Home Blog Page 3137

ஞானசார பௌத்த மதகுருவின் விடுதலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம்

ஞானசார பௌத்த மதகுருவை விடுவிப்பதற்கு சிறீலங்கா அரச தலைவர் அனுமதி வழங்கியதற்கு தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (23) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவர் ஞானசார பௌத்த மதகுருவிற்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் தனது பதவியின் அதிகாரத்தையும், நாட்டின் சட்டத்தையும் அரச தலைவர் தவறான வழியில் பயன்படுத்தியுள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளரான பௌத்த மதகுரு பௌத்த மதம் அல்லாதோர் மீது மேற்கொண்ட வன்முறைக்காக சிறைக்குச் சென்றவர். அவரின் உயர் நீதிமன்ற மனுவும் நிராகரிக்கப்பட்டிருந்தது.

சிறீலங்கா அரசு எல்லா மத வன்முறையாளர்களையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். மத வன்முறைகளை நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நிலையில் இது அவசியமானது. ஆனால் பௌத்த மதகுருவுக்கு வேறு ஒரு நீதியும், ஏனைய மதத்தவர்களுக்கு வேறு நீதியும் வழங்குவது நாட்டு மக்களுக்கு தவறான தகவலை வழங்கும்.

சிறீலங்கா அரச தலைவரின் இந்த நடவடிக்கையை நாட்டு மக்கள் அனை-வரும் கண்டிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனாதிபதி பொதுமன்னிப்பில் சிங்கள பௌத்த கடும்போக்கு தேரர் விடுதலை

பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் சிறையிலிருந்து விடுதலைசெய்யப்பட்டார். பிற மதத்தவர் மீதான வன்முறைகள்,  நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் ஆறு ஆண்டுக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அவர் சிறிலங்கா ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்

சனாதிபதி மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை சிறைச்சாலை திணைக்களம் இன்று (மே 23) பெற்றுக்கொண்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னக்கோன் இன்று மாலை உறுதிப்படுத்தினார்.இன்று சனாதிபதி செயலாகத்தால்சிறைச்சாலைகள் மற்றும் நீதித்துறை மறுசீரமைப்புத் திணைக்களத்தின் தலைவர் தலதா அத்துகோரலவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த ஆவணங்கள் பின்னதாக சிறைச்சாலை ஆணையாளருக்கு அனுப்பிவைக்கப் பட்டிருந்தன.

ஆடை விதிமுறைகள் தொடர்பில் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்து

ஆள் அடையாளத்தை மறைக்கும் ஆடைகள் தொடர்பான வர்த்தகமாணி அறிவித்தலுக்கு அமைவாக நடந்துகொள்ளும்படி கல்வி அமைச்சால் பாடசாலைகளுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன.

முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து பலருக்கு சரியான விளக்கம் இன்மையால் பிரச்சினைகள் தோன்றியதையடுத்து இந்த கடிதங்கள் அனுப்பிவைக்கப் பட்டதாக கூறப்படுகிறது.
சில பட்ஸையாக்களில் ஆசிரியைகள் முகத்தை முழுமையாக மறைத்தபடி ஆடையணிந்து வந்ததும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் முகத்தை மறைத்தபடி தலைக்கவசம் அணிந்து வந்ததாகவும் தெரியவருகிறது.

இந்த நிலைமை தொடர்பில் நடவடிக்கையை மேற்கொண்ட கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் அடங்கிய விஷேட கடிதம் ஒன்றை அனுப்பி வைப்பதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள்

ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள் WhatsApp Image 2019 05 23 at 13.37.43 ஒரே பார்வையில் இந்திய தேர்தல் முடிவுகள்

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் மோதல் போக்கு நீடித்து வருகின்றது. ஈரான் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா, மத்திய கிழக்குப் பகுதியில் போர்க்கப்பல், போர் விமானம் மற்றும் இராணுவ தளபாடங்களை குவித்து வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்று ஈரான் அதிபர் ஹசன் ருஹானி உறுதிபட தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், ”ஈரானின் உறுதியான வளர்ச்சியை சிதைத்து விடலாம் என்பது எதிரிகளின் மாயை ஆகும். பொருளாதார தடைகளால் உருவாகியிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையிலும் ஈரான் நிலையான வளர்ச்சியினை நோக்கிப் பயணிக்கிறது.

அமெரிக்காவின் எவ்வித அழுத்தங்களுக்கும் ஈரான் அடிபணியாது எனக் குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

வடபகுதியில்  படையினர் விசேட கண்காணிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக வடக்குப் பிரதேசத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ். கைதடியிலுள்ள வடமாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டு பேசுகையில்,  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. எனினும் விரைவில் சோதனைகளை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இதுவரை 4 அநாமதேய கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம், அவற்றில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு நாம் அதிக பாதுகாப்பை வழங்கியுள்ளோம். இவ்வாறு அநாமதேய கடிதங்களை எழுதுபவர்கள் விரைவில் இனங்காணப்பட்டு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

 

 

 

தமிழகத்தில் மீண்டும் தோற்றுப் போன பாரதிய ஜனதா கட்சி

இந்தியா முழுவதும் பாஜக முன்னிலை பெற்று வந்தாலும் தமிழகத்தில் நேர்மாறாக தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி 300இற்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றது. ஆனால் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் நாடாளுமன்ற தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக வேட்பாளர்கள் தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பல வெற்றிகளை பெற்றிருந்தாலும் இதுவரை தமிழகத்தில் வெற்றி பெறவில்லை. கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் ஜெயலலிதா, பாஜகவிற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா இராணுவத்தில 10 புதிய மேஜர் ஜெனரல்கள்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் பதவியுயர்வை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

பிரிகேடியர்களான கே.எம்.ஆர்.பி.கருணாதிலக, ஐ.ஓ.டபிள் மடோல,  பி.ஜே.கமகே, எச்.பி.என்.கே.ஜெயபத்திரன, ஆ.கே.பி.எஸ்.கெற்றகும்புர, ஏ.எஸ். ஆரியசிங்க, டபிள்.டி.சி.கேகோஸ்தா, பி.ஐ.பத்திரண, ஜி.எச்.ஏ.எஸ் பண்டார, பி.பி.எஸ்.டி.சில்வா ஆகியோரே பதவியுயர்த்தப்பட்டவர்களாவர்.

2019 மே 10 ஆம் திகதியிலிருந்து இவர்களின் பதவியுயர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன.

இந்த ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளான பல மேஜர் ஜெனரல்கள் ஓய்வு பெற்றதையடுத்து, புதிதாக 10 மேஜர் ஜெனரல்கள் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரகாலச்சட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு தற்போது இராணுவத்தில் பதவி உயர்வுகளை வழங்குவது சிறீலங்காவில் வாழும் சிறுபான்மை இன மக்கள் மனித உரிமை மீறல்களைச் எதிர்கொள்ள நேரிடலாம் எனக் கருதப்படுகின்றது.

 

 

தேர்தல் முடிவுகள் 2019- ஆட்சியமைக்கப்போவது யார்? பா.ஜ.க முன்னிலையில்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிலிருந்து மே 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளில் வாங்குப் பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், வெற்றிடமாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா,அருணாசலப் பிரதேசம், சிக்கம் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடந்தது.

காலை 10.30 வரையான தேர்தல் முடிவின்படி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதிகளில் 12 இடங்களில் தி.மு.கவும்.  10 இடங்களில் அ.தி.மு.கவும் முன்னிலையில் உள்ளது. ஆனாலும் இந்த முடிவு சிலவேளைகளில் நேர்மாறாக மாறலாம் என ஆய்வாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். காரணம் எல்லா தொகுதிகளிலும் மிகவும் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசமே காணப்படுவதாகவும், இதன் காரணமாக வாக்கு முழுமையாக எண்ணி முடிக்கும் போது நிலைமை மாறலாம் எனவும் அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளில் 291தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலையிலும் 2 தொகுதிகளில் அ.தி.மு.கவும் முன்னிலையில் உள்ளன.

இதனால் மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்கலாம்.

இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தல் – ஒரு தொகுப்பு

மொத்த தொகுதி                         543

தேர்தல் நடந்தது                           542

நடக்காதது                                  1 (வேலுர்)

தேர்தல் அறிவிப்பு வெளியான  நாள் 18 மார்ச் 2019

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் 25.மார்ச் 2019

மனுக்கள் வாபஸ்பெற இறுதி நாள் 29 மார்ச் 2019

முதல் வாக்களிப்பு நாள் 11 ஏப்ரல் 2019

இறுதி வாக்களிப்பு நாள் 19 ஏப்ரல் 2019

வாக்கு  எண்ண தொடங்கியது 23 ஏப்ரல் காலை 8மணி

7 கட்டங்களாக வாக்களிப்பு நடைபெற்றது.

கட்டம் வாக்களிப்பு திகதி தொகுதி எண்ணிக்கை
1 11.04.2019 91
2 18 .04.2019 96
3 23.04.2019 115
4 29.04.2019 71
5 06.05.2019 51
6 12.05.2019 59
7 19.05.2019 59
மொத்தம் 542

 

 

 

ஐ.எஸ் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்கா முஸ்லீம்களே ஐ.எஸ் இன் கொள்கையை தெரிவு செய்தனர் – ஆர்.ஏ.என்.டி

ஒரு சிறிய பயங்கரவாதக் குழு எவ்வளவு பெரிய சேதங்களை உண்டுபண்ண முடியும் என்பதற்கு சிறீலங்காவில் இடம்பெற்ற தாக்குதல் மிகச் சிறந்த உதாரணம். ஐ.எஸ்.ஐ.எஸ் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்கா முஸ்லீம்களே ஐ.எஸ் இனை தெரிவு செய்தனர் என ஆர்.ஏ.என்.டி நிறுவனத்தின் பிரதம ஆய்வாளரும், ஆரசியல்த்துறை விஞ்ஞானியுமான ஜொனா பிளாங் தெரிவித்துள்ளார்.

ஆய்வுகள் மற்றும் கற்கை நெறிகளின் ஊடாக பொதுக் கொள்கை ஒன்றை உருவாக்கும் நோக்கத்துடன் இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் 1948 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பாகும். 1,900 பணியாளர்களைக் கொண்ட இந்த நிறுவனம் 50 நாடுகளில் இயங்குவதுடன் பல நாடுகள் எதிர்நோக்கும் சவாலான பிரச்சனைகளுக்கும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றது.

அமெரிக்காவின் ஹவாட் பல்கலைக்கழகத்தில் அரசியல் கல்வியை நிறைவு செய்த ஜொனா ஆர்.ஏ.என்.டி நிறுவனத்தில் இணைவதற்கு முன்னர் அமெரிக்காவின் தென்னாசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான வெளியுறவுக் கொள்கைப் பிரிவில் பணியாற்றியிருந்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கடந்த வாரம் அவர் வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

புனித ஞாயிறு தாக்குதலின் பின்னர் வரலாற்றில் மிகவும் உணர்திறன் மிக்க காலப்பகுதியை சிறீலங்கா அரசு கடந்து கொண்டிருக்கின்றது. முதலில் இந்த தாக்குதல் அரசியல் தவறு அதன் பின்னர் தான் அதனை நாம் புலனாய்வுப் பிரிவின் தோல்வி எனக் கூறலாம்.

இரண்டாவதாக ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஜ.எஸ் தீவிரவாதிகள் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் குழுக்களே ஐ.எஸ் இனை தெரிவு செய்தனர். அவர்கள் ஐ.எஸ் இடம் இருந்து பயிற்சிகளைப் பெற்றுள்ளனர். ஆனால் தாக்குதல் திட்டத்தை அவர்களே வகுத்துக் கொண்டனர்.

johna blank ஐ.எஸ் சிறீலங்காவை தெரிவு செய்யவில்லை சிறீலங்கா முஸ்லீம்களே ஐ.எஸ் இன் கொள்கையை தெரிவு செய்தனர் - ஆர்.ஏ.என்.டிசிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளுடன் போரிட்டிருந்தாலும், இவ்வாறான ஒரு தாக்குதலை அவர்கள் வரலாற்றில் எதிர்கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளுடனான போரில் அவர்கள் எதிர்கொண்டது ஒரு இனத்தின் அடையாளம் மற்றும் அரசியல் தொடர்புடைய பிரச்சனை. ஆனால் தற்போதைய தாக்குதலில் எதிர்கொள்வது மதம் தொடர்புடைய பிரச்சனை. ஐ.எஸ்.ஜ.எஸ் தோற்றம் பெறுவதற்கு முன்னர் கிறிஸ்த்தவர்கள் குறிவைக்கப்படவில்லை.

இந்த தாக்குதலில் ஒற்றை ஓநாய் தத்துவம் பின்பற்றப்படவில்லை. ஒரு குழு எந்தவித வெளித்தொடர்புகளுமின்றி ஐ.எஸ் இன் தத்துவங்கள் மற்றும் கோட்பாடுகளைப் பின்பற்றி இந்த தாக்குதலை நடத்தி முடித்துள்ளது.

அரசின் மிகவும் பின்தங்கிய செயற்பாட்டால் ஏற்பட்ட அரசியல் தோல்வியே இந்த தாக்குதல். எச்சரிக்கைகள் முன்னரே கிடைத்திருந்தன ஆனால் அதனை சிறீசேனாவின் அலுவலகமே தாமதித்திருந்தது. அவர் அதனை ரணிலின் அலுவலகத்திற்கு அனுப்பவில்லை அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று அவர் ரணிலை நம்பவில்லை, இரண்டாவது அவருக்கும் ரணிலுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள். மேலும் இந்தியா ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாக அவர் கருதியதால் இந்தியாவின் புலனாய்வுத்தகவல்களை அவர் அனுப்பவில்லை.

ஒரு நாட்டின் இரு அரசியல் தலைவர்கள் தமக்கிடையே உள்ள முரன்பாடுகளை தீர்க்காத வரையில் அவர்களால் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் எனில் பல நாடுகளின் உளவு அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு கடும்போக்கை முன்னர் கடைப்பிடித்திருந்தது. அதுவே விடுதலைப் புலிகளைப் பலப்படுத்தியிருந்தது. அதே தவறை அரசு தற்போது முஸ்லீம்கள் விடயத்தில் மேற்கொள்ளக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.