வடபகுதியில்  படையினர் விசேட கண்காணிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக வடக்குப் பிரதேசத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ். கைதடியிலுள்ள வடமாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடமாகாண ஆளுநர் கலந்து கொண்டு பேசுகையில்,  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது. எனினும் விரைவில் சோதனைகளை குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இதுவரை 4 அநாமதேய கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம், அவற்றில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு நாம் அதிக பாதுகாப்பை வழங்கியுள்ளோம். இவ்வாறு அநாமதேய கடிதங்களை எழுதுபவர்கள் விரைவில் இனங்காணப்பட்டு அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.