சிறிலங்கா இராணுவத்தில 10 புதிய மேஜர் ஜெனரல்கள்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 10 பிரிகேடியர் தர அதிகாரிகள், மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் பதவியுயர்வை சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார்.

பிரிகேடியர்களான கே.எம்.ஆர்.பி.கருணாதிலக, ஐ.ஓ.டபிள் மடோல,  பி.ஜே.கமகே, எச்.பி.என்.கே.ஜெயபத்திரன, ஆ.கே.பி.எஸ்.கெற்றகும்புர, ஏ.எஸ். ஆரியசிங்க, டபிள்.டி.சி.கேகோஸ்தா, பி.ஐ.பத்திரண, ஜி.எச்.ஏ.எஸ் பண்டார, பி.பி.எஸ்.டி.சில்வா ஆகியோரே பதவியுயர்த்தப்பட்டவர்களாவர்.

2019 மே 10 ஆம் திகதியிலிருந்து இவர்களின் பதவியுயர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன.

இந்த ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளான பல மேஜர் ஜெனரல்கள் ஓய்வு பெற்றதையடுத்து, புதிதாக 10 மேஜர் ஜெனரல்கள் பதவியுயர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவசரகாலச்சட்டத்தை மீண்டும் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு தற்போது இராணுவத்தில் பதவி உயர்வுகளை வழங்குவது சிறீலங்காவில் வாழும் சிறுபான்மை இன மக்கள் மனித உரிமை மீறல்களைச் எதிர்கொள்ள நேரிடலாம் எனக் கருதப்படுகின்றது.