மாத்தளை வானூர்தி நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க முடிவு – ஜே.வி.பி

சிறீலங்கா அரசு மாத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிப்பதாகவும், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் கன்டுநெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மாத்தளை விமான நிலையத்தை நாம் வேறு ஒரு நாட்டுடன் இணைந்து செயற்படுத்த முடியாது. அது எமது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. விமானநிலையத்தை அபிவிருத்தி செய்ய நிதி தேவை என்றால் அரசு அதிக விமானங்களை வரவைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நிதிப் பற்றாக்குறை காரணமாகவே தாம் வேறு ஒரு நாட்டின் உதவியுடன் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய முற்படுவதாக சிறீலங்காவின் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் அபயசிங்கா தெரிவித்துள்ளார்.