தேர்தல் முடிவுகள் 2019- ஆட்சியமைக்கப்போவது யார்? பா.ஜ.க முன்னிலையில்

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதியிலிருந்து மே 19ஆம் திகதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

மொத்தம் 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 542 தொகுதிகளில் வாங்குப் பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், வெற்றிடமாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா,அருணாசலப் பிரதேசம், சிக்கம் ஆகிய 4 மாநில சட்டப் பேரவைகளுக்கும் தேர்தல் நடந்தது.

காலை 10.30 வரையான தேர்தல் முடிவின்படி தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதிகளில் 12 இடங்களில் தி.மு.கவும்.  10 இடங்களில் அ.தி.மு.கவும் முன்னிலையில் உள்ளது. ஆனாலும் இந்த முடிவு சிலவேளைகளில் நேர்மாறாக மாறலாம் என ஆய்வாளர் பேராசிரியர் சுப வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். காரணம் எல்லா தொகுதிகளிலும் மிகவும் சிறிய அளவிலான வாக்கு வித்தியாசமே காணப்படுவதாகவும், இதன் காரணமாக வாக்கு முழுமையாக எண்ணி முடிக்கும் போது நிலைமை மாறலாம் எனவும் அவர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சட்டமன்றத் தொகுதிகளில் 291தொகுதிகளில் பா.ஜ.க முன்னிலையில் உள்ளது. 37 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி முன்னிலையிலும் 2 தொகுதிகளில் அ.தி.மு.கவும் முன்னிலையில் உள்ளன.

இதனால் மீண்டும் மோடி பிரதமராக பதவியேற்கலாம்.

இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தல் – ஒரு தொகுப்பு

மொத்த தொகுதி                         543

தேர்தல் நடந்தது                           542

நடக்காதது                                  1 (வேலுர்)

தேர்தல் அறிவிப்பு வெளியான  நாள் 18 மார்ச் 2019

வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் 25.மார்ச் 2019

மனுக்கள் வாபஸ்பெற இறுதி நாள் 29 மார்ச் 2019

முதல் வாக்களிப்பு நாள் 11 ஏப்ரல் 2019

இறுதி வாக்களிப்பு நாள் 19 ஏப்ரல் 2019

வாக்கு  எண்ண தொடங்கியது 23 ஏப்ரல் காலை 8மணி

7 கட்டங்களாக வாக்களிப்பு நடைபெற்றது.

கட்டம் வாக்களிப்பு திகதி தொகுதி எண்ணிக்கை
1 11.04.2019 91
2 18 .04.2019 96
3 23.04.2019 115
4 29.04.2019 71
5 06.05.2019 51
6 12.05.2019 59
7 19.05.2019 59
மொத்தம் 542