழந்தைகள் பிறந்து பெரிய ஆளாகி திருமணம் செய்து கொண்டனர். எங்களுக்கு தமிழகத்திலேயே குடியுரிமை பெற்றுத் தர வேண்டும்.
இந்த இடத்தில் எங்களுக்குப் போதிய வசதியில்லை. வேறு இடத்துக்கு மாற்றித் தர வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகிறோம்” என மேலும் தெரிவித்துள்ளனர்.