சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்தி ரணிலைக் காப்பாற்ற மேற்குலகம் முயற்சி

சிறீலங்காவில் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ள மரணதண்டனை உலக நாடுகளில் தலைப்புச் செய்தியாக வருவதால் அது சிறீலங்காவின் சுற்றுலாத்துறையை பாதிக்கும் என சிறீலங்காவுக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் றொட் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு சிறீலங்கா சுற்றுலாத்துறையில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெறும் என லோன்லி பிளனெற் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் தெரிவித்திருந்தது.

ஆனால் அதனை புனித ஞாயிறு தாக்குதல் இல்லாது செய்துவிட்டது. அதன் பின்னர் இடம்பெற்ற இன வன்முறையும் சிறீலங்காவின் சுற்றுலாத்துறையை அதிகம் பாதித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றும் அரசின் செயல் சுற்றுலாத்துறையை கடுமையாக பாதிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மேற்குலகம் ரணிலின் அரசைக் காப்பாற்றும் முயற்சியாக சிறீலங்காவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகையில் சிறீலங்கா அரச தலைவர் அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவது தென்னிலங்கை அரசியல் களம் முரன்பாடான நிலையில் உள்ளதையே காட்டுவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.