Home Blog Page 3091

கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்டனர் – கோத்தாகவுக்கு எதிராக குற்றச்சாட்டு

முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக மனித உரிமை மீறல் வழக்குகள் பத்து அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யஸ்மின் சூக்காவை தலைமையாக கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நட்டஈட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களிற்கு மேலதிகமாக எட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக  அவர் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்-

இலங்கையின் ஜனாதிபதியாகும் நம்பிக்கையுடன் இருக்கும் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து அமெரிக்காவில் மத்திய மாவட்டத்திற்கான மாவட்ட நீதிமன்றில் 10 புதிய நட்டஈட்டு  கோரிக்கைகளை எதிர்நோக்குகின்றார்.

26 யூனில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களில், தமது பாதுகாப்பை கருத்திற்கொண்டு தம்மை அடையாளங் காட்டாமல் இருக்கும் 10 புதிய வழக்கு தொடுநர்கள் திரு ராஜபக்ச அவர்களின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காவல் நிலையங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் தாம் அனுபவித்த பயங்கரமாக மீறல்களை விபரிக்கின்றார்கள். அவர்கள் சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் சுடப்பட்டார்கள், கேபிள்களால் அடிக்கப்பட்டார்கள், பெற்றோலில் நனைத்த பினாஸ்டிக் பைகளை அவர்களது தலைகளுக்கு மேலாக போட்டு மூச்சு
திணறடிக்கப்பட்டார்கள்.

அத்துடன் அவர்களில் ஆறு பேர் திரும்பத் திரும்ப பாலியல்  வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதோடு பாலியல் ரீதியாகவும் தாக்கப்பட்டார்கள்.

இந்த 10 புதிய வழக்குத் தொடுநர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அவர்களில் எட்டுப் பேர் தமிழர்கள். இரண்டு பேர் சிங்களவர்கள்.

நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச சட்ட நிறுவனமான கோஸ்பீல்ட் உடன் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆறு வருட கால விசாரணைகளின் விளைவாகவே இந்த வழக்கு வந்துள்ளது. ஏப்ரல் 5 இல் கனடா பிரஜையான றோய் சமதானம் என்பவரின் சார்பாக முதலில் தாக்கல் செய்யப்பட்ட முன்னைய வழக்கில் இந்த வழக்கு தொடுநர்களும் இணைந்து கொள்கின்றனர்.

இந்த வழக்கானது அமெரிக்க நீதிமன்றங்களில் சித்திரவதையால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நிவாரணம் வழங்கும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது . திரு ராஜபக்சாவை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறி மூன்று தனிநபர்கள் திரு சமதானத்தை நேரடியாக தொடர்பு கொண்டு அவருக்கு அச்சுறுத்தல் விடுத்தயடுத்து 29 ஏப்பிரலில் ஒரு தொந்தரவை உடன் இடைநிறுத்துவதற்கான மனு ஒன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சகோதரர் இலங்கையினுடைய ஜனாதிபதியாக இருக்க, 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015வரை இலங்கையின் சக்திவாய்ந்த பாதுகாப்புச் செயலாளராக இருந்த திரு ராஜபக்ச, தண்டனைகளிலிருந்து விதிவிலக்குடன் திட்டமிட்ட ரீதியில் ஆட்களை கடத்தி சித்திரவதை செய்து, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி சந்தேக நபர்களிடமிருந்து பணம் பறித்த கட்டளையின் பாதுகாப்பு படைகளுக்கு பொறுப்பாக இருந்தார் என வழக்குத் தொடுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த துஸ்பிரயோகங்கள் நடந்த காலப் பகுதியில் ராஜபக்ச அமெரிக்க நாட்டு பிரஜையாக இருந்தார்.

தமக்கு நடந்த சித்திரவதைகளில் இலங்கையின் முக்கிய பொலிஸ் விசாரணை அதிகாரியான நிசாந்த டி சில்வா உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையான பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர் என வழக்குத் தொடுநர்கள் அடையாளங் காட்டுகின்றனர். உடல் முழுவதும் அடித்து, சீலிங்கில் இருந்து தலை கீழாக கட்டி தூக்கி தம்மை இரண்டு தடவைகள் சித்திரவதை செய்ததாக நிசாந்த டி சில்வாவை பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றார்.

கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியாக இருந்த பிரசன்ன டி அல்விஸ் என்பவரும் வழக்கு தொடுநர்களால் பெயர் குறிப்பிடப்படுகின்றார். இவர் சித்திரவதை செய்த உத்திரவிட்டதாகவும் சில சமயங்களில் சித்திரவதையில் பங்கெடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இவர் கோத்தபாயவிடமிருந்து நேரடியாக அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொண்டார் எனவும் சொல்லப்படுகின்றது.

“குற்றஞ்சாட்டப்பட்ட குற்றவாளிகள் பொலிஸ் படையில் முக்கிய விசாரணைப் பொறுப்புகளில் தொடர்ந்தும் இருப்பதானது இலங்கைக்குள் ஏன் நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் உள்ளது என்பதைக் காட்டுகின்றது” என ஐவுதுP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். “வெளிநாட்டில் ஒரு வழக்கினைக் கொண்டு வருவதே அவர்களுக்குள்ள ஒரே தெரிவாகும்”.

இந்தப் புதிய முறைப்பாடானது வவுனியா ஜோசப் முகாம், தலைநகர் கொழும்பு மற்றும் புல்மோட்டையிலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் காலியிலுள்ள பூசா தடுப்பு நிலையம் உட்பட்ட இராணுவ முகாம்களில் 2008 ஆம் ஆண்டிற்கும் 2013 ஆம் ஆண்டிற்கும் இடையில் இடம்பெற்ற சித்திரவதைகள் பற்றிய விரிவான குற்றச்சாட்டுக்களை கொண்டுள்ளது. இந்த முறைப்பாடு மேலும் இராணுவப்புலனாய்வு, குற்ற விசாரணைத் திணைக்களம், பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் விசேட புலனாய்வு சேவை உட்பட பொறுப்புவாய்ந்த பல்வேறு அரசாங்க முகவர் அமைப்புக்களையும் அடையாளங் காட்டுகின்றது.

வித்தியா ஜெயக்குமார் என்ற புனைபெயரின் கீழ் ராஜபக்ச மீது வழக்குத் தொடரும் ஒரு தமிழ் வழக்குதொடுநர் 2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் இராணுவ முகாம்களில் தான் 3 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டுகின்றார். முதல்நாள் இரவு பெண் சிங்கள இராணுவத்தினர் தமது கட்டளையதிகாரியான மேஜர் முனதுங்க மிருகனத்தனமான முறையில் பாலியல் வன்புணர்வு செய்வதற்கு அவரை கட்டிலுடன் கட்டினார்கள். இவர் பின்னர் ஒரு இராணுவ முகாமில் இளம் தமிழ்ப் பெண்கள் குழுவினருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் அங்கு ஒவ்வொருநாள் இரவும் கடமை முடித்து விட்டிருக்கும் இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு செய்வதற்கு வந்து ஒரு பெண்ணை தெரிவு செய்வார்கள்.

இவர் பின்னர் ஒரு பொலிஸ் தலைமையகத்தில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார். அத்துடன் இன்னுமொரு இராணுவ முகாமில் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுக்குள்ளானார். அவரைப் பிடித்து வைத்திருந்தவர்கள் கர்ப்பமாவதைத் தடுப்பதற்காக இவருக்கும் ஏனைய பெண்களுக்கும் கருத்தடை ஊசிகளை பல்வேறு இடங்களில் வைத்து போட்டார்கள்.

“உண்மையாக, நான் சந்தித்தவற்றில் பாலியல் அடிமைத்தனம் பற்றிய மோசமான சம்பவம் இதுவாகும்” என இந்த வழக்கினை தாக்கல் செய்த கோஸ்பீல்ட் நிறுவனத்தின் மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்கொட் கில்மோர் தெரிவித்தார். எமது கட்சிக்காரர்களுக்கு எதிராக கோத்தபாயவின் பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட பாலியல் வன்முறைகளும் அத்துடன் குற்றமிழைத்தவர்களை ஒட்டுமொத்தமாக தண்டனைகளிலிருந்து பாதுகாப்பதும் பாலியல் வன்புணர்வு என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட கொள்கையின் பகுதியாக இலங்கையில் இருந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது”.

“இந்த வழக்கிற்கு முன்வந்த றோய் இனதும் மற்றும் ஆண்கள் பெண்கள் என புதிய பத்து வழக்குத்தொடுநர்களினதும் மிகப் பெரிய துணிச்சலுக்கு நான் மரியாதை செய்ய விரும்புகின்றேன்” என கோஸ்பீல்ட் இன் தலைவர் மிச்சேல் கோஸ்பீல்ட் தெரிவித்தார்.

“இந்த அதிர்ச்சியான அனுபவங்களை மீளநினைவுபடுத்தி எங்களுடைய வழக்கறிஞர்களுக்கு சொல்லுதல் என்பது இதில் பங்பெடுத்த எல்லோருக்கும் மிகவும் கடினமானதாக இருந்தது அத்துடன் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையுடன் அவர்கள் இப்பொழுது நடத்தப்படுவார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு கொஞ்சமாவது நீதி கிடைப்பதற்கும் நாங்கள் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம்”

வழக்கு தொடுநர்கள் பற்றி சுருக்கம்

• றோய் சமதானம் – ஒரு கனேடியத் தமிழர் இலங்கைக்கு விஜயம் செய்த போது கைது செய்யப்பட்டார்.  சமதானம் பைப்புகள், துப்பாக்கியின் பின்புறம் போன்றவற்றால் அடிக்ககப்பட்டதுடன் அவரது மனைவி பிள்ளைகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்படுவார்கள் என்ற அச்சுறுத்தலின் கீழ் பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது.

• றமேஸ் தேவராஜன் (புனைபெயர்) – ஒரு தமிழ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர், தேவராஜன் பெற்றோலில் நனைக்கப்பட்ட ஒரு பொலித்தீன் பையினால் மூச்சுத்திணறச் செய்யட்டதுடன் ,சீலிங்கில் இருந்து தலைகீழாக கட்டித் தொங்கவிடப்பட்டதுடன் பொலிசாரால் அவரது குதிக்கால்களில் இரும்புக் கம்பியால் அடிக்கப்பட்டார்.

• சாந்தி பத்மநாதன் (புனைபெயர்) – அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒரு இளம் தமிழ்ப் பெண், பத்மநாதன் கடத்தப்பட்டு பொலிசாரால் விசாரிக்கப்பட்டதுடன் மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு அடிக்கப்பட்டு சிகரெட்டால் சுடப்பட்டதுடன் மிகவும் சூடான உலோக கம்பியினாலும்  சுடப்பட்டார்.

• நிமல் ஜெயசூரியா (புனைபெயர்) – ஒரு சிங்கள மனித உரிமைகள் செயற்பாட்டாளர், ஜெயசூரியா பொலிசாரால் அடிக்கப்பட்டதுடன் தமிழ்க் கைதிகள்  சித்திரவதைக்குள்ளாவதைப் பார்ப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார், அவருடைய சகபணியாளர்களை கண்டிக்குமாறு அவருக்கு அழுத்தங்கொடுக்கவே இவையாவும் இடம்பெற்றது.

• வித்தியா ஜெயக்குமார் (புனைபெயர்) – சிவில் சேவையாளராக LTTE இன் அரசாங்கத்தில்  இருந்த ஒரு இளம் தமிழர். இவர் இராணுவத்திடம் சரணடைந்தார், ஜெயக்குமார் ஒரு இராணுவமுகாமிலும் பொலிஸ் நிலையங்களிலும் வெளித் தொடர்புகள் எதுவும் இல்லாமல் வைக்கப்பட்டிருந்தார் அத்துடன் பிடிக்கப்பட்ட மற்றைய தமிழ்ப் பெண்களுடன் மூன்று வருடத்திற்கு மேலாக பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதை போன்றவற்றை அனுபவிக்க
நிர்ப்பந்திக்கப்பட்டார்.

• சமன் பெரேரா (புனைபெயர்) – பாதுகாப்பு படைகளில் உறுப்பினராக இருந்த ஒரு சிங்களவர் ,  அவர் LTTE யினருக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்,பெரேராவிக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை முள்ளுக் கம்பியைக் கொண்ட ஒரு ஊலோகப் பைப்பை அவரது மலவாசலுக்குள் புகுத்தலை உள்ளடக்கியிருந்தது.

• றமணன் சிவலிங்கம் (புனைபெயர்) – LTTE இனை ஆதரித்தமைக்காக கைது செய்யப்பட்ட  ஒரு தமிழ் மாணவன். சிவலிங்கம் திரும்ப திரும்ப சூடான  உலோகத்தால் சுடப்பட்டடன் பொற்றோலால் மூச்சுத் திணறச் செய்யப்பட்டார் அத்துடன் மிகவும் குளிரான கம்பியால் மலவாசல் வழியாக வன்புணர்வுக்கு  உட்படுத்தப்பட்டார்.

• சுரேஸ் ஜெயபாலன் (புனைபெயர்) – ஒரு தமிழ் LTTE உறுப்பினர், மனித உரிமைகள் மீறல்களை ஆவணப்படுத்தும் ஒரு தொண்டு நிறுவனத்தில்  பணியாற்றினார். ஜெயபாலன் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு
விசாரிக்கப்பட்டார்.

அவர்கள் அவரை சிகரெட்டினால் சுட்டதுடன் பெற்றோலில்  நனைக்கப்பட்ட பையால் மூச்சுத் திணறச் செயதார்கள். அத.துடன் அவர் மல வாசல்  வழியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.

• மயூரன் ராஜ்குமார் (புனைபெயர்) – ஒரு தமிழ் அரசாங்கப் பாடசாலை ஆசிரியர், LTTE இனருக்கு  உதவி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார், தடுப்பு முகாம் ஒன்றில் வைக்கப்பட்டதுடன் ,  அடிக்கப்பட்டதுடன், சிகரெட்டுக்களால் சுடப்பட்டு, சூடாக்கிய கம்பியினாலும் சூடு வைக்கப்பட்டார்.

• செந்தில் புவனேஸ்வரன் (புனைபெயர்) – யுகேயில் இருந்த ஒரு தமிழ்ப் பட்டதாரி மாணவன் ,  புவனேஸ்வரன் வீட்டுக்குச் சென்றபோது பொலிசாரால் கடத்திச் செல்லப்பட்டு தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டு அங்கு வைத்து அடிக்கப்பட்டு,  அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதற்கு சம்மதிக்கும் வரைக்கும் அவருடைய தோல் உரியும் வரையும் சூடாக்கிய எலோகத்தால் திரும்ப திரும்ப சுடப்பட்டார்.

• வசந்தி ரட்ணசிங்கம் (புனைபெயர்) – LTTE அரசாங்கத்தின் நிதிப் பிரிவில் பணியாற்றிய  ஒரு இளம் தமிழ்ப் பெண், ரட்ணசிங்கம் போர் வலயத்தை விட்டுத் தப்பியோடும் போது பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டு அவரை விசாரணை செய்தவர்களால் மரத்தடியால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டார். என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்தி ரணிலைக் காப்பாற்ற மேற்குலகம் முயற்சி

சிறீலங்காவில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள மரணதண்டனை உலக நாடுகளில் தலைப்புச் செய்தியாக வருவதால் அது சிறீலங்காவின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சிறீலங்காவுக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் றொட் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு சிறீலங்கா சுற்றுலாத்துறையில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெறும் என லோன்லி பிளனெற் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் தெரிவித்திருந்தது.

ஆனால் அதனை புனித ஞாயிறு தாக்குதல் இல்லாது செய்துவிட்டது. அதன் பின்னர் இடம்பெற்ற இன வன்முறையும் சிறீலங்காவின் சுற்றுலாத்துறையை அதிகம் பாதித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றும் அரசின் செயல் சுற்றுலாத்துறையை கடுமையாக பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மேற்குலகம் ரணிலின் அரசைக் காப்பாற்றும் முயற்சியாக சிறீலங்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகையில் சிறீலங்கா அரச தலைவர் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது தென்னிலங்கை அரசியல் களம் முரன்பாடான நிலையில் உள்ளதையே காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழரின் வாக்கினால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை , தமிழரின் அபிவிருத்தியை திட்டமிட்டு புறந்தள்ளி உள்ளது – மனோ

கடந்த காலங்களில் யுத்தம் காரணமாகவும், இனவாதம் காரணமாகவும் தமிழர்களின் வாழ்வு பல ஆண்டுகள் பின்நோக்கி திட்டமிட்டு கொண்டு செல்லப்பட்டு விட்டது. அவர்களுக்கு உரிய அபிவிருத்தி வாய்ப்புகள் தட்டி பறிக்கப்பட்டு விட்டன.

உதாரணமாக தமிழரின் பெரும்பான்மை வாக்கினால் உருவாக்கப்பட்ட கடந்த கிழக்கு மாகாணசபை ஆட்சி, தமிழரின் அபிவிருத்தியை திட்டமிட்டு புறந்தள்ளி உள்ளது. கிழக்கின் தமிழ் கிராமங்களை பார்த்தாலேயே இது தெரியும். இது கிழக்கின் கசப்பான உண்மை.

அப்படியே மலையகத்தில் இருந்த, தூரப்பார்வை இல்லாத அரசியல்வாதிகளால், தோட்ட தொழிலாளர் வாழ்வும் பின்தங்க வைக்கப்படடது. இது பெருந்தோட்ட புறத்தின் கசப்பான உண்மை.

வன்னியிலும் நிலைமை இப்படித்தான்.

தமிழர்களுக்கு இன்று கிடைத்துள்ள இந்த அபிவிருத்தி வாய்ப்பையும் தட்டி பறிக்கும் குறுகிய மனப்பான்மையை மாற்றிக்கொள்ளும் போதே உண்மையான இன நல்லிணக்கம் உருவாகும்.

மாத்தளை வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க முடிவு – ஜே.வி.பி

சிறீலங்கா அரசு மாத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிப்பதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கன்டுநெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மாத்தளை விமான நிலையத்தை நாம் வேறு ஒரு நாட்டுடன் இணைந்து செயற்படுத்த முடியாது. அது எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. விமானநிலையத்தை அபிவிருத்தி செய்ய நிதி தேவை என்றால் அரசு அதிக விமானங்களை வரவைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நிதிப் பற்றாக்குறை காரணமாகவே தாம் வேறு ஒரு நாட்டின் உதவியுடன் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முற்படுவதாக சிறீலங்காவின் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் அபயசிங்கா தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமான நிலையமாக பலாலி

சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலைத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்ர் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழ் கட்டளைகள் தொடர்பிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து பிரதி அமைச்சர் உரையாற்றினார்.

இந்த பணிக்காக பலாலி விமான நிலையம் நவீனமயப்படுத்தப்படும்.

இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருப்பதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இரண்டு அல்லது மூன்று மாதக் காலத்திற்குள் இந்த நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்படுவதுடன் இந்த விமான நிலையம் சிவில் விமான நிலையமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 15 விமான நிலையங்கள் உண்டு. இவற்றில் 2 சர்வதேச விமான நிலையங்கள் ஆகும். மத்தள விமான நிலையம் தற்பொழுது செயற்பட்டு வருகின்றது. இலங்கை சிவில் விமான சேவை எட்டு தெற்காசிய மத்திய நாடுகளில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.

இது ஆசிய நாடுகள் மத்தியில் ஆறாவது இடத்திலும் உலக நாடுகள் மத்தியில் 19 ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறு இருக்க,

பலாலி விமானநிலையம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் ஐயப்பாடுகளும் தமிழ்மக்களிடையே  நிலவிவருகின்றனசர்வதேச விமானநிலையம் எனற போர்வையில் தமிழ் மக்களின் வாழ்விடங்கள் சுவீகரிக்கப்படலாம் என்ற சந்தேகமும் , பலாலி விமானநிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் விமானநிலைய பணியாளர்கள் என்ற போர்வையில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படலாம் என அச்சமும் தமிழர்களிடையே நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் பலாலி விமான நிலையம் இந்திய படைத்துறை பாவனைக்காக பயப்படுத்தப்படலாம் என்ற செய்திகளும் உள்ளன.

அனைத்து சமூகங்களையும் சமமாக நடத்துவோரே பௌத்தர்கள் என பெருமைப்படமுடியும் – விக்கிரமபாகு 

சகல சமூகத்தவர்களையும் சமத்துவமானவர்களாக நடத்தினால்  மாத்திரமே பௌத்த தர்ம போதனைகளை  சரிவரக்கடைப்பிடிக்கின்றோம் என்று பெருமையாக கூறிக்கொள்ள  முடியும் என்று நவ சம சமாஜகட்சியின் தலைவர் விக்கிரமபாகு  கருணாரத்ன தெரிவித்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிராக நாட்டுமக்கள் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் சமன் என்ற  கொள்கையை மனதில் நிறுத்தினால்  மாத்திரமே முன்னோக்கி செல்ல இயலும். இதனையே  அனைத்து  மதங்களும் போதிக்கின்றன.

நாட்டை பயங்கரவாத்திலிருந்து மீட்க தற்போது கடினமான  பாதையில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. சில அரசியல்வாதிகளின் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் வகையில்  உள்ளது. இவற்றை கடந்தே நாம் பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார போருக்கு ஜி-20 மாநாட்டிலும் தீர்வு இல்லை

யப்பானின் ஒசாக்கா நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் கூட்டத்தொடரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிறம்பும், சீன அதிபர் சி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசி தற்போது இடம்பெற்றுவரும் வர்த்தகப்போருக்கு தீர்வைக்காண்பார்கள் என்ற நம்பிக்கைகள் குறைவாகவே உள்ளதாக யப்பான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் பல நாடுகளின் தலைவர்களிடம் நம்பிக்கையான சமிக்கைகள் காணப்பட்டாலும் இரு தரப்பும் அதிக தூரத்தில் உள்ளதாக வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் இன்று (29) அமெரிக்கா மற்றும் சீனா அதிபர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதால், பலத்த எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்களின் வரியை அமெரிக்க அதிபர் இரு மடங்காக அதிகரித்துள்ளார். மேலும் இறக்குமதி செய்யப்படும் 325 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களுக்கு வரியை அதிகரிக்கப்போவதாக மிரட்டி வருகின்றார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மொத்த பொருட்களும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. செல்லிடத் தொலைபேசிகள், கணணிகள் மற்றும் ஆடை வகைகள் அதில் அடங்குகின்றது.

சீனாவும் 60 மில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்கப் பொருட்களுக்கு வரியை அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாது அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரியவகை உலோகங்களின் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு சீனா முடிவெடுத்துள்ளது. இலத்திரனியல் சாதனங்களின் தயாரிப்புக்கு இந்த உலோகங்கள் அவசியமானது.

இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் போரினால் உலகின் பொருளாதரம் கடுமையான பாதிப்புக்களை சந்திக்கலாம் என அனைத்துலக நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்ரின் லாகார்ட் தெரிவித்துள்ளார்.

உலகின் மொத்த உற்பத்தியின் அளவு 2020 ஆம் ஆண்டு 0.5 விகிதத்தால் வீழ்ச்சியடையும் என இந்த மாதத்தின் ஆரம்பத்தில் ஐ.எம்.எஃப் தெரிவித்திருந்தது.

அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால், கைது செய்யப்படுவர் – கடற்படை கமாண்டர் சூரிய பண்டார

அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் நுழையும் தமிழக மீனவரகள் கைது செய்யப்படுவர் என சிறிலங்கா கடற்படை கமாண்டர் சூரிய பண்டார தெரிவித்தார்.

ஜுன் 26 நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4பேரை சிறிலங்கா கடற்படையினர் கைது செய்தனர். இது குறித்து கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்படி தெரிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், இந்தியக் கடற்பகுதியான வங்கக்கடல், பாக்கு நீரிணை, மன்னார் வளைகுடா கடலில் கடற்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டினால் கைது செய்து சிறையில் அடைத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா கடற்படைக் கமாண்டர் சூரிய பண்டார தெரிவித்தார்.

இறுதிப் போரில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன – சரோஜினி சிவச்சந்திரன்

2009 இறுதி யுத்த காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர், சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களை பாவித்தமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சரோஜினி சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே  அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 2009 மே 18ஆம் திகதி நிறைவுக்கு வந்த இறுதிப் போரின் போது 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டதாகவும் ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த யுத்தத்தில் சர்வதேச அரங்கில் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக போரில் அகப்பட்ட பொது மக்கள், போராளிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச பங்களிப்புடன் நீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஐ.நா.  இதற்காக சிறிலங்காவையும் இணைத்துக் கொண்டு, ஐ.நா வில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.  இதற்காக வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்காது தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் உருவாக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பரணகம தலைமையிலான  ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் போரில் தப்பிய தமிழ் மக்களும், முன்னாள் போராளிகளும் சிறிலங்கா அரசாங்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக முறையிட்டுள்ளனர்.

மைத்திரி – ரணில் தலைமையில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட ஜெனீவா பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராயும் முத்தெட்டுவேகம ஆணைக்குழுவிடமும் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை இரு அரசாங்கங்களும் நிராகரித்தே வந்துள்ளன.

 

 392 ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள்,1500 வெடிப்பிகள் – காத்தான்குடி  முகாமில் கண்டுபிடிப்பு

ஒல்லிக்குளம் இஸ்லாமிய பயங்கரவாத முகாமில் புடித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவைகள்,ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள் வாள்கள், வெடிப்பிகள் உட்பட பெருமளவு வெடிபொருட்கள் நேற்று (27) குற்றப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலில் தொடர்புடைய இரண்டாவது நிலைத்த தலைவர் முகமட் மில்கான் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட் டார். இவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பெருவளவான வெடிபொருட்கள் ஒல்லிக்குளம் முகாமில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.F3543295 E936 4894 903B CC22C4CB4775  392 ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள்,1500 வெடிப்பிகள் - காத்தான்குடி  முகாமில் கண்டுபிடிப்பு

இதனை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஜெலக்னைட் வெடிமருந்துக் குச்சிகள், வெடிப்பிகள், 184 யார் நீளமான வெடிப்பதிர்வு கடத்தி, Ak மற்றும் m 16 வகைத் சுரிகுழல் துப்பாக்கிகளுக்கான தோட்டாக்கள் , சவூதி அரேபிய வாள்கள் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன