Home Blog Page 3138

போர்க் குற்றவாளிகளுக்கு மீண்டும் அதிகாரம்: உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பு

வன்னிப் போரில் பாதுகாப்பு வலையத்தின் மீது தாக்குதல் நடத்திய மற்றும் கெயிட்டியில் அமைதிப் பணியில் ஈடுபட்டபோது சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு சிறீலங்காவில் மீண்டும் அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே அங்கு சட்ட ஒழுங்கு மிகப் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளது என உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்பும், சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பும் இணைந்து தயாரித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

புனித ஞாயிறு இடம்பெற்ற தாக்குதலை சிறீலங்காவில் உள்ள முஸ்லீம் குழுக்களே நிகழ்த்தியிருந்ததாக நம்பப்பட்டது எனினும் ஐ.எஸ் அமைப்பு அதற்கு உரிமை கோரியிருந்தது.

இந்த தாக்குதலின் பின்னர் சிறீலங்காவில் அச்சம் தோன்றியுள்ளது. மேலும் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 10,000 படையினர் மேற்கு மாகாணத்தில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போர் நடைபெற்ற காலத்தில் இந்த படையினருக்கு கைது செய்யவும், தடுத்து வைக்கவும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. தற்போது சிறீலங்கா அரசு மீண்டும் அவசரகாலச்சட்டத்தை பிறப்பித்திருப்பது நீதிமன்றத்தின் அனுமதியின்றி தேடுதலை மேற்கொள்ளவும், கைது செய்யவும் படையினருக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.

புலானய்வுத்துறையினரை தண்டனைகளில் இருந்து காப்பாற்றும் திட்டம் ஒன்றை ஏற்கனவே சிறீலங்கா முன்வைத்துள்ளது. இது துன்பமான விடயம், ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தண்டிக்கப்படவில்லை.

தற்போது படையினரை வழிநடத்தும் அதிகாரிகளின் விபரத்தை இந்த ஆவணத்தில் ஆராய்ந்துள்ளோம். பாதுகாப்பு முக்கியமானது எனினும் மனித உரிமைகளையும் நாம் உறுதிப்படுத்தவேண்டும். ஆனால் தற்போதை பாதுகாப்பு நடவடிக்கைகளில் அதிகளவு மனித உரிமை மீறல்களுக்கான வாய்ப்புக்கள் உள்ளது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள படை அதிகாரிகளில் பலர் வன்னியில் இடம்பெற்ற இறுதிப்போரில் பெருமளவான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள். அவர்களில் இருவரின் பெயர்கள் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையிலும் உள்ளது.

ஒருவர் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு நடவடிக்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர், மற்றும் இருவர் கெயிட்டி பகுதியில் அமைதிப்படையாக பணியாற்றிய சமயம் சிறுவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டவர்கள்.

JDS ITJP போர்க் குற்றவாளிகளுக்கு மீண்டும் அதிகாரம்: உண்மைக்கும் நீதிக்குமான அனைத்துலக அமைப்புகூட்டு நடவடிக்கை தலமைப் பொறுப்பு ஏப்பிரல் மாதம் 29 ஆம் நாளில் இருந்து மேஜர் ஜெனரல் சத்தப்பிரியா லியனகேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பிரிவின் தலைமையை பதுகாப்பு படையின் பிரதம அதிகாரியான அட்மிரல் ரவீந்திரா விஜயகுணரட்ன ஏற்றுள்ளார்.

2009 ஆம் ஆண்டு கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டவர். தற்போதைய நிமனத்திற்கு முன்னரே மேஜர் ஜெனரல் லியனகே 37 அதிகாரிகளையும் 1,783 படையினரையும் கொண்டு மேற்கு மாகாணத்தில் உள்ள ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியை மேற்கொண்டுள்ளார்.

2009 ஆம் இடம்பெற்ற போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம் 30-1 இல் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை சிறீலங்கா அரசு நிறைவேற்றவில்லை. மறுவளமாக அவர்களுக்கு அதிக அதிகாரங்கள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. போரில் பாதுகாப்பு வலையத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள், அமைதிப் பணியில் சிறுவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட அதிகாரிகள் இவர்கள். எனவே சிறீலங்காவில் சட்ட ஒழுங்கு மிகப் பெரும் ஆபத்தைச் சந்தித்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அறிக்கையை பார்வையிட கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்.

http://www.ilakku.org/wp-content/uploads/2019/05/The-men-now-patrolling-sri-lanka-ITJP-JDS.pdf

சீனாவின் ஆளில்லா விமானங்கள் தரவுகளைத் திருடுகின்றன – அமெரிக்கா

சீனாவில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்கள், பிற நாடுகளில் தரவுகளைத் திருடி, பீஜிங்கில் உள்ள உளவு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சீன – அமெரிக்க வணிகப் போரினிடையே, முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனாவின் தொழில்நுட்பத் துறையானது கண்காணிப்பை செலுத்துவதால் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த D J J நிறுவனம் தான், உலகில் பயன்படுத்தப்படும் வணிக ஆளில்லா விமானங்கள் 70% அளவிற்கு உற்பத்தி செய்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தயாரித்த ஆளில்லா விமானங்களை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

மேலும் சீன நிறுவனமான ஹுவேய் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி தனது நெருங்கிய நட்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

அவசரகால சட்டம் – அதி விசேட வர்த்தமானி இன்று வெளியீடு

சிறிலங்காவில் அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கும் விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாக்கும் நோக்கில் அவரகாலச்சட்டம்  நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை கருத்திற் கொண்டு, சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் அவசரகாலச் சட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறீலங்கா அரசு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி சிறுபான்மை இன மக்களை துன்புறுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் ஏழுந்துள்ள நிலையில் தற்போது அவசரகாலச்சட்டத்தை அது கொண்டுவந்துள்ளது சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்கும் உத்தியாகும் எனக் கருதப்படுகின்றது.

புலிகள் மீதான தடையை நீக்குமாறு பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் நாடுகடந்த தமிழீழ அரசின் ஒரு குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடையை நீக்குவது குறித்து அந்தக் குழுவினரிடம் இந்த வருட இறுதியில் நீதிமன்றம் சாட்சியம் கோரும் என்று “மோர்ணிங் ஸ்டார்” இற்கு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். அத்துடன் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் வழக்கினை விசாரிக்கும் மேன்முறையீட்டு ஆணையத்தில் இந்த விடயம் இரகசியமாக விசாரிக்கப்பட வேண்டுமென அரச திணைக்களம் விருப்பம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு ஐரோப்பிய நீதிமன்றம் தமிழர் மீதான தடையை நீக்க வேண்டும் என்று  பிரித்தானியா உள்ளிட்ட, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சட்டத்தரணிகள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்தியா, ஜப்பான் உதவியுடன் கொழும்பு துறைமுக அபிவிருத்தி

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தை இந்தியா, ஜப்பான் உதவியுடன் சிறிலங்கா அபிவிருத்தி செய்யவுள்ளதாக ஜப்பானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் முக்கியமான இடத்தை கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் பகுதி வகிக்கவும்,   தெற்காசியாவைச் சுற்றி கடல் போக்குவரத்தை அதிகரிக்கவும் மூன்று நாடுகளின் அரசாங்கங்களும் முடிவு செய்தன.

பாதை மற்றும் அணைத் திட்டத்தைப் பயன்படுத்தி பிராந்தியத்தில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் இவ்வேளையில், ஜப்பான் தனது சுதந்திர மற்றும் திறந்த இந்தோ – பசுபிக் பெருங்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் மூலோபாயத்தை முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்கை வகிக்க விரும்புகின்றது என்றும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்தது.

கொழும்பு துறைமுக அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில் மூன்று நாடுகளும் கையெழுத்திடும் என்றும், எதிர்வரும் மார்ச் மாதம் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பாரிய கொள்கலன் கப்பல்கள் நுழையும் வகையில் இந்த முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக மூன்று நாட்டு அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

இந்தோனேஷியாவில் சனாதிபதிக்கெதிரான போராட்டம் – 6 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயம்.

இந்தோனேஷியாவில் கடந்த மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து தேர்தலில் 55% வாக்குகளைப் பெற்ற ஜோகோ விவோடோ ஜனாதிபதி பதவிக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
இதனையடுத்து தேர்தலில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து எதிர்தரப்பினர் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பிரபுவோ சுபியோவின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

ஜோகோவை ஜனாதிபதியாக நியமித்த பின்னர், ஜகார்த்தா முழுவதும் இரண்டாவது நாளான ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தபட்சம் ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துமுள்ளனர்.

தலைநகரில் போக்குவரத்துப் பாதைகள் மூடப்பட்டதுடன் 20,000 க்கும் அதிகமான காவல் துறையினர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.18b303d3ac1043d886ed49432b5a7ff4 18 இந்தோனேஷியாவில் சனாதிபதிக்கெதிரான போராட்டம் - 6 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயம்.

எழுவர் விடுதலை – ஆளுநருக்கு நிறையும் தந்திகள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றம் சுமத்தப்பட்ட எழுவரையும் விடுவிக்கக் கோரி, தமிழக ஆளுநருக்கு தந்திகள் அனுப்பும் போராட்டம் ஒன்று நடத்தப்படுகின்றது.

ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட போராட்டத்தில் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாவும் கலந்து கொண்டார். ஒரு இலட்சம் தந்திகள் அனுப்பும் திட்டம் இருப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தை ஏனைய அமைப்புகளும் முன்னெடுக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி அடங்கலாக 7பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரிடம் வழங்கி 9 மாதங்கள் முடிவுற்றது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவிற்கான நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியை அமெரிக்கா வழங்குகின்றது

சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா,  நாசகாரி நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியினை அரபிக் கடலில் அளிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கன் சான்டியாகோவை தளமாகக் கொண்ட வழிகாட்டல் ஏவுகணை நாசகாரி கப்பல்களான USS Spruance மற்றும் USS Stockdale ஆகியன, கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இந்தோ – பசுபிக் மற்றும் மத்திய கிழக்கில் பணிகளை மேற்கொண்டு விட்டு, நேற்று முன்தினம் தளம் திரும்பியுள்ளன.

John C.Stennis  விமானந்தாங்கி தாக்குதல் அணியில் இடம் பெற்ற இந்த நாசகாரிக் கப்பல்களில் ஒன்றான,  USS Spruance தெற்கு அரபிக் கடலில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து, நீர்மூழ்கி எதிர்ப்பு போர்ப் பயிற்சிகளை மேற்கொள்வதாக அமெரிக்க தகவல் தெரிவிக்கின்றது.

அமெரிக்க – சிறிலங்கா கடற்படையினரின்   CARAT 2019 கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போதே, அரபிக் கடலில் இருதரப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்தது.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கூட்டுப் பயிற்சிக்காக  USS Spruance என்ற நாசகாரி போர்க்கப்பல் கடந்த மாதம் 19ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இணைய வாய்ப்பு?

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க எதிர் துருவங்களான அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழக வரலாற்றில் நடக்காத ஒரு விஷயத்தை அமித்ஷாவின் முயற்சியால் மேற்கொள்ளவிருப்பதாகவும் அதற்கான திட்டங்களை அமித்ஷா செய்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

தமிழகத்தில் கருத்துக்கணிப்பு கூறியதுபோல் திமுக கூட்டணி 25 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு கட்சிகளையும் பாஜக கூட்டணியில் இணைக்கும் திட்டம் ஒன்று அமித்ஷாவிடம் இருக்கின்றதாம்.

அமைச்சர் பதவி உள்ளிட்ட ஒருசில சலுகைகளை காட்டினால் இரண்டு கட்சிகளும் இதற்கு சம்மதம் தெரிவிக்கும் என்றும் அமித்ஷா தரப்பினர் கூறி வருகின்றார்களாம்

ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை, அதிமுக இருக்கும் அணியில் திமுக எப்போதும் இருக்காது என்று திமுக தரப்பினர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே இந்த செய்தி வதந்தியா? அல்லது உண்மையா? என்பதை தேர்தல் முடிவு வெளிவரும் வரை  பொறுத்திருந்து பார்ப்போம்.

இலங்கையில் 2000 மேற்பட்ட இஸ்லாமிய மத கல்விநிலையங்கள்

இலங்கையில் முஸ்லிம்கள் விவகாரங்கள் துறை அமைச்சின் கீழ்
2,272 இஸ்லாமிய கல்வி நிலையங்கள் பதிவு செய்யப்பட்டு இயங்கிவருவதாகவும் மேலும் நூற்றுக்கணக்கான இவ்வாறான நிலையங்கள் தற்போது பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.இவற்றில் 1,675 குரான் மத்ரசாக்கள்,318 அரபுக் கல்லூரிகள் ,279அகடியா பாடசாலைகள் அடங்குகின்றன.

இந்நிலையில், முஸ்லிம்கள் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் மத்ரசாக்களை (இஸ்லாமிய கல்விக் கூடங்கள்) இனி கல்வித்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் சம்மதத்துடன் இதை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.image 61566dd29b இலங்கையில் 2000 மேற்பட்ட இஸ்லாமிய மத கல்விநிலையங்கள்

மேலும், இலங்கையில் இஸ்லாமிய சட்ட (ஷரியா) பல்கலைக்கழகம் அமைக்கவும் அனுமதி அளிக்க முடியாது. இதற்கான அதிகாரம் எங்கள் கையில் கிடையாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இயங்கிவரும் மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழத்துக்கு இனி மட்டக்களப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யவும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை விசாரித்த உண்மை கண்டறியும் குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

எனவே, பட்டப்படிப்புக்கான பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இனி அனுமதி அளிக்கும் வகையில் கல்வித்துறையில் சட்டத்திருத்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.