Home Blog Page 3011

ஒருநாள் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இருந்த இராணுவம் மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் நடாத்தப்பட்ட இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக அது குறித்த விசாரணைகளில்
சாட்சியமளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த குறித்த 184 பேரும் போய்ஸ் டவுன் . இராணுவ முகாம் வளாகத்திற்குள் வைத்தே படுகொலை செய்யப்பட்டதாக உள்ளுர் மக்கள் கருதுகின்றார்கள்.

சம்பவத்துடன் இலங்கை இராணுவத்துக்கும் ஊர்காவல் படையினருக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு விசாரணைகளின் போது தங்களால் சாட்சியங்கள் அளிக்கப்பட்ட போதிலும் எந்தவித நடவடிக்கையும் குற்றவாளிகளுக்கு எதிரா எடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றர்.

1989ம் ஆண்டு இந்திய அமைதிப்படை வெளியேற்றத்தின் பின்னர் மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் போர் நிறுத்த உடன்படிக்கையொன்று கடைப்பிடிக்கப்பட்டது.

Saththurukondan 2019 1 ஒருநாள் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்அந்த போர் நிறுத்தம் 1990 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் முறிவடைந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினரால் தனித்தும் கூட்டம் கூட்டமாகவும் கைது செய்யப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயுள்ளதாக மனித உரிமை அமைப்புகளினால் அவ்வேளை தகவல்களும் வெளியிடப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அவ்வேளை மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக தமிழ் பிரதேசங்களில் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறி பாதுகாப்புக்காக பொது இடங்களில் அகதிகளாக தஞ்சம் பெற்றிறிருந்தார்கள்.

Saththurukondan 2019 4 ஒருநாள் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்மட்டக்களப்பு நகருக்கு அண்மையிலுள்ள பிள்ளையாரடி, சத்துருகொண்டான், கொக்குவில் மற்றும் பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களில் ஒரு பகுதியினர்; பாதுகாப்பான
இடங்களில் தஞ்சம் பெற்றிருந்தாலும் அவர்களில் சிலர் தமது உடமைகளை பாதுகாப்பதற்காக தமது வீடுகளிலேயே தங்கியிருந்தனர்.

அவ்வாறு தங்கியிருந்தவர்கள் தான் 1990ம் ஆண்டு செப்டம்பர் 9ம் திகதி மாலை 5 – 6 மணியளவில் இராணுவ உயரதிகாரியின் விசாரனைக்கு எனக் கூறி அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தனது குடும்பத்தில் மாமா, மைத்துனி உட்பட 10 பேரை இழந்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் உட்பட பல்வேறு விசாரணைகளில் இராணும் தான் இதற்கு பொறுப்பு என சாட்சியமளித்தும் இதுவரையில் நீதி கிடைக்கவில்லை என சம்பவத்தில் தனது உறவுகளை இழந்தவர் தெரிவித்தார்.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும் எந்த அரசாங்கத்திடமும் தங்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை என தெரிவிக்கும் அவர் தெய்வத்தின் நீதி தங்களுக்கு கிடைக்கும் என்கின்றார்.

சத்துருக்கொண்டான் படுகொலையின் சாட்சி…..

Saththurukondan 2019 2 ஒருநாள் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்1990ஆம் ஆண்டு. புரட்டாதி 9ஆம் திகதி. வடகிழக்கே சோகத்தில் மூழ்கிய நாள். வந்தாருமூலைப் பல்கலைக்கழகத்தில் 158பேர் பலியெடுக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இந்த படுகொலை நடைபெற்றுள்ளது.

இலங்கை அரசின் திட்டமிட்ட அடுத்த இனப்படுகொலை கிழக்கை மட்டக்களப்பை உலுக்கியது. மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது சத்துருக்கொண்டான் பிரதேசம். ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி முதலிய கிராமங்களை உள்ளடக்கியது சத்துருக்கொண்டான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாலு மணியிருக்கும். ஊரை இராணுவம் சுற்றி வளைத்தது. 5.30மணிக்கு மணிக்கு வின்சன் டிப்போ தோட்ட இராணுவ முகாமில் கூட்டம் ஒன்று இருக்கிறது அனைவரும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று இராணுவச் சீருடை அணிந்த ஒருவர் ஊரில் வந்து மக்களுக்குக் கூறியுள்ளார். போகாது விட்டால் பிரச்சினை என நினைத்த மக்கள் இராணுவமுகாமிற்குச் சென்றனர். வயது முதிர்ந்தவர்களை லொறிகளில் ஏற்றிச்சென்றனர். கொண்டு செல்லப்பட்டவர்கள் ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் இருத்தப்பட்டனர்.

ஏழு மணியிருக்கும். அங்கிருந்தவர்களை சரிக்கத் தொடங்கியது சிங்கள இராணுவம். அவர்களுடன் முஸ்லிம் ஊர்காவல்படையும் இணைந்துகொண்டனர். வாளினால் வெட்டினர். கத்தியினால் குத்தினர். துப்பாக்கியினால் சுட்டனர். கிடங்கொன்றில் ரயரை எரித்து கொன்ற அதில் அப்பாவித் தமிழ் மக்களை வீசினர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் எவரும் வேறுபாடற்று அழித்து எரிக்கப்பட்டனர். பிரதேசமே ஓலத்தால் நிரம்பியது.

சிறுவர்களின் கைகளை பின்பக்கமாக கட்டினர். பின்னர் அவர்களை கத்தியால் குத்திக் கொன்று வீசினர். நிலவு வெளிச்சம் இருட்டில் கலந்திருந்தது. வெட்டி வீசப்பட்டவர்களின் குறை உயிருடன் துடிப்பவர்களைத் தேடித் தேடி எந்த இடத்தில் குத்தினால் உயிர் பிரியும் என பார்த்துப் பாரத்துக் குத்திக் கொன்றனர்.

இலங்கை இராணுவத்தினர். 47 குழந்தைகள். 85 பெண்கள். 28 முதியவர்கள். 186பேர் காவுகொள்ளப்பட்டனர். வின்சன் டிப்போ தோட்டத்தில் விடிய விடிய எரிந்த நெருப்பை எஞ்சியவர்கள் பார்த்தக்கொண்டிருந்தனர். ஒரு கிராமே கொலை செய்யப்பட்டது. ஒரு பிரதேசமே அழிந்தது.

படுகொலையில் தப்பியவரின் சாட்சியம்

எந்த தடயமும் எந்த ஆதாரங்களும் எந்த சாட்சிகளுமற்ற ரீதியில் இந்தப் இனப் படுகொலையை சிங்களப் படைகள் மேற்கொண்டனர். ஆனால் இந்தப் படுகொலையில் சிக்கி காயமுற்ற கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவர் அதிஸ்டவசமாக உயிர் தப்பினார். அவரே மனித குலம் நடுங்கும் இந்தப் படுகொலையின் ஒற்றைச் சாட்சியமானார். வெட்டி வீசப்பட்ட கிருஷ்ணகுமார் இராணுவத்தின் மரணக் குழியில் விழாமல் அதிஸ்டவசமாக வெளியில் விழுந்தார். வெட்டுக்காயங்களுடன் வேலிக் கரையாக வீசப்பட்ட கிருஸ்ணகுமார் மெல்ல மெல்ல தவழ்ந்து சென்று ஒரு பற்றையினுள் ஒளிந்துகொண்டார்.

மறுநாள் மதகுரு ஒருவரின் உதவியுடன் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனை கேள்வியுற்ற இராணுவப் புலனாய்வாளர்கள் அவரை வைத்தியசாலையிலிருந்து கடத்த முற்பட்டனர். குறித்த மதகுரு தனது கடும் பாதுகாப்பில் இரகசியமாக வைத்து சிகிச்சை அளித்து கிருஷ்ணகுமாரைக் காப்பாற்றினார். சத்துருக்கொண்டான் படுகொலை குறித்து கிருஷ்ணகுமார் சாட்சியங்களை வழங்கினார்.

கொலை நடைபெற்று சில நாட்கள் வின்சன் தோட்ட இராணுவ முகாமை நெருங்க முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். ஒரு வாரம் கடந்த நிலையிலையே, அந்த இராணுவமுகாமிற்குச் சென்று உங்களால் கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே என்று ஊர் மக்கள் கேட்கத் தொடங்கினார். இந்த நிலையில் கொல்லப்பட்ட மக்கள் குறித்து உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது. மனித உரிமை ஆணைக்குழு செஞ்சிலுவை சங்கம் போன்ற இராணுவத்தரப்பிடம் இந்தப் படுகெராலை குறித்து விசாரித்தது. எனினும் இராணுவத்தினர் அவ்வாறு தாம் செய்யவில்லை என்று மறுத்தனர்.

சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் வெளிவந்த உண்மைகள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கின. இதனை அடுத்து அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு நீதி விசாரணை நடத்துவதாக கூறி இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை நிறுவியது. ஓய்வுபெற்ற நீதிபதியான கே. பாலகிட்ணர் தலைமை வகித்த குறித்த விசாரணையின் முடிவில் நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.

இவ் இனப்படுகொலை சம்பவம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கொலம்பிய பல்கலைக்கழகம் இப் படுகொலை தொடர்பான விடயத்தையும் சாட்சிகளையும் ஆவணப்படுத்தியது.அத்துடன் அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர்களும் திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்த இப் படுகொலை குறித்து ஆராயந்துள்ளனர். இந்தப் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பப்பட்டபோதும் இலங்கை அரசு எதனையும் செய்துவிடவில்லை.

இவ் இனப் படுகொலையின் குற்றவாளிகளாக இதற்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளாக இம்முகாமில் கடமையாற்றிய கப்டன் காமினி வர்ணகுலசூரிய, கெரத் மற்றும் விஜயநாயக்க மேலும் இதற்கான கட்டளை அதிகாரி கேணல் பெசி பெனாண்டோ ஆகியோர் இனம் காணப்பட்டனர். எனினும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்மூலம் இலங்கை அரசு திட்டமிட்ட ரீதியில் தமிழ் மக்களை அழிக்க இந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டதா என்ற கேள்வியும் மனித உரிமைவாதிகளால் முன்வைக்கப்பட்டது.

இலங்கை அரச படைகள் நிகழ்த்தும் எந்தவொரு இனப்படுகொலை நடவடிக்கைக்கும் நீதி கிடைப்பதில்லை என்ற இலங்கையின் அநீதி வரலாற்றில் சத்துருக்கொண்டான் படுகொலையும் அடங்கிற்று. குழந்தைகள் என்றும் பாராமல், பெண்கள் என்றும் பாராமல் முதியவர்கள் என்றும் பாராமல் எம் சனங்கள் வெட்டி எரியும் நெருப்பில் வீசப்பட்டமைக்கு இலங்கையில் நீதி மறுக்கப்பட்டது. இவ்வாறு எம் சனம் படுகொலை செய்யப்படுவதே இலங்கை அரசின் நீதியா?

இன்றுடன் 29 வருடங்கள் நீதியற்றுக் கடந்துவிட்டன. முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலைக்கான நீதிகோரிய நமது போராட்டத்தில் சத்துருக்கொண்டான் இனப் படுகொலை தொடர்பிலும் கவனத்தை முன்வைப்போம். ஈழத்தின் கிழக்கை, மட்டு மண்ணை, ஈழத்தை, உலகத்தை அதிரப்பண்ணிய இந்தப் படுகொலைகளை தமிழ் இனம் என்றும் மறக்காது. என்றாவது ஒருநாள் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த ஆண்டும் நெய் விளக்கு ஏற்றுகிறோம்.

தற்கொலைத் தாக்குதலால் பேச்சுவார்த்தையை இரத்துச் செய்த அமெரிக்க அதிபர்

தற்கொலைப்படைத் தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அதிபர் மற்றும் தலிபான் தலைவர்களுடனான இரகசிய பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரத்துச் செய்தார்.

ட்ரம்ப் இன் தேர்தல் வாக்குறுதியில் ஆப்கானிஸ்தான் போரை முடிவிற்குக் கொண்டு வருவேன் என்று கூறியிருந்தார். பொறுப்பேற்ற போது 8000 படையினர் எண்ணிக்கையே அங்கு மீண்டும் இருக்கும் வகையில் மீதமுள்ளோரை அமெரிக்காவிற்கே திரும்ப அழைக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.

போர்க்களமாக 18 ஆண்டுகள் இருந்த ஆப்கானிஸ்தானில் தற்போது சுமார் 14,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர். தலிபான் அமைப்புடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி 20 வாரங்களில் 5.400 படையினரை திரும்பப் பெற்றுக் கொள்ள அமெரிக்கா ஒப்புக் கொண்டது.

2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதல்லிற்கு பொறுப்பேற்ற ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா அமைப்பிற்கு ஆதரவும், புகலிடமும் அளிப்பதாக அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து கொண்டிருந்த தலிபானுக்கு  எதிராக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றன.

தலிபான் கட்டுப்பாட்டில் இருந்த அரசிற்கு எதிராக  2001இல் ஆப்கானிஸ்தானில், அமெரிக்கா படையெடுப்பு நடத்திய பின் சர்வதேச நாடுகளின் இராணுவ வீரர்கள் மட்டும் சுமார் 3,500 பேர் அங்கு இறந்துள்ளனர். அவர்களில் 2,300 பேர் அமெரிக்கர்கள்.

1996 தொடக்கம் 2001 வரை தலிபான் ஆட்சியில் மதச் சட்டங்கள் கடுமையாக அமுலானதுடன், பெண்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர்.

2019 பெப்ரவரியில் வெளியான ஐ.நா. தரவுகளின்படி 32,000 இற்கும் மேலான குடிமக்களும் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவின் பிரவுண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி இதுவரை நடந்த சண்டைகளில் 58,000 ஆப்கான் காவல்படையினரும், 42,000 ஆயுதப் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் தலைவர்களுக்கிடையில் சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு அரசுகள் முனைப்புக் காட்டி வருகின்றன. அமெரிக்க அரசும் ஒருபுறம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் தலிபான் தலைவர்களுடன் தனித்தனியாக இரகசிய பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்பாடு செய்திருந்தார்.

ஆனால் கடந்த வியாழக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வீரர்களில் 11பேர் உடல்சிதறி கொல்லப்பட்டனர்.

இதன் எதிரொலியாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி மற்றும் தலிபான் தலைவர்களுடன் தனித்தனியாக நடத்தவிருந்த இரகசிய பேச்சுவார்த்தையை இரத்துச் செய்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் “அவர்கள் (தலிபான்கள்) முக்கியமான இந்த அமைதி பேச்சுவார்த்தை காலத்தில்கூட போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் அர்த்தமுள்ள எந்த உடன்படிக்கைக்கும் அவர்கள் தயாராக இல்லை என்பது புரிகின்றது.

எனவே சமாதான பேச்சுவார்த்தையை நான் உடனடியாக இரத்துச் செய்து விட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளராக தனஞ்ஜெயன் நியமனம்

கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள நாகராஜா தனஞ்ஜெயன் இன்று (09.09.2019) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளராகக் கடமையாற்றி வந்த இவர், கடந்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநரினால் அனுப்பி வைக்கப்பட்ட பதவி உயர்வுடன் கூடிய நியமனக் கடிதத்தின் ஊடாக மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளராக பதவி இன்று திருகோணமலை வரோதய நகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தில் கடமையினை பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 2012ஆம் ஆண்டில் இலங்கை நிர்வாக சேவையில் இணைந்து கொண்டதோடு 2013ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் செயலாளராகவும் தொடர்ந்து மாநகர பிரதி ஆணையாளராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியைப் பயின்றுவரும் இவர் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான விரிவுரைகளை மேற்கொண்டு வருவதுடன். இலங்கை நிர்வாக சேவை, கல்வி நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை போன்ற பல போட்டிப் பரீட்சைகளில் தமிழ் பேசும் மாணவர்களை அதிகம் உள்ளீர்க்க வேண்டும் எனும் நோக்கில் கருத்தரங்குகளையும், பயிற்சி வகுப்புகளையும் நாடு பூராக மேற்கொண்டு வருவதுடன், பல சமுகத் தொண்டுகளையும் ஆற்றி வருகின்றமையும்
குறிப்பிடத்தக்கதாகும்.

சிறைப்பிடிக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் விரைவில் விடுவிக்கப்படும் – ஈரான்

ஈரானால் சிறைப்பிடிக்கப்பட்ட இங்கிலாந்துக் கப்பல் விரைவில் விடுவிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

‘ஸ்டெனா ஸ்டெனா இம்பெரோ’ என்ற இங்கிலாந்துக் கப்பலை ஈரான் கடற்படை கடந்த ஜுலை மாதம் சிறைப்பிடித்தது. அந்தக் கப்பலில் இருந்த படைத் தளபதி மற்றும் ஊழியர்கள் மீது எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர்களை விடுவிப்பதாகவும், ஆனால் சட்டவிதிகளை மீறியதால் கப்பல் மட்டும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஈரான் அரசு ஞாயிற்றுக் கிழமை தெரிவித்த அறிக்கையில், இங்கிலாந்துக் கப்பல் ‘ஸ்டெனா இம்பெரோ’ வரும் நாட்களில் விடுவிக்கப்படும். இது தொடர்பான சட்ட நடைமுறைகள் முடிந்து விட்டன என்று தெரிவித்தது. இதனை ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸும்  உறுதிப்படுத்தினார்.

அணு ஆயுத சோதனையில் அமெரிக்கா – ஈரானிடையே மோதல் வலுத்து வரும் நிலையில், வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த ஜுலை 19ஆம் திகதி இங்கிலாந்து நாட்டுக் கொடியுடன் சௌதிக்கு ஹர்முஸ் ஜலசந்திப் பகுதியை் கடந்து சென்று கொண்டிருந்த ‘ஸ்டெனா இம்பெரோ’ என்ற எண்ணெய்க் கப்பலை ஈரான் அரசு சிறைப்பிடித்தது.

இந்தக் கப்பலில் இருந்த 23 பேரில் 18 பேர் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மகாராஷ்ரா, பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதர ஊழியர்கள் ரஷ்யா, பிலிப்பைன்ஸ், லாட்வியாவைச் சேர்ந்தவர்கள்.

சிறீலங்கா அரசின் தொலைக்காட்சி நிறுவனத்தை பாதுகாப்பு அமைச்சு கைப்பற்றியது

சிறீலங்கா அரசின் றூபவாகினி தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தை ஊடகத்துறை அமைச்சகத்திடம் இருந்து பாதுகாப்பு அமைச்சகம் பெறுப்பில் எடுத்துக்கதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று (09) வெளியிடப்பட்டுள்ளது. சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சராக அரச தலைவர் மைத்திரிபால சிறீசேனாவே செயற்படுவதால் தற்போது பிரதான தேசிய ஊடகம் அவர் வசம் சென்றுள்ளது.

இதற்கான அறிவித்தலை அரச தலைவர் செயலகம் விடுத்துள்ளது. முன்னர் இது ஊடகத்துறை அமைச்சர் றுவான் விஜயவர்த்தனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

சிறீலங்காவில் அரச தலைவர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேசிய ஊடகமான றுபவாகினி தென்னிலங்கையில் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு மிகவும் காத்திரமான பங்களிப்பை வழங்கவல்லது. எனவே அது ரணில் விக்கிரமசிங்காவின் பக்கம் செல்லாது தடுக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை பரிந்துரைத்து 1ஆண்டு ஆனாலும் விடுதலையில்லை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அதற்காக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருந்தது.

எனினும்,  இந்தத் தீர்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் ஆளுநர் அமைதி காத்து வருகின்றார். இந்த நிலையில் பேரறிவாளன், நளினி தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் கூட ஓராண்டு காலமாக தீர்மானம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில், 7பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டு ஆவதை குறிக்கும் வகையில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ருவிட்டரில் பதிவு ஒன்றினை செய்துள்ளார்.

அதில்,

அமைச்சரவை பரிந்துரைத்து 1 ஆண்டு.

நிரபராதி, விடுதலை செய்யணும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக் கொண்டும் தாமதமேனோ?

நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரே. 29 வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்.

என்னுயிர் இருக்கும் போதே கோப்பில் மை படட்டும்

என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் ருவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளார்.

இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

இந்திய – சிறிலங்கா கடற்படையினருக்கு இடையிலான SLINEX 2019 கூட்டு கடற்போர்ப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.

இரண்டு நாடுகளின் கடற்படைகளும் ஏழாவது ஆண்டாக இந்த கூட்டு கடற்போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.

விடுதலைப்புலிகளின்படை பலத்தை அழிப்பதற்கு உதவிய இந்தியா அதன் பின்னர் சிறீலங்கா படையினருடன் அதிகளவில் படைத்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இலக்கு 42 08-09-2019

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:

இலக்கு 42 08-09-2019

விடுதலைப் புலி பெண் போராளியின் படத்தால் கோத்தபயாவிற்கு வந்துள்ள புதிய சர்ச்சை

இலங்கையில் விடுதலைப் புலிகளின் சின்னத்தையோ, புலிகளின் சின்னம் உள்ள கொடியையோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படங்களையோ வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள்.  கடந்த வருடம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்தநாளைக் கொண்டாட முயற்சி செய்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் பொது நிகழ்வொன்றில் அதுவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோத்தபயா ராஜபக்ஸ கலந்து கொண்டிருந்த நிகழ்வில் விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட புகைப்படமொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டொன்றில் விடுதலைப் புலிகளின் சின்னத்துடனான தொப்பியை அணிந்துள்ள விடுதலைப் புலிகளின் பெண் போராளியின் படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த விடயமானது அரசியல் அவதானிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது இலங்கை மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வெவ்வேறு சட்டங்களா என அரசியல் அவதானிகள் வினவியுள்ளனர்.

இதனிடையே தேர்தல் காலம் என்பதால் இந்தப் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

நெஞ்சம் மறக்குமா,இல்லை இததான் மன்னிக்குமா ? சத்துருக்கொண்டான் படுகொலைகள் (ஒளிப்படங்கள் இணைப்பு)

கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09 திகதி இராணுவத்தினருடன் இணைந்து ஊர்க்காவல் படையினரால் மட்டக்களப்பு-சத்துருக்கொண்டான்,கொக்குவில், பிள்ளையாரடி கிராமங்களைச் சேர்ந்த கற்பினித் தாய்மார் பச்சிளம் குழந்தைகள்ääஆங்கவீனம் அடைந்தவர்கள் எனஇதில் 5 கைக்குழந்தைகள், 42 பத்து வயதுக்கு குறைவான சிறுவர்கள் 85,பெண்கள்,28 முதியவர்கள் உட்பட 186 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.IMG 0029 நெஞ்சம் மறக்குமா,இல்லை இததான் மன்னிக்குமா ? சத்துருக்கொண்டான் படுகொலைகள் (ஒளிப்படங்கள் இணைப்பு)

இதனை நினைவுகூரும் வகையில் வருடாந்த் குறித்த படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலான  இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள்ääஅரசியல்வாதிகள்,பொது அமைப்புகளின் பிரதிநிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.IMG 0015 நெஞ்சம் மறக்குமா,இல்லை இததான் மன்னிக்குமா ? சத்துருக்கொண்டான் படுகொலைகள் (ஒளிப்படங்கள் இணைப்பு)

இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான விசாரணைகள் நடைபெற்ற போதும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தவித தண்டனைகளும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.IMG 0043 e1568044306834 நெஞ்சம் மறக்குமா,இல்லை இததான் மன்னிக்குமா ? சத்துருக்கொண்டான் படுகொலைகள் (ஒளிப்படங்கள் இணைப்பு)